பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

லெண்டிங் லைப்ரரி


RENTMYTEXT.IN என்ற இணையதளம் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை ஆன்லைன் மூலம் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வழங்கும் ஒரே நிறுவனமும் இதுதான்.அதன் நிறுவனர் விசேஷ் ஜெயாவந்த்

இந்த இணையதளம்  மூலம் ஒவ்வொரு செமஸ்டருக்கும் தேவைப்படும் புத்தகங்களை மாணவர்கள் RENTMYTEXT.IN ‡ தளத்தில் LOG ON/IN செய்து, தேவையான புத்தகங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக ஒரு மாணவர் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் வாடகைக்குப் பெறலாம். இந்தியாவிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அறிஞர்கள் எழுதிய புத்தங்கங்கள் இந்தத் தளத்தில் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாடகையாக அந்தந்தப் புத்தகத்தின் அடக்க விலையை செலுத்த வேண்டும். வாடகைத் தொகையை மாணவர்கள் புத்தகங்கள் டெலிவரியாகும் போது செலுத்தும் வசதியும் (CASH ON DELIVERY)இதிலுள்ளது. புத்தகங்கள் ஆர்டர் செய்த 3 முதல் 5 தினங்களுக்குள் மாணவர்களுக்கு கிடைத்து விடுமென்பதும் குறிப்பிடத்தக்கது.


புத்தகங்களை வாடகைக்குப் பெறும் மாணவர்கள், அதன் தேவை முடிந்த பின்னர் மீண்டும் புத்தகங்களைப் பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகையில் 60 சதவிகிதத் தொகையை (DDயாக) மீண்டும் வழங்குகிறார்கள் . தொடர்ச்சியாக புத்தகங்களை வாடகைக்குப் பெறும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையாக 70 சதவிகிதத் தொகையை மீண்டும் அளிக்கிக்கிறார்கள் .

தற்போது பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை மட்டும் வாடகைக்கு வழங்குவதாக சொல்லும் இவர்கள் விரைவில் மருத்துவம் மற்றும் சட்டப் படிப்புகளுக்கான புத்தகங்களையும் வாடகைக்கு வழங்க உள்ளார்கள் . இச்சேவையை தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் செய்து வரும் இவர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்திலும் சேவையை தொடங்கவுள்ளார்கள் .

விருப்பமுள்ளவர்கள் +919243786600 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புத்தகங்களை வாடகைக்குப் பெறலாம்.


2 கருத்துகள்:

  1. + Delivery charges apply, at actuals..40 சதவீதம் + தபால் செலவு சேர்க்கும்போது லாபகரமாக தெரியவில்லையே ?. நம்ம ஊரில் பழைய புத்தகக்கடைகளில் பல ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்கள் தானே? இங்கே online என்பது மட்டுமே புதுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாப நோக்கத்தோட இதை செய்யலனு இவங்க சொல்றாங்க கண்ணன் சார்

      நீக்கு