பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அனிதா .....

இன்னம் 20 நிமிஷம் இருக்கு ..ஓகே  இந்த கேள்விக்கு இந்த  பாயிண்ட்ஸ்  எல்லாம் முக்கியம்..இந்த கேள்விக்கு இந்த இந்த பாயிண்ட்ஸ் முக்கியம்...ஓகே..இந்த கேள்விக்கு இந்த  எக்ஸ்சாம்பிள்  ரொம்ப முக்கியம்..சரி சரி போதும் ரிலாக்ஸ்-ஆ  இருக்கணும்...நீ நல்லா  எழுதிடுவ..கவலைபடாத ...என்று மனதுக்கும் சொல்லி கொண்டிய காலேஜ்க்குள் நுழைந்தாள் அனிதா..
 


அனிதாவிடம் அனிதாவிற்கு பிடித்ததும் அவள் நண்பர்களுக்கு அனிதாவிடம் பிடித்ததும் இந்த தன்னம்பிக்கை தான்..

ஹாய் ..ஹாய் அனிதா...எப்படி  ப்ரிப்பர் பண்ணி இருக்க?

ம்..நல்லா பண்ணி இருக்கேன் ..கண்டிப்பா நல்லா எழுதிடலாம்..ஆமா இந்த கேள்விக்கு இத  பத்தி இவ்ளோ  எழுதினா   போதும் தானே
-என்று படித்ததை பகிர்ந்து கொண்டார்கள்..
ஓகே ஓகே இன்னம் 10 நிமிஷம் இருக்கு,ரிலாக்ஸ்-ஆ இருப்போம் என்றாள் அனிதா..

அனிதாவின் கண்கள் அலைபாய்ந்தது ...அவள் கண்கள் சந்தோஷை தேடின..ஒரு  முனையில்    நண்பர்களுடன் அனிதா இருக்க மறு  முனையில் நண்பர்களுடன் சந்தோஷ்..அனிதா காலேஜ்குள் நுழைந்ததில்  இருந்து  சந்தோஷின் கண்கள் அனிதாவை விட்டு விலகவில்லை..
ஏன்டா வினோத் நீதான் எப்படியும் இன்னிக்குஎக்ஸாம்-இல் பாஸ் பண்ண போறது இல்ல இல்ல அப்பறம்  ஏன்  வேஸ்ட்-ஆ  வந்து எழுதுற என்று சந்தோஷ்  கேலி செய்ய  ..ஏன்டா அப்படி சொல்ற பாரு    பிட்டுலாம் கூட சரியா-ஆ வச்சுஇருக்கேன் இந்த எக்ஸாம்-கு என்றான் வினோத். அதான் உன் கவனம் எல்லாம் சிகப்பு சுடிதார்  மேல  இருக்கே,பாத்துடா பிட்ட பாக்காம சுடிதார் பாத்துகிட்டே எழுதிடாத  
என்றான் சந்தோஷ். 

கண்டுபிடிச்சுடீங்களா அதானே என்னடா உங்களுக்கு மூக்குல வேர்க்கலையேனு
பாத்தேன் என்றான்,வினோத்.  டேய் இது  தீபா தானே அப்போ மோனமாசம் எல்லாம் நம்ம ஜூனியர் ரம்யாவை பாத்துகிட்டு இருந்தியே என்றான் சந்தோஷ்.  
அது போனமாசம் என்றான் வினோத், அப்போ  கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் அம்மு ?என்றான் சுந்தர் ,அது அதுக்கு முன்னாடி மாசம் என்றான் வினோத் .
து....என்று கோரஸ் ஆகா துப்பி வினோத்தை  கேலி செய்தனர் நண்பர்கள்.

ஏன்டா துப்புறீங்க ? பின்ன இந்த சந்தோஷ் மாதிரி இருக்க சொல்றீங்களா ?  ஏன்டா சந்தோஷ் 4  வருஷமா நீ அனிதாவ  பாக்க அவ உன்ன பாக்க, அவ உன்ன பாக்க நீ அவள பாக்க நாங்க உங்க  ரெண்டுபேரயும் பாக்க..இப்படியே போகுதே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?? என்றான் வினோத் ..
ஏன்டா இப்படி ..பாத்துகிட்டே தான் இருக்கபோரீங்களா நேரா 60 -ஆம் கல்யாணம்னு
சொல்லு .கடைசி வருஷம் இன்னம் ஒரே ஒரு செமஸ்டர் தான் இருக்கு இந்த வருஷமாவது பேசுடா.. பேசினா தான்டா முடிவு தெரியும் என்றனர் , இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்ப ரணகளம் பண்ணுங்கடா என்றான் சந்தோஷ்.
தன் பள்ளி காலத்தில் இருந்து தோழியான லதாவை பார்த்ததும் என்ன லதா நல்லா  படிச்சு இருக்கியா ?என்றான் சந்தோஷ்..எங்க சந்தோஷ் எனக்கு இந்த எக்ஸாம் முடிஞ்சததும் கல்யாணம்  பண்ணி குடுத்துடணும்னு  அப்பா ஒரே பிடிவாதமா இருக்கார்..என்னால சரியா படிக்க முடியலை.. கொஞ்சம் பயமா இருக்கு என்றால் லதா. பொய் சொல்லாத பயத்துல படிக்கமுடியாம இல்ல சந்தோஷத்துல படிக்கமுடியாம அதுதானே உண்மை என்று சந்தோஷ் கேலி செய்ய ,போ சந்தோஷ் எப்போ பாரு உனக்கு  கிண்டல் தான் என்றாள் லதா.

அனிதா..இவ்ளோ நேரம் தண்ணில நின்னா ஜுரம் வரும் சீக்கிரம் குளி..நேரம் ஆச்சு பாரு என்று தீபாவின்  குரல்..நான்தான் குட்  கேர்ள்  இன்னைக்கு என்று மழலை குரலில் லதா ......
சந்தோஷ்...நேரம் ஆச்சு..எப்போ கிளம்பறது ..ஆபீஸ்க்கு நேரம்  ஆகுது பாரு..சீக்கிரம் சீக்கிரம் என்று வினோத்தின் குரல்...

சந்தோஷ் அவசரமாக கண் விழித்தான்..சந்தோஷ் நேரம் ஆச்சு எந்திரிங்க என்று தன்மனைவி நித்யா மறுபடியும் சொல்ல..குட்  மார்னிங்  அப்பா..நான் குட்  கேர்ள்  ..நீ தான்  பேட்  பாய்  இன்னைக்கு பாத்தியா நா தான்  முதல்ல  குளிச்சேன்  என்று சந்தோஷின் செல்ல மகள் அனிதா சொல்ல..

குட்  மார்னிங் டா ஹனி  செல்லம்...தோ அப்பா கிளம்பிடறேன் என்று சொல்லி கொண்டே அவசரமாக குளித்து கிளம்பினான்..ஆனால் அவன் நினைவு முழுவதும் அனிதாவை பற்றியே இருந்தது...

பின்னாளில் அனிதாவும் சந்தோஷும் ஒரே கம்பெனி-இல் வேலை செய்தனர்.அனிதா அவளது பெற்றோர்களிடம் சந்தோஷை பற்றி கூறினாள்..உனக்கு இன்னம் கொஞ்ச நாள் டைம் தரோம் .நல்ல யோசி..சந்தோஷ் நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லல..இருந்தாலும் ரெண்டு பேரும் கடைசி வரை இப்படியே இருப்பீங்களா ..நல்ல யோசிங்க.."என்றனர் அனிதாவின் பெற்றோர்கள்..

சந்தோஷின் வீட்டில்  சந்தோஷின் விருப்பபடி தான் அனைத்தும் நடக்கும்..

அப்பாகிட்ட நாம இன்னம் உறுதியா சொல்வோம் சந்தோஷ்  என்று அனிதா கூறினாள்..

கண்டிப்பா ...இந்த வீக் எண்டு நான் வரேன் உங்க வீட்டுக்கு என்றான் சந்தோஷ்..

ஆனால் அதற்குள்  எதிர் பாராத ஒரு விபத்து ,அனிதா சுய நினைவின்றி மருத்துவமனையில்...

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்த அனிதாவை பார்க்க   சந்தோஷ் ஓடினான் மருத்தவமனைக்கு..

"டாக்டர் அனிதா எப்படி இருக்கா டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ் "..

"ஓ !! அந்த ஆக்சிடென்ட்  கேஸ் ஆ பா"..

"ஆமா டாக்டர்"...

நிலைமை கொஞ்சம் கிரிடிகாலா தான் பா இருக்கு .நெறையா பிளட் லாஸ் ஆகிருக்கு.சுய நினவு இல்லாம தான் இருக்காங்க.எங்களால முடிஞ்சத முயற்சி பண்றோம் .கடவுள வேண்டிகோங்க "...

"நா பாக்கலாமா டாக்டர் "..

"தாராளமா ...பட் ரொம்ப டிஸ்ரப் பண்ணாதீங்க"...

சந்தோஷ் அனிதாவின் அருகில் ,உடல் முழுவதும் ஏக பட்ட டியூப்கள் பொருத்தப்பட்ட அனிதாவை பார்க்கவே சந்தோஷ் கலங்கினான்...

அனிதாவின் பெற்றோர்கள்  அங்கு வந்தனர். 

"சந்தோஷ் ...சந்தோஷ் என்னப்பா ஆச்சு அனிதாவுக்கு ...எப்படி பா இருக்கா .."

"அனிதாவுக்கு ஒன்னும் இல்ல ஆன்டி ,அங்கிள் அனிதா நல்லா ஆகிடுவா ...".

அனிதாவின் அம்மா ஐ.சி.யு உள்ளே ஓடினார்.

"ஐயோ அனிதா !! அம்மா வந்துருகேன்மா ,என்ன பாரு ,ஐயோ உன்ன இந்த நிலைமையிலையா பாக்கணும். எல்லோரும் நல்ல இருக்கனும்னு நினைப்பியே ..உனக்கு இப்படியா".கதறினாள் ...

அனிதாவை இந்த நிலைமையில் பார்க்க விருப்பம் இல்லாமல் அனிதாவின் தந்தை வெளியே சென்றார் ...கண்களில் நீர் பொங்க...அவரை பின் தொடர்தான் சந்தோஷ்...

"அங்கிள் இல்ல அங்கிள் ..அனிதாவுக்கு ஒன்னும் இல்ல குணம் ஆகிடுவா .அழாதீங்க அங்கிள்" என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்..

உள்ளே இருந்து அனிதாவின் தாய் ,சந்தோஷ் தம்பி ,சந்தோஷ் தம்பி அனிதா உன் பேர் சொல்றாப்பா என்று வெளியே ஓடிவர ...சந்தோஷ் உள்ளே ஓடினான் ..

அனிதாவின் உதடுகள் சந்தோஷின் பெயரை முனுமுனுத்தது ...

"அனி ! அனி ! நா சந்தோஷ் ...இங்க தான் மா இருக்கேன்..உனக்கு ஒன்னும் இல்ல ..உனக்கு எல்லாம் சரியாகிடும்.."

"சந்தோதோதோதோதோதோஷ்.."

"பாரு ,உன் அம்மா ,அப்பா வந்துருக்காங்க ...டாக்டர் உனக்கு குனமாகிடும்னு சொல்லி இருக்கார்.."

"சந்தோதோதோதோதோதோஷ்...."

"இதோ ,நான் இங்க தான் உன் பக்கத்துல தான் இருக்கேன் அனி ..." என்று அனிதாவின் கைகளை பற்றினான் ...

அனிதாவின் கண்கள் மெல்ல திறந்தன ...

"சந்தோதோதோஷ் ...அழாத சந்தோதோஷ் ...எனக்கு ஒன்னும் இல்லலல ...நான்ன்ன்ன் நல்லாலாலாலா ஆகிடுவேன் ..நாநாநாநா உன் கூட வாழனும் சந்தோதோதோதோஷ் ...நாநாநாநா சாககூடாது ...எனக்கு நீ வேணும்..."

"அனி ..கண்டிப்பா நடக்கும் அனி...நாம சந்தோஷமா வாழுவோம் ..."


"சந்தோதோதோதோதோஷ் ....எனக்கு பயமாமாமாமாமா இருக்கு ...எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு சந்தோதோதோதோஷ் ..உன் அப்பா அம்மா ,என் அப்பா அம்மா எல்லார் கூடவும் ,நம்ம நினைச்சமாதிரி சந்தோஷமா நாம வாழனும்ம்ம்ம்ம்ம் ..."

"கண்டிப்பா அனி ...நீ எந்திரிச்சு வருவ அனி ...நாம நினச்சது நடக்கும் அனி ...."

"சந்தோதோதோதோதோதோதோஷ் ....."

அனிதாவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை பெற்றன..அவளது கைகள் சந்தோஷின் கைகளில் இருந்து விடுபட்டன..அனிதாவின் இதயம் துடிக்க மறுத்தது ....


"அனி..................." அலறினான் சந்தோஷ் .....அனிதாவின் தாயும் தந்தையும் சேர்ந்து .......

"டாக்டர் ...டாக்டர் ...எதாவது பண்ணுங்க...இப்போ என்கிட்ட பேசினா டாக்டர் ..ப்ளீஸ் ஏதாவது செயுங்க..அவளுக்கு ஒன்னும் இருக்காது ..."

டாக்டர் நாடி துடிப்பையும் ,இதய  துடிப்பையும் பரிசோதித்தார் ...

"ஐயம் சாரி ..மிஸ்டர் . சந்தோஷ் .."

"இல்ல அங்கிள் ...இப்போ பேசினா அங்கிள் என்கிட்ட..என்னோட வாழனும்னு சொன்னா ஆன்டி..

அழாதீங்க ...நம்ம அனிதா எங்கயும்  போகல .. இப்போ எந்திரிப்பா பாருங்க ...."

"சந்தோஷ் ....மனச தேதிக்கப்பா ...நம்மள விட்டு போயிட்டாப்பா ..."

"அங்கிள் ..இல்ல அங்கிள்....இல்ல அங்கிள்...."

சந்தோஷ் வெளியே வந்தான் ....அவன் மனம் மட்டும் நம்ப மறுத்தது ....உண்மையை உணர்ந்து அழுது புலம்பினான்...

 கிட்டதட்ட ஒரு ஜடமாக மாறிய சந்தோஷை ஒரு வருடத்துக்கு பின்  பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.சந்தோஷின் நண்பர்கள் மூலமாக சந்தோஷிற்கு வேலையும் ஏற்பாடு செய்தனர் .மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மாறினான் சந்தோஷ்.  

5 வருடங்களுக்கு கழித்து மிகுந்த சிரமத்திற்கு பின் சந்தோஷை திருமணதிற்க்கு சம்மதிக்க வைத்தனர். 

நித்யாவிடம்  அனிதாவை பற்றி அனைத்தையும் கூறியே திருமணம் செய்தான் சந்தோஷ்.

"என்னால என் அனிதாவை மறக்க முடியாது ...அவ இன்னம் என் மனசுலையே தான் இருக்கா..உனக்கு இதனால ஏதும்...."

"நா மறக்க சொல்லலையே ...எனக்கு உங்கமேல வருத்தம் இல்ல..உங்க வலி எனக்கு புரியுது ." நித்யாவின் பளிச் பதில் நித்யாவின் மேல் அன்பை ஏற்படுத்தியது...

தன் மகளுக்கு அனிதா என்று பெயர் வைக்க ,கூறியதும் நித்யாதான்...அனிதாகிட்ட இருந்து பிரிச்ச இந்த கடவுள் என்னை அனாதையா விடாம  எனக்கு உன்னை குடுத்துருக்கார்,என்று
பழையநினைவுகளில்மூழ்கினான்,கண்கள் சாலையில் இருக்க,கைகள் ஸ்ட்ரியரிங் இல் இருக்க கால்கள் ஆக்சிலேட்டர்-ல் இருக்க சந்தோஷின் மனம் மட்டும் அனிதாவின்  நினைவுகளில் .......

சந்தோஷின் கண்களில் கண்ணீர்.....அனி..லவ் யு  அனி ,என்று மனதுக்குள் சொல்ல..ஒரு அழகிய கை தன்னை  தொடுவதை உணர்ந்து கால்கள் பிரேக் -ஐ  அழுத்த....லவ் யு அப்பா .பை பை ..என்று சந்தோஷின் கன்னத்தில் முத்தமிட்டு  பள்ளிக்குள்  ஓடினாள்  சந்தோஷின் மகள் அனிதா...கலங்கிய கண்களுடன் தன் மகளை பார்த்துக்கொண்டே இருந்தான் சந்தோஷ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக