பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இன்ஸ்டன்ட் மணியார்டர்

பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை ‘ஐ.எம்.ஓ.’ (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் .


ஐ.எம்.ஓ. உள்ள தபால் அலுவலகத்தின் ஐ.எம்.ஓ கவுண்டரில் டி.ஆர்.பி-1 (To Remit Payment) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த ரசீதைப் பிரித்து அதிலிருக்கும் 16 இலக்க எண்ணை யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு SMS மூலமா அல்லது தொலைபேசிமூலமா அல்லது மெயில் மூலமாகவோ அனுப்பிடனும்.



ஐ.எம்.ஓ.வின் 16 இலக்க ரகசிய எண் கிடைக்கப்பெற்றதும் குறிப்பிடப்பட்ட தபால்நிலையத்தில் டி.எம்.பி-1 (To Make Payement) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பணம் பெறுபவரின் புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, தபால் அலுவலகத்தின் அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, பள்ளி/கல்லூரி அடையாள அட்டை இதுல எதாவது ஒரு அடையாள அட்டையின் நகல் ஒன்றை இணைத்துக் கொடுக்கணும். இம்முறையில் 1000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் பெற்றுக் கொள்ளலாம்.


10,000 ரூபாய் வரைக்கும் 100 ரூபாய் கட்டணமும், 10,001 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை 110 ரூபாய் கட்டணமும், 30,001 ரூபாய் முதல் 50,000 வரை 120 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.

பணம் பெறுபவருக்கு ஏதேனும் வாழ்த்தோ, செய்தியோ சொல்லனும்னா தபால் துறை வைத்திருக்கும் நிலையான செய்திகளில் (Standardised Messages) இருக்குறதுல தேவையானதைக் குறிப்பிடலாம். இதற்கு கட்டணம் இல்லை. பிறந்தநாள் வாழ்த்து என்றால் 05, பொங்கல் வாழ்த்து என்றால் 09 என்று ஒவ்வொரு வாழ்த்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை பணம் அனுப்பும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். இதுபோல மொத்தம் 33 செய்திகள்இருக்கு .

இந்தியாவின் 22 மாநிலங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த உடனடி மணியார்டர் சேவை தமிழகத்தில் 1,458 தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. கணினி மயமாக்கப்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் இச்சேவையைப் பெறலாம்.

இந்தச் சேவை குறித்த மேலதிக விவரங்களை www.indiapost.gov.in/IMOS.aspx என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

4 கருத்துகள்:

  1. நல்ல விஷயம்தான்.ஆனா 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை 50 ரூபாய் கட்டணம் வச்சிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. ஆன்லைன் மூலமாக அனுப்பும் வசதி இருந்தால் மேலும் நேரம் மிச்சமாகும்.போஸ்ட் ஆபீசில் ரொம்ப வேகமாக வேலை செய்வார்களே?!!!!

    பதிலளிநீக்கு