பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 23 மே, 2013

சூப்பர் MLA ...

படிக்குற பிள்ளைங்களுக்கு எக்ஸாம் ,செமஸ்டர் மார்க்ஸ்,கிரேட்ஸ்னு வச்சு அவங்க படிப்பை கணிக்குறோம் .ஐ.டி துறைல வேலை பாக்குறவங்களுக்கு 'எம்ப்ளாயி ஆஃப் தி இயர்' அப்படீன்னு அவார்ட் குடுத்து பெருமை படுத்துறோம் நம்ம அரசியல்வாதிகளுக்கு இப்படி ஏதாவது எக்ஸாம் வச்சு அதுக்கு மார்க்கும் குடுத்தா எப்படி இருக்கும் .அத தான் 'புதிய தலைமுறை' தொலைகாட்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க ரெண்டு நாளா.

மக்கள் கிட்ட கருத்து கேட்குற அடிப்படையில நம்ம அத்தனை MLA-களுக்கும் மதிப்பெண் குடுத்துருக்காங்க இவங்க.
எல்லா MLA -க்களையும் 'தொகுதி', 'ஆட்சி'னு வகைப்படுத்தி,

1.வாக்குறுதியை நிறைவேற்றுதல் - இதுக்கு 20 மார்க்

2.தொகுதிக்கு வருதல் -இதுக்கு 10 மார்க்
3.அணுக முடிவதில் (அதாவது அந்த MLA-வை எவ்ளோ எளிமையா அணுகலாம்) -இதுக்கு 20 மார்க்

4.இவரின் நிறை குறைகள் - இதுக்கு 10 மார்க்

5.இவரை பற்றிய மக்களின் அபிப்ராயம் -இதுக்கு 40 மார்க்

மொத்தமா 100 மார்க்

இந்த வகையில பிரிச்சு மக்கள் கிட்ட கருது கேட்டு அவங்ககிட்டயே மார்க் கேட்டு அத்தனை MLA -க்களையும் வரிசை படுத்தி இருக்காங்க.நம்ம ஸ்கூல் ரேங்க் மாதிரி தான் இது.

இது ஒரு நல்ல முயற்சிங்குறது என்னோடைய கருத்து.மக்கள் கிட்ட நேரடியா கேட்டு இந்த அரசியல்வாதிகளை தரப்படுதுறாங்க.மக்களுக்கு நெஜமாவே நல்லது செய்யணும்னு நினைக்குறவங்க தன்னை மேலும் மேலும் வளர்த்துக்கலாம் இதன் மூலமா..இதுவரை எதுவும் செய்யாதவங்க இனி செய்ய ஆரம்பிக்கலாம்.ஏன் ,கட்சியின் தலைவர்களே கூட பதவியில் இருக்குற தன்னோட தொண்டனின் திறமை,உழைப்பு ,அற்பணிப்பு,இவரை பற்றிய மக்களின் எண்ணம்/கருத்து என்னனு நேரடியா இதன் மூலமா தெரிஞ்சுக்கலாம் .
ரெண்டு நாலா இதுவரைக்கும் முதல் 50 இடத்துல  21-ஆவது இடம் வரைக்கும் வகை படுத்தி இருக்காங்க.மற்ற இடங்கள் நாளை இரவு ஒளிபரப்பாகும் .பாக்காதவங்க பாருங்க.முதல் இடத்தை பிடிச்ச அந்த MLA யாருன்னு பாப்போம்.

அருமையான இந்த அணுகுமுறைக்காக புதிய தலைமுறைக்கு ஒரு' சபாஷ் '...

2 கருத்துகள்: