பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கண்தானம் ....

நாகர் கோவிலில் இருந்து 10 கி .மீ தூரத்துல இருக்குற ஒரு கிராமம் 'மாடதட்டுவிளை' .இந்த கிராமத்தோட சிறப்பு என்னனா இந்த கிரமாதுல இருக்குற எல்லாரும் 'கண் தானம்' செஞ்சு இருக்காங்களாம் .கண்தானம் மட்டும் இல்லாம உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் கூட செஞ்சு இருக்காங்களாம் .இந்த கிராமத்துல இருக்குற 'பாதர் டோமினிக் ' தான் இந்த மக்களுக்கு கண் தானம் பற்றிய விழிபுனர்வ ஏற்படுதினாராம். சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க நான்கரை கோடி கண் தேவை படுதாம்.அதுல இந்தியாவில் மட்டும் ஒன்றேகால் லட்சம் கண் தேவை படுஹ்டாமான கிடைக்கறது வெறும் 25000 கண்கள் தானம்.அதுலயும் 50% ஆரோக்கியம் இல்லாம இருக்காம்.

eyebank முதல் முதல்லா 1944-ல் 'the eye bank for right restoration '-னு அமெரிக்காவுல ஆரம்பிச்சதாம்.இந்தியாவில் 1945-ல் சென்னைல தான் முதல் eye bank Dr.Res முத்தையா என்பவர் ஆரம்பிச்சாராம்.1948-ல் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை சென்னைல முதல்முதல்லா வெற்றிகரமா நடந்துருக்கு .இப்போ இந்தியாவுல சுமார் 150-க்கும் அதிகமான eye bank இருக்காம்.

----இறந்த பிறகு எறிஞ்சு சாம்பலா போகறதுக்கு நம்ம கண்ணை தானமா குடுத்து அதன் மூலமா மத்தவங்க வாழ்க்கைக்கு வெளிச்சம் குடுக்கலாமே .கண் மட்டும் இல்லாம உடல் உறுப்பு தானமும் பண்றதான் மூலமா மத்தவங்க நாம இறந்தும் மத்தவங்களை வாழ வைப்போமே .நான் என் கண் மட்டும் உடல் உறுப்ப தானம் பண்ண எப்பவோ ..குடுத்துட்டேன் நீங்க ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக