பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 3 மே, 2013

நமக்குள்ள இருக்குற இசைஞானியை வெளில கொண்டுவாங்கப்பா !!!!

 நாம் எழுதி மெட்டமைக்குற பாடலுக்கு, இலவசமாக இசையமைச்சு தருதாம் உஜம் இணையதளம் .

புகழ் பெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களான பீட்டர் கோர்ஜஸ், பரேல் வில்லியம்ஸ் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரால் தொடங்கப்பட்டதுதான் இந்த உஜம், இணைய உலகின் முன்னணி இசையமைப்புத் தளம். ஒரு பாடல் உருவாகத் தேவையான அத்தனை கம்போசிங் வசதிகளும் இதில் இருக்காம் .
இந்தத் தளத்தில் இலவசப் பயனாளர் கணக்கு ஒன்றை உருவாக்கிக்கணும் . இந்த இணையதளத்தைப் பயன்படுத்த Adobe flash player என்ற மென்பொருள் கணினியில்கண்டிப்பா இருக்கணும் . Create song என்பதை கிளிக் செஞ்சு , பயனாளர் கணக்கு பாஸ்வேர்டு கொடுத்து உள்ள நுழையனும் .

 இப்போது மியூசிக் ஸ்டூடியோ திரையில் தோன்றும். சிவப்பு நிற இணைப்பை கிளிக் செஞ்சு கணினி மைக்ரோபோனில் பாடத் துவங்கனும் .அப்லோட் செஞ்சும் பாடல்களை ஸ்டூடியோவில் சேர்க்கலாம். 30 நிமிடங்கள்வரை பாடலாம். பாடி முடித்ததும், பின்னணி இசை சேர்ப்பதற்கான முகப்பு வரும். தாள இசைக்கருவிகள் (Percussion Instruments) நரம்பு இசைக்கருவிகள் (Stringed Instruments), காற்று இசைக் கருவிகள் (Brass Instruments), விசைப்பலகை இசைக்கருவிகள் (Keyboard Instruments) என வகைவகையான இசைக்கருவிகள் இங்கு இருக்கு . வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இந்தியாவின் தொன்மையான இசைக்கருவிகளும் இதில் கிடைக்குது . மேலும், ஹிப் ஹாப், பேபி லவ், டெக்னோ என்பது மாதிரியான 50க்கும் மேற்பட்ட இசைக் கோப்புகள்இருக்கு . பிடித்தமானவற்றை உங்கள் பாடலுடன் சேர்த்துக்கொள்ளலாம். உஜம் வல்லுநர்கள் தொகுத்த படிம அச்சு எனப்படும் டெம்ப்லட் (template) ஒன்றை தேர்ந்தெடுத்துக்கோங்க .

 ஒவ்வொரு இசைக்கோப்புடனும் உங்கள் பாடல் எப்படி கோர்வையாகியிருக்கிறது என்பதை உடனுக்குடன் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

 உங்கள் குரலை உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த மாதிரியாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில்இருக்கு . இதில் பாட, ‘நல்ல குரல் வளம்’ இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இறுதியாக Custom Style, Customize Style செலக்ட் செய்து, டெம்போவை சரியான அளவில்கொடுக்கணும் .

 இசை சேர்ப்பு முடிந்து விட்டது என்றால், எம்.பி.3 கோப்பு வடிவில் சேமித்துக் கொள்ளலாம். நீங்கள் இயற்றிய பாடலை, உஜம் தளத்திலேயே வெளியிடலாம். முக நூல், யூ டியூப் ஆகியவற்றிலும் பகிர்ந்துகொள்ளலாம். 

மேலும், இந்த ஸ்டூடியோவை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி இசையமைப்பது என்பதைப் பற்றிய ஒரு அறிமுக வீடியோவும்இருக்கு . அதனால், அடிப்படை இசை நுட்பம் தெரியாதவர்களும்கூட, இந்த இசையமைப்புத் தளத்தை எளிதாகப் பயன்படுத்தமுடியும் .

 இணையதள முகவரி: www.ujam.com

1 கருத்து: