பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Sunday, 7 April 2013

கரண்ட்டே இல்லாமல் நீர் இறைக்கலாம்!


தரங்கம்பாடியில்இருக்குற ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம்  சூரிய ஒளி மூலம் இயங்குற நீர் இறைக்கும் மோட்டார் பம்ப் -ஐ கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.

150 வாட்ஸ் திறனுள்ள சோலார் பேனல், 12 வாட்ஸ் திறனுள்ள கார்களில் பயன்படுத்தப்படும் சாதாரண வைப்பர் மோட்டார் மற்றும் 600 ரூபாய் விலையுள்ள பைப் ஆகியவற்றைக் கொண்டு இந்த சோலார் மோட்டார் பம்ப் உருவாக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை நேரடியாக மோட்டாருக்குக் கொடுத்து இயங்கச் செய்வதால் பேட்டரியின் அவசியமும் இல்லை என்பதால், இதன் அடக்க விலை 1,000 ரூபாயாக உள்ளது.

உப்பளங்கள் நிறைந்த வேதாரண்யம் பகுதியில், பெரிய உப்பள உரிமையாளர்கள் மோட்டார் பம்ப் கொண்டு நீர் இறைப்பார்கள். மோட்டார் பம்ப் வாங்க வசதி இல்லாதவர்கள், கைகளால்தான் நீரை இறைக்க வேண்டும். இதனால், சில நேரங்களில் அவர்களுக்கு தோல் உரிந்து ரத்தம் கூட வரும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே விலை குறைந்த நீர் இறைக்கும் மோட்டார் பம்ப்பை உருவாக்கினோம். உப்பளத் தொழிலாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற மோட்டார் பம்ப்பில் சில மாற்றங்கள் செய்து விவசாயிகளுக்கு கொடுத்தோம்" என்கிறார், கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜெயராஜ்.

உப்பளத் தொழில் பெரும்பாலும் கோடை காலத்தில் நடப்பதால், இந்த சோலார் மோட்டார் பம்ப் பயன்படுத்துவதில் பிரச்சினை இருக்காது. நாற்றாங்காலுக்கு நீர் இறைத்தல்,தொட்டியில் இருக்கும் தண்ணீரை நிலத்திற்குப் பாய்ச்சுதல் போன்ற விவாசய வேலைகளைச் செய்ய இது உதவும். இந்தப் பம்ப்பில் இணைக்கப்பட்டுள்ள கருவி, சரியான அளவில் பயிர்களுக்கு நீர் வழங்கும் வகையில் சுழன்று கொண்டு இருக்கும். இதனால், நீர் வீணாவது தடுக்கப்படுகின்றது.10 அடி ஆழம் வரை உள்ள நீரை எடுக்க, இந்த மோட்டார் பம்ப்பை பயன்படுத்த முடியும்.

இந்த மோட்டார் பம்ப், 10 அடி ஆழம் வரை உள்ள நீரை இறைக்கக் கூடியது. சோலார் பேனல் மற்றும் மோட்டார் திறனை அதிகப் படுத்தும் போது, இன்னும் அதிக ஆழத்தில் உள்ள நீரை இறைக்க முடியும். நீர் இறைக்கும் திறனுக்கேற்ப விலை கூடும்" என்கிறார், ஹைடெக் நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுந்தரம்.

தொடர்புக்கு95666 68066
                                              -- -நன்றி வார இதழ் 

5 comments:

 1. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

  பலருக்கும் உதவக்கூடும்... பகிர்கிறேன்...

  ReplyDelete
 2. Good and useful post. Will it be useful for domestic house hold?

  ReplyDelete
 3. நல்ல உபயோகமான தகவல் . நன்றி

  ReplyDelete
 4. நல்லதகவல்கள்பகிர்வுக்கும்தகவலுக்கும்நன்றி

  ReplyDelete
 5. தங்கள் வருகைக்கும் எனது வலைபக்கத்தில் முதல் முறையாக தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

  ReplyDelete