பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Saturday, 14 September 2013

பாடலின் வரிகள் - போகாதே - தீபாவளி

படம் : தீபாவளி 
பாடல்:போகாதே 
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா 
இசை:யுவன் ஷங்கர் ராஜா 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார் போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடிபோகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம்
அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே
உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன்….
உயிரோடு பார்த்திருப்பேன்….

போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை
நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம்
அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தாய் வானாய்
ஏமாற்றம் தாங்களையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...

போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

No comments:

Post a Comment