பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மனதார பாராட்டுவோம்


கோவை மகேந்திரன்,இவர பத்தி என்ன சொல்ல போறான்னு பாக்குறீங்களா?இருக்குங்க..

தெருவுல அனாதையா விடப்பட்ட கொழந்தைங்க,பெரியவங்க,வயசானவங்கனு எத்தனையோ பேர நாம பாத்துருக்கோம் .அவங்களுக்கு சாப்பாடு வாங்கி தந்து,சாப்பிடவச்சு,அவங்க கிட்ட அவங்க யாரு என்னனு கேட்டு அவங்கள அவங்க வீட்ல பத்திரமா சேக்குறது,ஆதரவு இல்லாதவங்களா இருந்தா காப்பகத்துல சேக்குறது,மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தா ஹோச்பிட்டல்ல சேக்குறது,சேக்குறது மட்டும் இல்லாம அடிக்கடி அவங்கள போய் பாத்து எப்படி இருக்காங்கனு விசாரிக்குறது,ஹோச்பிடல்ல அநாதை பிணங்களை கேட்டு வாங்கி அவங்க உடலை மாலை மரியாதையோட அடக்கம் செய்றது,தீபாவளி பொங்கல் சமயத்துல அரவாணிகள்,உடல் ஊனமுற்றவர்கள்,வயசானவங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைக்குறது-னு இவ்வளவு நல்ல விஷயத்தையும் 'ஈர நெஞ்சம்'-னு அமைப்பை ஆரம்பிச்சு அதன் மூலமா இதை எல்லாம் செய்றாராம்.

இவரால குணம் அடைஞ்சவங்க ஏராளமானவங்கலாம் .இறந்து போய்ட்டதா நினச்சு 18 வருஷமா மகனை நினச்சு நினச்சு அழுதுகிட்டு இருந்த கிட்ட அவங்க பையனை கொண்டுபோய் நிறுத்தினா அந்த நிமிஷம் அவங்களுக்கு எப்படி இருக்கும்னு நினச்சு பாருங்களேன்,இந்த நல்ல விஷயத்தையும் இவரோட முயற்சி மூலமா செஞ்சு இருக்கார்.

இது மாதிரி எல்லாரும் செஞ்சுட மாட்டோம்.வேலை ,நேரமே இல்ல அது இதுன்னு காரணத்தை தேடுறவங்கதான் நம்மள்ள பலபேர் அதுதான் உண்மை . நம்மளால இது மாதிரி செய்ய முடியலைனாலும் atleast செய்றவங்களயாவது பாராட்டுவோம்

எல்லாரும் எதிர்பாக்குறது என்ன தெரியுமா ,ஒரு சின்ன பாராட்டு,சின்ன ஊக்குவிப்பு இவ்வளவு தான்ங்க.அது நம்மள இன்னும் பல சாதனைகளை செய்ய தூண்டும்.
சின்ன குழந்தைங்க ஒரு விஷயம் செஞ்சா சூப்பர்,நல்லா இருக்கே ,நல்லா பண்ணி இருக்கியே வெரி குட்-னு சொன்னா அந்த பாராட்டு அவங்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை குடுத்து அவங்களை அதுக்கு மேல இன்னம் பெட்டெரா பல விஷயம் செய்ய ஒரு தூண்டுகோளா அமையும் இல்லையா,அது மாதிரி தான் நமக்கு நல்லதுன்னு பட்டா மனச விட்டு பாராட்டனும்

திரு .மகேந்திரன் அவர்களையும் மனதார வாழ்த்துவோம்.பாராட்டுவோம்.

Salute Sir ..............உங்கள நினச்சு பெருமை படுறோம்..

அப்போதான் அவங்களால இன்னம் உற்சாகமா நிறைய செய்வாங்க.

நா நல்ல விஷயம்னா உடனே பாராட்டிடுவேன்க ...நீங்க....

நீங்களும் வாழ்த்தனும்னு நினச்சா இதோ அவரோட போன் நம்பர் :
9843344991 and 9600400120

                            -----நன்றி வார  இதழ் 

4 கருத்துகள்:

  1. திரு .மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஈரம் மகி அவர்களின் செய்யும் தொண்டு உள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு
  3. தொண்டு சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  4. தெருவுல அனாதையா விடப்பட்ட கொழந்தைங்க?

    அவர்களை வாழ்துவதைவிட ..அவர்களை பற்றி நினைத்தாலே போதும் ....அது தான் ஹாய் பவர் .

    வாழ்த்துவது என்பது ஒருமுறை தான் . ஆனால் நினைப்பு என்பது நாம் நெஞ்சத்தில் எப்போதும் நிலைக்க கூடிய ஒன்று .

    பதிலளிநீக்கு