பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Saturday, 15 June 2013

பிடிச்ச விளம்பரம் ...

விளம்பரங்கள் ... ரெண்டு , மூணு நிமிஷத்துக்குள்ல சொல்லவந்ததை/அந்த பொருள் பற்றியதை தெளிவா,அழகா,நல்லா அதே சமயம் பாக்குறவங்க மனசுல பதியுற விதத்துல ஒரு விளம்பரத்தை எடுக்குறது சாதாரண விஷயம் இல்ல.ஒரு படத்தை எடுக்குறது விட கஷ்டமான விஷயம் .சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ஒரு ஒரு விளம்பரம் கண்டிப்பா பிடிக்கும் .
அப்படி எனக்கு பிடிச்ச விளம்பரம்ங்கள்

 1.தன் மகன் ஜெயிக்கணும்னு ஒரு ஒரு நிமிஷமும் அவனுக்காக அவனோடவே இருந்து அவனுக்கு பயிற்சி குடுத்து அவனோட எண்ணத்தை உயரவைக்கும் ஒரு அம்மாவின் அழகான முயற்சி



2.போன்ல எதிர்முனைல பேசுறவங்க குரல் கேட்டதும் ,தன் குழந்தைகிட்ட அம்மா இங்க இல்லைனு சொல்லுனு ஜாடைகாட்டுறதை பாத்த குழந்தை 'அம்மா சொல்ல சொன்னாங்க இங்க இல்லைனு ' வெகுளியா சொல்லும் , ப்யூர் சுகர் விளம்பரம் .ஆண்ட்ரியா நடிச்ச அந்த விளம்பரம் இப்போ அந்த ஒளிபரப்புறது இல்ல

3.தன்னோட உறவினர்களை காட்டி இது மாதிரி உங்க வீட்ல இருக்காங்களா ?கேட்டு நட்பின் நல்லதோர் ஆரம்பம்னு அழகா சொல்லி முடியும் ,காட்பெரி டயரி மில்க் விளம்பரம்


4.தன்னை பெண் பார்க்க வந்தவரை கிண்டலா தன் அக்காகிட்ட ஸ்லாங் பாரு லண்டன் ,நியூயார்க் ,ஸ்டைவிங்... ஸ்டைவிங் னு சொல்ல ,உனக்கு பிடிச்சுருக்கில்ல-னு அக்கா கேட்டதும் சின்ன வெக்க சிரிப்போடு அந்த சித் இல்லனு சொல்லும் அழகான காட்பெரி டயரி மில்க் விளம்பரம்



5. ஏர்டெல் ஒரு ரூபாயில் வீடியோ பாருங்க விளம்பரம்..ஒரு  சின்ன பொண்ணு விளையாட்டுல ஜெயிக்க ஹனுமனை வேண்டிக்குறா உடனே எதி அணியில இருந்த பொண்ணு தோக்குது ,அத பாத்த எதி அணி பொண்ணு "அவர் ஹனுமான் தானே ...னு சொல்லி பார்வையாலையே கேட்டு அதுக்கு எதிர் அணி பொண்ணு கொஞ்சம் தயங்கி தயங்கி மொபைல் குடுக்க ,இந்த பொண்ணு வேண்டிக்க ,இவளோட எதிர் அணி பொண்ணு தோக்குது"..இந்த  இரண்டு க்யூட் குழந்தைகளின் முகத்துல காட்டுற ரியாக்க்ஷன் அவ்ளோ அழகு..


6.ஏர்டெல் ஒரு ரூபாயில் வீடியோ பாருங்க விளம்பரம்..ரெண்டுபேர் சைகைலையே பேசிக்குற அந்த விளம்பரம்...ஹையோ !!!! அந்த குட்டி பெண்ணின் ஆக்டிங் ,சொல்ல வார்த்தையே இல்ல....


No comments:

Post a Comment