பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 31 December 2013

பாடலின் வரிகள் - வலியே என் உயிர் வலியே - தாம் தூம்

படம் : தாம் தூம் 
பாடல் : வலியே என் உயிர் வலியே 
பாடியவர்கள் : பாம்மே ஜெயஸ்ரீ ,க்ரிஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : பா.விஜய் 

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

Monday, 30 December 2013

மார்பக புற்றுநோய்


ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளாலானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இந்த  மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்று சேர்க்குது . இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்று சேருது . சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

Saturday, 28 December 2013

படத்த பத்தி - மெமரீஸ் (மலையாளம் ) மற்றும் தூம் 3 (ஹிந்தி )

மெமரீஸ் (மலையாளம் ) மற்றும் தூம் 3 (ஹிந்தி )


&

   மெமரீஸ் (மலையாளம் ) -  இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.
தூம் 3 (ஹிந்தி ) - இது ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர் படம்.

இந்த படங்களை  பத்தி மேலும் படிக்க கீழ குடுத்துருக்குற லிங்க்கிற்கு போங்க

http://srivalaipakkam.blogspot.in/p/4.htmlஇதற்கு பெயர் தான் காதல் ...

ஆஞ்சலோ  மெரண்டினோ இவர் நியூயார்க்ல இருக்குற ஒரு போட்டோகிராஃபர் இவர் ஜெனிபரை காதலிச்சு கல்யாணம் பண்ணினார்.அவரோட காதல் வாழ்க்கையை பத்தி அவர் சொல்றப்போ "அது ஒரு அழகான காதல் ,ஜெனிபரை முதன்முதல்லா பாத்த அந்த அடுத்த நொடி தான் என்னோட வாழ்கையின் அற்புத நொடி .அப்போவே முடிவு பண்ணிட்டேன் ஜெனிபர் தான் என் உலகம்னு ,நான் ஜெனிபர் கிட்ட என் காதலை சொன்னப்போ ஜெனிபர் மனசுலையும் அதே எண்ணம் இருக்க எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது".


இதுல என்ன பெரிய ஆச்சர்யம்னு கேக்குறீங்களா?ஜெனிபர் -ஆஞ்சலோ திருமணம் முடிஞ்ச அஞ்சாவது மாசத்துலயே ஜெனிபர்க்கு மார்பகப்புற்றுநோய் இருக்குறது தெரியவந்துருக்கு.

Thursday, 26 December 2013

விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ

விகடனின் 2013 டாப் 10 மனிதர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் ...

குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!
                                     --விகடன்
வாழ்த்துக்கள் சார் ....


விகடனில் சிவகார்த்திகேயன் இன்டர்வியூ ...

Wednesday, 25 December 2013

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


இந்த கிறிஸ்தமஸ் நாளுல கிறிஸ்தமஸ் பத்தியான சில சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுப்போம்.

கால்லால செய்யப்பட்ட பைபிள் :

ஸ்காட்லாந்துல ,ருத்வெல்-ங்குற இடத்துல கால்லால செய்யப்பட்ட பைபிள் இருக்காம்.இதனோட மாதிரி வடிவ வார்ப்பு ,லண்டன்ல இருக்குற விட்டோரியா ஆல்பர்ட் அருங்காசியகத்துல இருக்காம்.இதனோட உயரம் 8 அடி.இதுல ஏசுபிரானோட வாழ்க்கை நிகழ்சிகள் செதுக்கப்பட்டு இருக்காம்.

முதல் கிறிஸ்துமஸ் கார்டு :

  1843-ம் வருஷம் முதல் முதல்ல இங்கிலாந்துல 'கிறிஸ்துமஸ் கார்டு' உருவாக்கினாங்கலாம் .ஜே.ஸி ஹார்ஸ்லி என்பவர் அவரோட நண்பர் சர்ஹென் கோல் என்பவருக்கு இதை தயார் செஞ்சு தந்தாராம்.

கிறிஸ்துமஸ் மரம்:

கி.பி எட்டாம் நூற்றாண்டு போல போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார் ஜெர்மனிக்கு இறை சேவை செய்றதுக்காக வந்தாராம். ஒரு கிறிஸ்தமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதிச்சு குழந்தை இயேசுவுக்கு அத ஒப்பு கொடுத்தாராம் அப்போ இருந்து பர் மரம் கிறிஸ்தமஸ் மரம் ஆகிடுச்சாம். அதுல இருந்து ஒவ்வொரு கிறிஸ்தமஸ் கொண்டாட்டத்தின் போதும் இந்த மரம் வீடுகளில் நடபட்டுச்சாம்.

இதுக்கு அப்பறம் ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடந்துச்சாம். 1841 ஆம் வருஷத்தில் ஆல்பர்ட் இங்கிலாந்து அரண்மனையில ஒரு கிறிஸ்தமஸ் மரத்த நட்டு அதுல பல பரிசு பொருளை கட்டி தொங்க விட்டாராம். மரத்த சுத்திலும் நெறைய மெழுகு வர்த்திய ஏத்தி வேசாராம். அப்பறமா இந்த பரிசு பொருள்கள எல்லாருக்கும் கொடுத்தாராம். இதுக்கு அப்பறம் தன கிறிஸ்தமஸ் மரம் இங்கிலாந்து முழுதும் வெக்குற வழக்கம் வந்துச்ச்சாம்.
இத்தாலில கிறிஸ்தமஸ் மரத்தோட பேரு ப்ரெஸ் பியோ.

Tuesday, 24 December 2013

கீரோபோ ..

உலகிலேயே முதன்முதலாகப் பேசும் ரோபோவை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.


விண்வெளிக்குப் பயணம் செய்யும் விஞ்ஞானிகளுக்குப் பேச்சுத்துணையாக இருக்கவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 2,452 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இறுதியில் இந்த ரோபோவுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர், ‘கீரோபோ’. கீரோபோ என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் கீபோ மற்றும் ரோபோ என்கிற வார்த்தைகளின் கூட்டு. கீபோ என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்.

34 செ.மீ. உயரம் மற்றும் 1 கிலோ எடையுள்ள இந்த ரோபோவால் மனிதனின் குரல் மற்றும் உணர்ச்சிகளைக் கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஜப்பானிய மொழியில் பேசுதல் போன்ற காரியங்களைச் செய்யமுடியும்.

இந்த ரோபோவுடன் உரையாடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் ரோபோவிடம் உன்னுடைய கனவு என்ன என்று கேட்டதற்கு, ‘மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் உலகத்தை உருவாக்குவதே தனது லட்சியம்’ என்று பதிலளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்கள் ஸ்மார்ட்போனை எப்படி பாக்கெட்டில் வைத்துச் செல்கிறார்களோ, அதே போல் சிறிய அளவிலான ரோபோவையும் வைத்துச் செல்லும்படி உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுகிறார், இந்த ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானி டக்காஹாஷி.

கீரோபோ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி விண்ணிற்குச் சென்று, தனது முதல் உரையாடலை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் வகாடாவுடன் தொடங்கவுள்ளது. 2014 டிசம்பர் வரை இது விண்வெளியில் இருக்கும்.

                                                                 --நன்றி வார இதழ் 

Monday, 23 December 2013

வல்க்ரோ ( Velcro )

வல்க்ரோ ( Velcro ) ,அதாவது நம்ம செருப்பு,bag இதுலலாம் ஒரு ஒட்டும் பட்டை இருக்கு இல்லையா அதுக்கு பேர் தான் இந்த வல்க்ரோ ...இத யார் கண்டுபிடிச்சாங்கனு தெரியுமா?
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால்-ங்குற பிரெஞ்ச் என்ஜினீயர் ,ஒரு சமயத்துல காட்டுப் பகுதியில நடந்துபோயிட்டு இருந்தப்போ அவரோட சாக்ஸுல காட்டுத் தாவரங்களோட விதைகளும் முட்களும் ஒட்டிக்குறத கவனிச்சுருக்கார்..

தாவரத்தோட பகுதிகளால எப்படி இப்படி ஒட்ட முடிஞ்சதுனு ஒரு லென்ஸ் மூலமா  அதப்பாத்தப்போ துணில ஒட்டிகுற வகைல அதுல சின்ன சின்ன முட்கள் இருக்குறதை கண்டுபிடிச்சுருக்கார்.இதே ஐடியா வச்சு ஒட்டுற பட்டையை உருவாக்க முடியுமான்னு யோசிச்சார்..இதுக்காக பல வருஷம் கடுமையா உழச்சார் ...

ரெண்டு துண்டு துணிகளை பயன்படுத்தி ஒன்னுல நூத்துக்கணக்கான சின்ன கொக்கிகள் இன்னோன்ணுல நூத்துக்கணக்கான சின்ன வளைவுகள் இருக்குறமாதிரி அமைச்சு அது ரெண்டையும் ஒன்னு சேத்து பாத்தப்போ அது அருமையா ஒட்டிக்குச்சு .இழுத்தா ரெண்டு துணியும் பிரிஞ்சது..

இந்த கண்டுபிடிப்புக்கு வல்க்ரோ ( Velcro )-னு பேர் வச்சு 1957-ல  டீ மெஸ்ட்ரால் அதுக்கு காப்பி ரைட் வாங்கிட்டார்..

இந்த  வல்க்ரோ  பலவகையான உடைகள்ல கூட பயன்படுத்தப்படுதுங்குறது கூடுதல் விஷயம்...

Saturday, 21 December 2013

பரம்பரை என்றால் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன?

வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும்,
"தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.
அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..

பரன் + பரை = பரம்பரை

Thursday, 19 December 2013

இந்திய ரயில்வே இணையதளம்


இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (www.railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.

Tuesday, 17 December 2013

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...
இது ரெண்டாவது தடவையா பப்ளிஷ் ஆகுது.சில வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதியது முதல் தடவையாக தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியானது .அப்பறம் எழுதல எதுவும் நான்.இப்போ மறுபடியும்எழுத ஆரம்பிச்சேன் .

இந்த ஆர்டிகல் நான் எழுதிபோட்டு ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதுன்னு நினைக்குறேன்.

இதை எழுதி போட்ட அடுத்த வாரத்துல இருந்து ஆர்வமா இந்த புக் வாங்கி நான் எழுதினது இருக்கானு பாப்பேன்.இல்லைனதும் கொஞ்சம் சோகமா சரின்னு போயிட்டேன்..

அடுத்த இதழை வாங்கினேன் அதே ஆர்வம். தேடினேன்.இல்ல.சோகமா போயிட்டேன்.

Monday, 16 December 2013

தஞ்சை கோவில்

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

Friday, 13 December 2013

இன்டெர்வியூ - என்ன வாழ்க்கங்க இது..

நீ போய் இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணிடுவ இல்ல ,கண்டிப்பா போறதானேனு ரெண்டு நாளா , நச்சரிச்சு இன்டெர்வியூ  அன்னைக்கு காலைல அலாரம் வச்சு எழுப்பிவிட்டு பல்லு தேச்சுவிட்டு குளிச்சுட்டு சீக்கிரம் கிளம்புனு சொல்லாத கொறையா கன்சல்டன்சிக்காரன் ஒரு பக்கம் ..

சரின்னு காலைல 7 மணிக்கே அவசர அவசரமா சாப்பிட்டும் சாப்டாமலேயும் இந்த பஸ் விட்டுட்டா அடுத்து 20 நிமிஷம் கழிச்சுத்தானே அடுத்த பஸ்னு ஓடினா ,ரோடு கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு எல்லாவித வாகனமும் கொஞ்சம் கூட கருணை காட்டாம போய்கிட்டே இருப்பாங்க ,இதோ கிராஸ் பண்ணிடலாம்னு நின்னுகிட்டு இருக்குறசமயம் 'கெலம்பிட்டியா'னு ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,கெலம்பிட்டேனு சொல்லி போன் வைக்குற நேரம் பாத்து என்னைக்கும் 10 நிமிஷம் லேட்டா வர நாம ஏற வேண்டிய பஸ் இன்னைக்கு 5 நிமிஷம் முன்னாடியே வந்து நிக்கும் ,இதுல ஏறினாதானே இந்த டிராஃபிக்ல ரெண்டு மணி நேரத்துக்குள்லையாவது அங்க போய் சேர முடியும்னு ரோட்ல வர வண்டிக்கெல்லாம் கைகாட்டி நிறுத்திட்டு ரோடு கிராஸ் பண்ணி ஆப்போசிட் ரோடு கிராஸ் பண்ணி ,கடைசி படிக்கெட்டுல தொத்திகிட்டு கொஞ்சம் உள்ள நகருங்க ப்ளீஸ்னு கெஞ்ச 'எங்க இருக்கனு' ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,அவனுக்குபதில் சொல்லிட்டு போன் வச்சா , பொம்பள புள்ள இவ்ளோ கூட்டத்துல கடைசி படிகெட்டுல இப்படி நிக்குறியேம்மா அடுத்த பஸ்ல வரக்கூடதானு ஒரு பெருசு சவுண்ட் குடுப்பாங்க ,

Thursday, 12 December 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ..!!!

நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்னைக்கு.தலைவரோட பிறந்தநாள்ல அவர் ரசிகர்களாகிய நமக்கு சொன்ன சில அறிவுரைகள் ,அவர் பத்தி அவர் கூட பழகினவங்க,அவர் பக்கத்துல இருந்து பாத்தவங்க சொன்ன விஷயங்கள் மேலும் அவர பத்தி சில சுவாரசியமான விஷயங்களை உங்க கூட ஷேர் பண்றேன்..
மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்
                                      -ரஜினிகாந்த்


காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகன் இந்து தமிழ் நாளிதழின் தீபாவளி மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரையிலிருந்து ..

Tuesday, 10 December 2013

இவர் - ஒரு அறிமுகம் - 2

ரவி - சிவகங்கைல கால்நடை மருத்துவரா வேலைபார்க்குற இவர் தன்னுடைய தொழிலுக்கு அடுத்து அதிகமா நேசிக்குறது புகைப்படம் எடுக்கும் கலையை. இவருடைய ஆர்வமும் விருப்பமும் இவருடைய ஒரு ஒரு புகைப்படத்துலையும் அழகா தெரியுது.

சேலத்தை சொந்த ஊராக கொண்ட டாக்டர்.ரவியின் புகைப்படங்களை பாத்து அசந்தே போனேன்..உங்களுக்கு எப்படி புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் வந்ததுன்னு கேட்டப்போ 'கால்நடை மருத்துவரா இருக்குறதுனால எனக்கு இயல்பாவே விலங்கினங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தது...எனக்கு டிராயிங் (வரைதல்) பண்றது ரொம்ப பிடிக்கும் இப்படி ஆரம்பிச்சதுதான் புகைப்படம் எடுக்குறதுல எனக்கு ஆர்வம் வரக்காரணம் ஆனது"னு சொன்னார்.

இயற்கையை புகைப்படம் எடுக்குறதுல அதிக ஆர்வம் காட்ற இவரோட புகைப்படங்களும் இயற்கை சம்மந்தமாக தான் அதிகமாக இருக்கு. அவ்வளவும் அழகா இருக்கு.

"இப்போ தான் புகைப்படம் எடுக்குற கலையை கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் ,இயற்கையோட எல்லா அழகையும் போட்டோ மூலமா காட்டணும்னு ஆசைப்படுறேன் ,இந்த புகைப்படத்துறைல எதாவது சாதிக்கணும்ங்குறது என்னுடைய ஆசை"னு சொல்ற டாக்டர் ரவியை மனதார வாழ்த்துவோம் .

டாக்டர்.ரவி-யின் சில 'கிளிக்'கள் இதோ  ....

Friday, 6 December 2013

பாடலின் வரிகள் - சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சற்று முன்பு
பாடியவர்:ரம்யா NSK
இசை:இளையராஜா
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே  பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னை தானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஓர்  நதி என
இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன்
தோள்கள் இல்லையே
தன்னந்தனி தனி காட்டில் எந்தன் காதல் வாட..

Thursday, 5 December 2013

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த

இன்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் இருக்கு அது என்னனு பாக்கலாம்  இப்போ ...ட்ரை பண்ணி பாருங்க..

1. முதல்ல start ->Run போய்ட்டு  regedit.exe -னு டைப் பண்ணி என்ட்டர் பண்ணுங்க..

மாற்றத்தை செய்றதுக்கு முன்னாடி பழைய செட்டிங்க்ஸ் -ஐ backup எடுத்துக்கணும் .அதுக்கு File -> Export குடுங்க..எங்க Save பண்றீங்கன்னு பாத்துக்கோங்க.


2. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM - >CurrentControlset - >Services ->Dnscache                        - >Parameters போங்க


3. வலது பக்கத்துல ரைட் கிளிக் பண்ணி DWORD செலக்ட் பண்ணுங்க
அதுல "Cache Hash Table Bucket size" - னு டைப்  பண்ணுங்க

Wednesday, 4 December 2013

படத்தை பற்றி - கோலியோன் கி ராஸ்லீலா - ராம் லீலா

கோலியோன் கி ராஸ்லீலா - ராம் லீலா  படத்தை பற்றி -"படத்த பத்தி "தலைப்பின் கீழ் படிக்க

இந்த  http://srivalaipakkam.blogspot.in/p/4.html லிங்க்கிற்கு போங்க .

Tuesday, 3 December 2013

இவர் - ஒரு அறிமுகம் - 1


தினேஷ்குமார் ராதாகிருஷ்ணன்.மன்னார்குடியை சேர்ந்த 27 வயது இளைஞன்.

நம்முடைய கல்விமுறைல கண்டிப்பா ஒரு மாற்றம் தேவைன்னு சொல்ற எதிர்பாக்குற பலபேர்ல இவரும் ஒருத்தர்.ஆனா அதோட மட்டும் இல்லாம அதற்கான முயற்சிலயும் இறங்கிருக்கார் இவர் .

'Propel Steps'-ங்குற இவரோட வலைப்பூ(propelsteps.wordpress.com) ரொம்ப பிரபலம்.அதுல  கல்விக்காக மட்டும் இல்லாம எல்லா விதமான தலைப்புகளின் கீழ் இவர் எழுதிக்கிட்டுவரார்.

Sunday, 1 December 2013

பீர் சாப்பிடுறது தப்பேயில்லை-அப்படியா!!உண்மை என்ன?


குடிக்காதனு சொன்னா , "பீர் சாப்பிடுறது தப்பேயில்லை" -இப்படி பலர்  பேர் சொல்வாங்க..இப்படி சொல்றவங்கலாம் தான் குடிக்குறதுக்கு ஒரு சாக்கு சொல்லி சமாளிக்குறதுக்காகதான்.

உண்மைய சொல்லனும்னா  விஸ்கி, ப்ராண்டி, ரம் போலவே பீர் என்பதும் ஒரு மதுவகை தான். 100 மில்லி Wineல் 4 முதல் 10 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி beerல் 6 முதல் 8 கிராம் வரை alcohol இருக்காம் . 100 மில்லி Whiskeyல் 31 கிராம் வரை alcohol இருக்காம் .

Wine, Beer, Whiskey ,Brandy என எல்லாவற்றிலும் alcohol இருக்காம் . ஒவ்வொன்றிலும் Alcohol-ன் அளவு (Concentration) மட்டுமே மாறுபடும் தவிர விஸ்கி, ப்ராண்டி போலவே பீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கானது சொல்றாங்க .

இப்படி நீங்க குடிக்குறதுக்கு அடுத்தவங்க மேல என்ன காரணம் சொல்லலாம்னு யோசிக்காம, பீர் தானே குடிச்சுட்டு போறாங்கனு விடாம தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணுங்க குடிக்குறவங்களுக்கு ..

Reference: Substance Use Disorder- Manual for Physicians, National Drug Dependence Treatment Centre, AIIMS.

Thanks - Dr .Karthik Balajee L 

Friday, 29 November 2013

பாடலின் வரிகள் - மன்னவனே என் மன்னவனே - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  மன்னவனே என் மன்னவனே
பாடியவர்கள் : சத்யஸ்ரீ  கோபாலன்,கோபால் ராவ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

Tuesday, 26 November 2013

பாடலின் வரிகள் - பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  பனங்கள்ளா விஷமுள்ளா
பாடியவர்கள் : தனுஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு  எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

Thursday, 21 November 2013

சினிமா இன்டஸ்ட்ரி இனி இப்படி மாறுமா ?


இரண்டாம் உலகம் படத்தப்பத்தியான விஷயங்கள் பாத்துக்கிட்டு/படிச்சுக்கிட்டு இருந்தப்போ காஃபி வித் DD ப்ரோக்ராம் பாக்க நேர்ந்தது..அதுல ஆர்யாவும் அனுஷ்காவும் இரண்டாம் உலகம் படத்தோட ஷூட்டிங் பத்தி சிலது  சொன்னாங்க...

ஜார்ஜியால 90 நாட்கள் ஷூட்டிங்  நடந்துருக்கு..அப்போ ஆர்யா சொன்ன விஷயம், அங்க டோட்லோன்ங்குற இடத்துல ஷூட்டிங் பண்ணினோம் .மலை மேல சின்ன சின்ன குடிசை மொத்தமா ஒரு 13 குடிசை இருக்கும் .ஒரு குடிசைக்கு 8 படுக்கை (பெட்) .ஒரு  குடிசைக்கு ஒரு காமன் பாத்ரூம் தான்னு சொன்னார்..எங்களுக்குள்ல ஹீரோ டைரக்டர்னு  எந்த பேதமும் இல்ல .யார் முன்னாடி வராங்களோ அவங்க தான் பாத்ரூம் முதல்ல யூஸ் பண்ணிகமுடியும்..இதுனால எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல..ஸ்போட்டிவா எடுத்துகிட்டோம்னு சொன்னார்..

Wednesday, 20 November 2013

டோல் ஃப்ரீ நம்பர்கள்

இந்தியாவிலுள்ள டோல் ஃப்ரீ நம்பர்கள்

Airlines

Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)
Spice Jet - (1800 180 3333)
Air India -- (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)

Banks

ABN AMRO - (1800 11 2224)
Canara Bank - (1800 44 6000)
Citibank - (1800 44 2265)
Corporation Bank - (1800 443 555)
Development Credit Bank - (1800 22 5769)
HDFC Bank - (1800 227 227)
ICICI Bank - (1800 333 499)
ICICI Bank NRI - (1800 22 4848)
IDBI Bank - (1800 11 6999)
Indian Bank - (1800 425 1400)
ING Vysya - (1800 44 9900)
Kotak Mahindra Bank - (1800 22 6022)
Lord Krishna Bank - (1800 11 2300)
Punjab National Bank - (1800 122 222)
State Bank of India - (1800 44 1955)
Syndicate Bank - (1800 44 6655)

Automobiles

Mahindra Scorpio - (1800 22 6006)

Monday, 18 November 2013

ஒரு சகாப்தத்தின் பிரியாவிடை -சச்சின்


கிரிக்கெட் விட்டு விடை பெறுவதுக்கு முன்னாடி சச்சின் அவர்கள் பேசின வார்த்தைகள்.தன் வாழ்க்கைல யார் யாருக்கு நன்றி சொல்லனும்னு நினச்சாரோ அத்தனை பேருக்கும் சொன்னார்.வேற என்ன சொல்ல நான் :((  .
அந்த ஃபேர்வெல்  ஸ்பீச்  இங்க ...அவரைப்பத்தி உலகத்துக்கே தெரியும் புதுசா என்னத்த சொல்ல...ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா இந்த படத்தை பாருங்க..


பிரபஞ்சம் எப்படி தோன்றியது?

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை, நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர்.
அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்', விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.

'காலமும்', 'வெளியும்' அந்த மாவெடிப்பிலிருந்துதான் உருவாகின என்று நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத உண்மையினை அந்த கோட்பாடு கூறியது.

galaxy_380உலகத்தை உலுக்கிய அந்த கோட்பாடு கூறியது என்னவென்று சுருங்கச் சொல்வதென்றால் 'from nothing the universe appeared' அதாவது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாகியது என்பதுதான். மேலும் குறிபிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஓர் அசுர வேகத்தில் நடந்த அந்த வெடிப்பிலிருந்து ஒரு சீரான, பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்ட பிரபஞ்சம் தோன்றியதாகவும் அக்கோட்பாடு கூறியது. ஒரு பெரும் வெடிப்பு எப்போதும் ஒரு சீரான விஞ்ஞானத்திற்கு கட்டப்பட்ட ஓர் அமைப்பை உண்டாக்குவது என்பது இயல்பன்று.

Saturday, 16 November 2013

படத்த பத்தி - பாண்டிய நாடு

பாண்டிய நாடு படத்தை பற்றி -படத்த பத்தி தலைப்பின் கீழ் படிக்க
இந்த லிங்க் http://srivalaipakkam.blogspot.in/p/4.html போங்க


டெங்கு காய்ச்சலை தடுக்கும் ஆயில் பந்து

டெங்கு காய்ச்சலை தடுக்கும்  ஆயில் பந்து .இத எப்படி தயாரிக்குறதுன்னு ஒரு வார இதழ்ல படிச்சப்போ அதை எல்லாருக்கும் தெரியபடுத்தனும்னு தோணிச்சு எனக்கு .அத இப்போ எப்படி தயாரிக்குறதுன்னு  பாப்போம் ..
இரு சக்கரம் இல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்ப்படுதக்கூடிய 'கழிவு ஆயில்' (இது எல்லா மெக்கானிக் கடைலயும் கிடைக்குமாம்) ,எத்தன பந்து தயாரிக்கப்போறோம்ங்குறதை பொருத்து ரெண்டு லிட்டர் இல்ல அஞ்சு லிட்டர் கழிவு ஆயில் வாங்கிக்கணும்.

ஒரு கர்ச்சீப் அளவுக்கு வெள்ளை நிறக்காட்டன் துணி எடுத்து அதுல மரத்தூள் (எல்லா மரக்கடைலையும் கிடைக்குமாம்) கொட்டி ,கிரிக்கெட் பந்து அளவுக்கு உருண்டையா கட்டிக்கனுமாம்.அந்த உருண்டைகளை கழிவு ஆயிலில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனுமாம்.

கைல உறையை மாட்டிகிட்டோ இல்ல கிடுக்கி பயன்படுத்தியோ இந்த உருண்டைகளை எடுத்து தண்ணீர் தேங்கி இருக்குற நீர்நிலைகளில மிதக்க விடனுமாம் ..

நல்ல ஐடியா ,தயவுசெஞ்சு நீங்க இருக்குற இடத்துல இப்படி தண்ணி தேங்கி இருந்தா இந்த வழியை ட்ரை பனி பாருங்க..

                                                      ---நன்றி வார இதழ் 

பாடலின் வரிகள் - ஏலே ஏலே தோஸ்துடா - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஏலே ஏலே தோஸ்துடா 
பாடியவர்கள் : க்ரிஷ் ,நரேஷ் அய்யர்  
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா  ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

சிடுமூஞ்சு வாத்தியாரு 
செல போல டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு 
எங்க ரேங்க்கு கார்ட் பாரு 
அதில் அப்பா சைன் அ தப்பா போட்டோமே

Friday, 15 November 2013

பாடலின் வரிகள் - என்னத்த சொல்ல - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னத்த சொல்ல
பாடியவர்கள் : கார்த்திக்,ஹரிசரண்,வேல்முருகன்,ரமேஷ் விநாயகம் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா ரொம்ப நேரம் இதே போய்ட்ருக்குதுடா
மச்சான் எடுத்து விடு 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல   

மயில் போல வருவா 
புது போத தருவா 
நீ பொண்ணோட சேந்தாலே 
மண்ணாவ மாமா 

ஆதார் அடையாள அட்டை


ஆதார் அட்டைக்கு இதுவரைக்கும் வின்னப்பிக்காதவங்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் :

 http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம். ​

விண்ணப்பிச்சவங்க விண்ணப்பத்தோட நிலையை தெரிஞ்சுக்க ​:

 https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

Thursday, 14 November 2013

Google + கவர் போட்டோ,ப்ரோஃபைல் போட்டோவின் புது வடிவம்

Google + தன்னோட வாடிக்கையாளர் பக்கத்துல , யூசரோட கவர் போட்டோவின் அளவை கம்மி செஞ்சு ,ப்ரோஃபைல் போட்டோ கவர் போட்டோ  ஒன்னா சேந்து  ப்ரோஃபைல் போட்டோவுக்கு கீழேயே யூசர் பேர் /யூசரோட பேஜ்ஜின் பேர்  வரமாதிரி இது ரெண்டும் ஒன்னு சேந்து  ஒரே அளவா தெரியுறமாதிரி மாத்தி  இருக்காங்க..பாக்க ரொம்ப அழகா இருக்கு..


பாடலின் வரிகள் - பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை

படம் :மூன்றாம் பிறை 
பாடல் :  பூங்காற்று புதிதானது 
பாடியவர் : K.J .ஜேசுதாஸ்  
இசை : இளையராஜா  
பாடலாசிரியர் :கண்ணதாசன் 


பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்

Wednesday, 13 November 2013

டிரைவ் பண்ணும் போது தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க ...


தயவு செஞ்சு டிரைவ் பண்ணும்போது செல்போன்ல பேசாதீங்க..

மெசேஜ் அனுப்பிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க ..

பின்னாடி உக்காந்து இருக்குறவங்கள திரும்பி திரும்பி பாத்து பேசிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க..

பாடலின் வரிகள் - ஏன் என்றால் - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்
பாடியவர் : ஹரிஹரன் ,மாளவிகா மனோஜ்,விஷ்ணு ப்ரியா   
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 
உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைப்பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கரை துடைப்பேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

இலை ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச்செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன்காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..

Tuesday, 12 November 2013

வாத்து மடையன்னு சொல்வியா இனி ?!?

வழக்கமாக துப்புத் துலக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்துவாங்க . நாய்களை குற்றவாளிகள் எளிதில் ஏமாத்திடுறாங்கனு  நாய்களைவிட மோப்ப சக்தியில் அதிக ஆற்றல் உள்ள வாத்துக்களை தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தி வராங்களாம்  சீனக் காவல்துறை.


சீனாவின் - ஜின்ஜியாங் மாகாணத்தின் கிராமப்புறப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் குற்றவாளிகளைத் துப்பறியவும், காவல் நிலையத்தைப் பாதுகாக்கவும் வாத்துக்களைப் பயன்படுத்துறாங்க .

காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதியிலிருந்து, இரு சக்கர வாகனம் ஒன்றை நள்ளிரவில் திருட முயன்ற திருடனை சத்தம் போட்டே காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அக்குற்றச் சம்பவத்தை ஒரு வாத்து தடுத்துள்ளதாகவும்சொல்றாங்களாம் இந்த காவலர்கள்.

பாடலின் வரிகள் - ஒத்தையிலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஒத்தையிலே 
பாடியவர்கள் : திப்பு,அபி ஜோத்புர்கர் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : கபிலன் 


ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

. அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ

Monday, 11 November 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்

ஃபேஸ்புக்கில் world wide tamil people என்ற ஒரு பக்கத்தை படித்தேன் .அதுல இருந்த இந்த நியூஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அத அப்டியே உங்க கிட்ட ஷேர் பண்றேன் பழந்தமிழரின் அளவை முறைகள்

முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

Sunday, 10 November 2013

பாடலின் வரிகள் - வான் எங்கும் நீ மின்ன - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : வான் எங்கும்  நீ மின்ன 
பாடியவர்கள் : ஆலப் ராஜ் ,ஹரிணி 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : மதன் கார்கி My love its all for you
The moon and the stars
Shine on you

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

Saturday, 9 November 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 8

விஜய் டிவியின் ஜோடி No 1 நிகழ்ச்சியில சிவகார்த்திகேயன் பங்கேற்பாளராவும் இருந்துருக்காரு நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்துருக்காரு வேற வேற சீசன்ல ..

அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த சீசன்ல ,பாவம் இவர அங்க இருந்த அத்தனைபேரும் ஒரு காமெடி பீஸ்ஸாவே நினச்சு கலாய்க்க ,அவர் எத பத்தியும் கவலைப்படாம யார் என்ன மாதிரி நடிக்க சொன்னாலும் பேச சொன்னாலும் எல்லாத்தையும் செஞ்சாரு அதனாலதான் இன்னைக்கு லச்சக்கணக்கான ரசிகர்களோட சப்போர்ட்டோட   ஒரு நல்ல நிலைமைக்கு வந்துருக்காரு.. அதுவும்   அவரோட காமெடிஸ் அந்த டைமிங் சென்ஸ் , அபாரம்....சான்ஸ்யே இல்ல...அந்த எபிசோட் இங்க ...
பாடலின் வரிகள் - இறகை போலே - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
பாடல்:இறகை போலே 
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார்


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அணியாயக்காதல் வந்தது
அடங்காத ஆசை தந்தது
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே
தொட்டுச்சென்றது

Thursday, 7 November 2013

என்ன ஒரு திறமை -60 நொடி ஆர் யு ரெடி - விஜய் டிவி

பொதுவா எல்லா சேன்னல்களும் ஒரு நிகழ்ச்சியின் ஒரு சீசன் முடிஞ்சதுக்கு அப்பறம் , அந்த சீசன்ல அந்த நிகழ்சியில நடந்த குலருபடிகள்,உளறல்கள்,தவறுகள் எல்லாத்தையும் தொகுத்து ஒரு காமெடி எபிசோடா ஒரு நாள் ஒளிபரப்புவாங்க இல்லையா..அப்படி '60 நொடி ஆர் யு ரெ'டி நிகழ்சியில் நடந்த குலருபடிகள்,உளறல்கள்,தவறுகள் எல்லாத்தையும் தொகுத்து ஒரு காமெடி எபிசோட்ல  'படவா கோபி ' சாரின் மிமிக்ரி பாத்து அசந்துபோயிட்டேன்..மனுஷன் என்னமா அசத்துறாரு..இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்ளோ திறமைகளானு ரசிச்ச அந்த பார்ட் இங்க வீடியோல பாருங்க..

0:37:07 to 0:49:00 வரைக்கும் 'படவா கோபி ' சாரின் அசத்தல் மிமிக்ரி ...
Wednesday, 6 November 2013

பாடலின் வரிகள் - என்னை சாய்தாலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னை சாய்தாலே
பாடியவர்கள் : ஹரிஹரன் ,ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 


என்னை சாய்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக..
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நகை பூத்தாளே
என்  பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேரத்தான் பார்த்தேன்

Tuesday, 5 November 2013

பாடலின் வரிகள் - கடல் நான் தான் - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : கடல் நான் தான்
பாடியவர்கள் : M.K பாலாஜி ,சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வாலிகடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கேட்டு தான்
கண்ணும்  தேடும் உன்னை


கொஞ்சம் சிரிங்க பாஸ் -விஜய் டிவி தீபாவளி கொண்டாட்டம்

விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்னு ஒரு ப்ரோக்ராம் தீபாவளி ஸ்பெஷலா டெலிகாஸ்ட் பண்ணினாங்க..அதுல 'அது இது எது 'நிகழ்ச்சியில் 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல பெர்ஃபாம் பண்றவங்க வந்து , விஜய் டிவியின் தொகுப்பாளர்களையே கிண்டல் செஞ்சு , போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சிரிக்க வச்சுட்ட்டாங்க..அந்த வீடியோ பாருங்க.........எல்லா கவலையும் மறந்து சிரிங்க...முழு நிகழ்ச்சியையும் பாக்க இந்த லிங்க் போங்க...
விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்

Monday, 4 November 2013

சிறுநீரக கற்கள்

இந்தியாவுல 100 % பேர்ல 1% பேர் இந்த பிரச்சனையால பாதிக்கப்படுறாங்க.வெப்பநிலை ,ஈரப்பதம் ரெண்டும் அதிகமாகுறதும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

* கோடைகாலத்துல இந்த பிரச்சனை 40 % அதிகமாகுது.வெப்பநிலை அதிகமாகுறத பொருத்து இந்த பிரச்சனையும் அதிகமாகுது.

*காரணம் உடல்ல நீர் சத்து கம்மியாகுறது.தண்ணீர் அதிகமா குடிக்காதது.

*இத தடுக்க என்ன பண்ணனும்.நிறையா தண்ணீர் குடிக்கணும்.
*எலுமிச்சை சாறு குடிக்கணும்.இதனால சிறுநீரகத்துல உருவாகும் கல்லானது 0.13 விகிதமா குறையுது.

*ஆக்ஸலேட் அதிகமா இருக்குற சோடா,ஐஸ் தேநீர்,சாக்லேட்,ஸ்டாபெரி,கொழுப்புச்சத்து அதிகமா இருக்குற பருப்புகள் இது எல்லாம் தவிர்க்கணும்.

*சாப்பாட்டுல அதிகமா உப்பு சேத்துக்கனும் .

*சிறுநீர்ல அமிலம்,காரம்,சிஸ்டைன் போன்றவை கட்டுப்பாடான அளவுல இருக்குறமாதிரி பாத்துக்கணும்.

* அதேமாதிரி இறைச்சி அளவா சாப்பிடனும்.ஏன்னா இந்த வகையான உணவுல ப்யூரின்கள் அப்டீங்குற இயற்க்கை பொருள் இருக்கு.இது வளர்சிதை மாற்றத்தை சிதச்சு யூரிக் அமிலம் ஏற்பட காரணம் ஆகுது.

*சாலட் அதிகமா சாப்பிடனும்.

Sunday, 3 November 2013

பாடலின் வரிகள் - சில்லென்ற ஒரு மழைத்துளி - ராஜா ராணி

படம் : ராஜா ராணி 
பாடல் : சில்லென்ற  ஒரு மழைத்துளி 
பாடியவர் : அல்ஃபோன்  ஜோசப் ,க்ளிண்டன் ,G.V  பிரகாஷ் 
இசை : G.V  பிரகாஷ் 
பாடலாசிரியர் : நா .முத்துக்குமார் 


சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைபோட்டு போலாமா

Saturday, 2 November 2013

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
-நீங்க பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம்..

-பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டா ,மறக்காம காலில் செருப்பு போட்டுக்கோங்க.

-ராக்கெட் வெளில விடணும், உங்க வீட்டுகுள்லையோ இல்ல அடுத்தவங்க வீட்டுக்குள்லையோலாம் விடக்கூடாது ..

-புஸ்வானம்,சங்குசக்கரம்,மத்தாப்புன்னு எத உபயோகிச்சாலும் அது எரிஞ்சு முடிச்சதும் ஓரமா தள்ளிவிட்ருங்க..

-தீபாவளியை சந்தோஷமா ,நீங்க பத்திரமா கொண்டாடுங்க..

Friday, 1 November 2013

பென் டிரைவின் வேகத்தை அதிகப்படுத்த !!

பென் டிரைவ் எனும் ரிமூவ்வபள் டிவைஸ்-ஐ கம்ப்யூட்டர்ல பயன்படுத்தும் போது சில நேரம் ரொம்ப மெதுவா இயங்கும் ..இந்த பென் டிரைவின் வேகத்தை நாம அதிகப்படுத்தலாம் .


1. கம்ப்யூட்டர்ல பென் டிரைவ் இன்செர்ட் பண்ணுங்க .MyComputer போங்க .

2.இப்போ பென் டிரைவ்க்கான டிரைவை வலது கிளிக் பண்ணுங்க.'Properties' செலக்ட் பண்ணுங்க.

3.ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதுல 'HARDWARE' -tab செலக்ட் பண்ணுங்க.

4.இப்போ 'Name' -ங்குறதுக்கு கீழ இருக்குற உங்க பென் டிரைவை செலக்ட் பண்ணுங்க .