பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Thursday, 13 June 2013

ஐ.பி முகவரி அப்படீனா ?!!

ஐ.பி முகவரி இத பத்தி பல பேருக்கு தெரிஞ்சு இருக்கும் சில பேருக்கு தெரியாம இருக்கும் .தெரியாதவங்களுக்கு இப்போ ஒரு சின்ன இன்ட்ரோ ..

நாம அனுப்புற ஒரு மெயில் எப்படி பல மைல் தூரத்துல ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருந்தாலும் நாம அனுப்புறவங்களுக்கு சரியா போய் சேருது?

இதுக்கு காரணம் இந்த ஐ.பி முகவரி(internet  protocal  address )தான்.இப்போ ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் -ஐ இணைக்குறோம்னு வையுங்க , ஒரு ஒரு கம்ப்யூட்டரும் மத்த கம்ப்யூட்டர்-ஐ அடையாளம் காண இருக்குறது தான் இந்த ஐ.பி முகவரி.இப்போ நமக்கு எப்படி பெயர் இருக்கு அது மாதிரிதான் .பிரிண்டர் ,ஐபாட் ,டேப்லட் எல்லாத்துக்குமே இப்படி ஐ.பி முகவரி இருக்கும்.

இன்டர்நெட் இணைப்பு வாங்குற நிறுவனம் நமக்கு இத செட் பண்ணி தருவாங்க.

சைபர் க்ரைம் அமைப்புகள் இந்த ஐ.பி முகவரி வச்சு தான் தீவிரவாதி,இன்டர்நெட் தப்பா யூஸ் பண்றவங்க எல்லாரையும் கண்டுபிடிக்குறது..

இப்போ ,நாம கூட நமக்கு வரக்கூடிய ஃபேக் ஈமெயில் எல்லாம் கண்டுபிடிக்க முடியும்.இப்போ ,ஜிமெயில் யூஸ் பண்றோம்னு வையுங்க , நமக்கு வந்த மெயில்-ஐ ஓபன் பண்ணி அதுல ரைட் சைடு -ல மேல ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கும் ,அத கிளிக் பண்ணி , அதுல  காட்டக் கூடிய ஆப்ஷன்ல
'ஷோ ஒரிஜினல் '- கிளிக் பண்ணினா ,இன்னொரு பேஜ் ஓபன் ஆகும் அதுல ரிசீவ்டு ஃப்ரம் -ல தெரியறதுதான் அனுப்பினவங்களோட ஐ.பி முகவரி.இந்த ஐ.பி முகவரியை பயன்படுத்தி இதுக்கான இணைய தளத்துல பார்த்து யாரு எங்க இருந்து அனுப்பினாங்கனு கண்டுபிடிக்கலாம்.இல்ல போலீஸ்ல சொல்லி கண்டுபிடிக்க சொல்லலாம்.

ஐ.பி முகவரியை கண்டுபிடிக்க உதவுற இணைய தளங்கள்

www.cqcounter.com/whois
www.iplocation.net/index.php
www.ip-tracker.org/

கூகிள்ல what is my ip -னு  டைப் பண்ணினா நம்ம ஐ.பி முகவரி காட்டப்படும்.

இல்ல
www.cqcounter.com/whois/what_is_my_ip.php
www.whatismyipaddress.com   -ல் பார்க்கலாம்.


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

1 comment:

  1. பலரும் அறிய நல்ல விளக்கம்... நன்றி...

    ReplyDelete