பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 28 செப்டம்பர், 2013

சொல்லுங்க பாஸ் சொல்லுங்க ​...

பொண்ணுங்க எந்த வயசுல யார எதிர்த்து பேசினாலும் ​அது அப்பாவா/அண்ணனா/தம்பியா/புருஷனா இல்ல சொந்த பந்தங்களையா இருந்தாலும் அதுக்கு ஒரு தடை போடுறீங்களே...


10 வயசுக்குள்ள எதிர்த்து பேசினா முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள எதிர்த்து பேசுறியானு கேக்குறீங்க..

18 வயசுல எதிர்த்து பேசினா எல்லாம் வயசு கோளாறு....ரெண்டும் கெட்டான் வயசு ..இந்த வயசு இப்படிதான் பேச சொல்லும்னு திட்றீங்க..

25 வயசுல எதிர்த்து பேசினா எல்லாம் படிச்சுட்டு வேலைக்கு போய் சம்பாதிக்குற திமிர் அதான் எதிர்த்து பேசுறன்னு திட்றீங்க..

30+ வயசுல எதிர்த்து பேசினா குழந்தைங்கல வச்சுக்கிட்டு யார் சப்போர்ட்டும் இல்லாம உன்னால இருக்கமுடியுமா ? அவங்களுக்காகவாவது அனுசரிச்சு பேசுன்னு திட்றீங்க..

பெத்தப்புள்ளைங்க வேலைக்கு போய் சம்பாதிக்கும் போதாவது நாங்க உங்கள எதிர்த்து பேசினா , என்ன பசங்க சம்பாதிக்குறாங்கனு திமிர்ல பேசுறியானு திட்றீங்க ...

பேரன் பேத்திகளை பாத்ததுக்கு அப்பறமாவது உங்கள எதிர்த்து பேசினா பேரப் புள்ளைகளோட விளையாடறத விட்டுட்டு இந்த வயசுல பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுறன்னு திட்றீங்க..

அப்போ எப்போதான் நாங்க உங்கள எதிர்த்து பேசுறது...

​சொல்லுங்க பாஸ் சொல்லுங்க ​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக