பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Saturday, 4 May 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1

மே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க.

எனக்கு சிவகார்த்திகேயனை விஜய் டிவி-ல் காம்பியர் பண்ணும்போது இருந்து பிடிக்கும்.அவரோட அந்த டைமிங் சென்ஸ்-காகத்தான் 'அது இது அது' நிகழ்ச்சி பாக்கவே ஆரம்பிச்சேன்.இப்போ அது எனக்கு பிடிச்ச ப்ரோக்ராம்ல ஒன்னு.(அதே மாதிரி சந்தானமும் பிடிக்கும் )

சரி, என்ன சொல்ல வந்தேனா ,சிவாகார்த்திகேயன் இந்த படத்துல நெஜமாவே நல்லா நடிச்சுருக்கார்.ரொம்ப மெச்சூர்டா தெரியுறார்.படம் சீக்கிரம் பாத்துடனும்னு ஒரு ஆவலை ஏற்படுத்திடுச்சு இந்த நிகழ்ச்சி.

எனக்கு தனுஷும் பிடிக்கும் ப்ரியா ஆனந்தும்( வாமனன் ,இங்கிலீஷ் விங்க்லிஷ் ,180,சில தெலுகு படத்துல பாத்துருக்கேன் )அவங்களையும் பிடிக்கும், அனிருத் இசை .ஸோ ,ஒரு நல்ல காம்பினேஷன் இருக்கு இந்த படத்துல.எதிர்பாப்போம்.

இப்போ அந்த நிகழ்ச்சி பாருங்க.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -10-13 - மே -13-13)

போனவாரம் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சில  கலந்துகிட்டாரு சிவா.அவருக்கான கேள்விகள் ஈஸியா தான் இருந்தது.ஆனா ஒரு ஒரு கேள்விக்கும் ஆவர் பதில் சொன்ன விதம் ,சிரிச்சு சிரிச்சு போதுன்னு ஆகிடுச்சு..எல்லாராலயும் எல்லாரையும் சிரிக்க வச்சுட முடியாது.அதுவும் மத்தவங்கள புண்படுத்தாம ,அதே நேரம் டயமிங்கும் மிஸ் ஆகாம சிரிக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்.ஆனா இவருக்கு இந்த விதம் ஈஸியா வருது.இது சிவகார்த்திகேயனோட ஸ்பெஷாலிட்டி.'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - எபிசோட் 1 'இங்க உங்களுக்கு

மே -10-13 எபிசோட்  :
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி :(மே -13-13)


சிவா அவர்கள்  மேலும் மேலும் பெரிய நிலைக்கு வருவதற்கு வாழ்த்துக்கள் 

4 comments:

 1. கடந்த நாலைந்து மாதமாகத்தான் யூ டியுப் மூலமாக பல நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்று திடீரென்று உள்ளே வந்து ஒரு மணி நேரமாக எனக்கு பிடித்த பல நிகழ்ச்சிகளை உங்கள் தளம் பார்க்க உதவியது. மீண்டும் வருவேன்.

  ReplyDelete
  Replies
  1. Thanks sir..It's my pleasure.

   Delete
 2. Hi Sri. Even I like Siva Karthikeyan more :-)

  ReplyDelete
 3. Hello sir,your side is very useful,

  ReplyDelete