பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 22 May 2013

அட்டகாகமான அவசியமான ‘ஃபைட்பேக்’ மென்பொருள்


ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது அவருக்காக உதவி கேட்டு, அவரது நண்பர்களுக்குத் தகவல் அனுப்புது ஒரு மென்பொருள்.
இந்த ‘ஃபைட்பேக்’ மென்பொருள் 2011ல் கண்டுபிடிக்கப்பட்டதாம் . அப்போ இது கட்டணச் சேவையாக இருந்தது. டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறைக்குப் பிறகு, டெக் மகிந்திரா நிறுவனம் இதனை இலவச சேவையாக மாற்றி இருக்கிறது. இந்த மென்பொருள் ஜிபிஆர்எஸ் (GPRS), எஸ்ஒஎஸ் விரைவு எச்சரிக்கை செய்தி (SOS Alert Message)ஜிபிஎஸ் (GPS) மேப்ஸ், இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் முதலியவற்றைப் பயன்படுத்தி, ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாத்த உதவுதாம்.

ஃபைட்பேக், ஜிபிஎஸ்ஸை பயன்படுத்தி பயனாளர் இருக்குற இடத்தை தெரிஞ்சுக்க முடியுதாம் . பின்னர் ஃபைட்பேக் பட்டனை அழுத்தியதும் எச்சரிக்கைத் தகவலை, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்குற நண்பர்களோட செல்பேசிகளுக்கு, பயனாளர் இருக்கும் இடத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்புதாம் . மின்னஞ்சல், ஃபேஸ்புக் முகவரி பதிவு செய்திருந்தால் அதுக்கும் இந்த தகவலை அனுப்புதாம் .

1) ஃபைட்பேக் மென்பொருளை பயன்படுத்துவது ரொம்ப சுலபம் .


2) www.fightbackmobile.com என்ற நிரலிக்குச் சென்று, 'SIGN UP' மூலமாக கணக்கொன்றை உருவாக்கிக்கணும். இதற்குத் தேவை, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி (E-mail ID)மட்டுமே.

3) பின் பயனாளர் பெயர், கடவுச்சொல் கொண்டு உள்ளே செல்லவும் 'My Settings'ல், உங்கள் நண்பர் அல்லது உறவினர் மொபைல் எண், மின்னஞ்சல், ஃபேஸ்புக் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யணும் .

4) 'Download Mobile App' என்ற பட்டனை அழுத்தி, உங்கள் மொபைல் எண், மொபைல் மாடல் தேர்வு செய்து, மீண்டும் 'Download Mobile App'’ என்னும் பட்டனை அழுத்த, உங்கள் செல்பேசிக்கு, நீங்கள் பதிவு செய்ததை உறுதி செய்யும் வகையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுமாம் .

5) அந்தக் குறுஞ்செய்தியைக்கொண்டு உங்கள் செல்பேசியில் ஃபைட்பேக் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளலாம்(download ).

6) பின்பு, அதைத் திறந்து, 'FB' பட்டனை அழுத்த, விரைவுச் செய்தி நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம் .


இந்த மென்பொருளை இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த முடியும்னு சொல்றாங்க .

www.fightbackmobile.com நிரலியில் இந்த மொபைல் சேவையை, நோக்கியா, பிளாக்பெர்ரி, ஆண்டிராய்டு, ஸ்மார்ட் போன்களில் தற்போது பயன்படுத்த முடிகிறது.: ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இது தற்போது உபயோகத்தில் இருக்காம்.

இத உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..நம்மளால, முடிஞ்சவங்களுக்கு முடிஞ்சவகையில பாதுகாப்புக்கு வழியாவது சொல்வோம்.


                                 ---நன்றி வார இதழ் 

9 comments:

 1. very useful info. keep it up....

  ReplyDelete
  Replies
  1. Thank u..and plz share this post to ur friends.

   Delete
 2. நல்ல தகவல்... விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபால் அண்ணே .தவலுக்கு நன்றி சொல்றதோட இல்லாம இத ஷேர் பண்ணுங்க..நம்மளால, முடிஞ்சவங்களுக்கு முடிஞ்சவகையில பாதுகாப்புக்கு வழியாவது சொல்வோம்

   Delete
 3. நல்ல தகவல் .

  ReplyDelete
 4. நல்ல தகவல் . நான் ஷேர் செய்துள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஷேர் செய்ததற்க்கு .

   Delete
 5. Replies
  1. Anytime ..
   Thanks for ur visit and ur comment
   ....
   and Ravi , my name is Sri

   Delete