பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Monday, 26 August 2013

இலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை

பிறவியிலேயே காது கேளாமையால் ,வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை ..


முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்ய பூந்தமல்லி சாலையில் உள்ள கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை மருத்துவமனை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .

இந்த திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பிக்கிண்றவர்கள் பிறப்புச் சான்றிதழ் ,குடும்ப அடையாள அட்டை மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டஅட்டை முதலியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

6 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பரிசோதனைகள் அறுவை சிகிச்சைக்கு பின் பேச்சு பயிற்சி இலவசமாக செய்யப்படும்.

கே கே ஆர் காது மூக்கு தொண்டை மருத்துவமனை ,எண்.274,பூந்தமல்லி நெடுஞ்சசாலை ,கீல்பாக்கம்.. சென்னை 10. போன் - 044 26411444 /26411987 /9840350079 /9094540055

Email - kkrenthospital@gmail.com
Website - kkrenthospital.org

1 comment: