பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Monday, 15 July 2013

வாழை இலை விருந்து

அந்த காலத்துல ,நம்ம முன்னோர்கள் வாழை இலையிலதான் சாப்பாடு போட்டு சாப்பிடுவாங்களாம் .காலம் மாற மாற இப்போ வித விதமான தட்டுக்கு மாறிட்டோம் .எதவாது விசேஷ நாளுல மட்டும் தான் வாழை இலையில பரிமாருறோம் .அதுவும் நகரத்துல சொல்லவே வேணாம்.
ஆனா இந்த வாழை இலைகளோட பயன்கள நாம முழுசா அனுபவிக்கமுடியல.அப்படி என்ன பயன் வாழை இலையில சாபிட்ரதாலன்னு கேக்குறீங்களா?


* வாழை இலையில சாப்பிடறதால 'இளநரை' வராம,முடி ரொம்ப நாளுக்கு கருப்பாவே இருக்கும்.

* சாப்பாட வாழை இலையில பேக்கிங் செய்றதால சாப்பாடு கெடாம,மனமா இருக்கும்

* தீக்காயம் ஏற்பட்டவங்கள வாழை இலை மேல படுக்கவைக்கனும்.அப்போதான் அந்த சூட்டோட தாக்கம் கம்மியாகும்.

*பச்சக்குழந்தைங்க உடம்புல நல்லெண்ணெய் பூசி ,சூரியஒளி  பட்றமாதிரி வாழை இலையில படுக்க வச்சா ,சூரிய ஒளியில இருந்து கிடைக்குற விட்டமின் டி ,வாழை இலையோட குளுமை  சேர்ந்து குழந்தைக்கு சரும நோய் வராம பாதுகாக்கும்.

* சோரியாசிஸ்,தோல் அழற்சி ,கொப்புளங்கள் இருந்தா உடம்புல அந்த  இடத்துல வாழை இலையை கட்டி வச்சா சீக்கிரம் குணமாகும் .

மொத்தத்துல வாழை இலையில சாப்பிட்டா நோய் இல்லாம வாழலாம்.

3 comments:

  1. இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்...!

    ReplyDelete
  2. அருமையான தகவல்

    ReplyDelete