பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 1 October 2013

கொசுவை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போமா?

-கொசு அதிகமா கடிச்சா நம்ம வீட்ல இருக்குறவங்க கொசுவுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம் அதான் கடிக்குதுன்னு கிண்டல் பண்ணுவாங்க..உண்மையில கொசு நம்ம கடிக்க காரணம் நாம வெளியிடற கார்பன்டை ஆக்ஸைடுனால அது கவரப்பட்டு நம்மளநோக்கி வருது...


-கொசுவுக்கு பல் கிடையாது..அதனால கொசு கடிக்காது..அதன் தலைப்பகுதியில ஊசி போன்ற கூர்மையான குழல் இருக்கு இதை மூலமா இது மூலமா தான் நம்ம உடம்புல குத்தி ரத்தத்தை உறிஞ்சுது..

-ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறஞ்சிடக்கூடதுங்குறதால அதோட எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துது.இதுல இருக்குற ரசாயனம் தோள்ல பட்டதும் நமக்குஎரிச்சலும் அரிப்பும் ஏற்படுது.

-ரத்தம் உறிஞ்சும் அளவு கொசுவுக்கு கொசு மாறுபடும்.ஒரு கொசு தனது உடல் எடைல 1 1/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும்.

-பெண் கொசுதான் மனிதனோட ரத்தத்தை உறிஞ்சி நோயை பரப்புது.இந்த கொசுக்களை விரட்ட என்ன என்ன வழி ?

- தேங்காய் நார்களை எரிச்சா அதுல இருந்து வரும் புகைக்கு கொசுக்கள் வராது.

- கற்பூரம் : கொசுக்களை அழிக்க முக்கியமான பொருள் சல்ஃபர் .கற்பூரத்துல இந்த சல்ஃபர் இருக்கு.ஆனா கற்பூரத்தை காற்றில் வைத்தால் என்னவாகும்?கரஞ்சிபோகும் ..அதனால கற்பூரத்தை தண்ணியில போட்டு வச்சோம்னா அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.


-கெரோசின் மற்றும் கற்பூரம் : இப்போ நம்ம கொசுக்களை கொல்ல கடைல கிடைக்குற மிஷின் வாங்கி ஃப்ளக்ல சொருகி வைக்குறோம் இல்ல அதுல அந்த லிக்விட் தீந்துபோன காலி டப்பாவுல கெரோசினை ஊற்றி அதுல கொஞ்சம் கற்பூரத்தை போட்டு ஃப்ளக்ல சொருகி வச்சோம்னா கொசுக்கள் வராது..(தயவுசெஞ்சு இத ஒருமுறைக்கு ரெண்டுமுறை யோசிச்சு , ஒன்னும் ஆகாதான்னு விசாரிச்சுட்டு ட்ரை பண்ணுங்க..படிச்சதை உங்ககிட்ட சொல்லிருக்கேன் அவ்ளோதான்.கெரோசின் இல்லாத காரணத்தால நான் இத டெஸ்ட் பண்ணி பாக்கல )

-வீட்டு தோட்டத்துல சிலந்தியை வளர்த்தால் டெங்கு காய்சல் பரப்பும் கொசுக்களை அழிக்கலாம்.

-வேப்ப இலைகளை புகை போட்டால் கொசுக்கள் வராது

எல்லாத்துக்கும் மேல நாம இருக்குற இடத்தை முதல்ல சுத்தமா வச்சுக்கணும்...


ரங்குஸ்கி 'ஸ்ரீ' -ஐ கடிச்சதுக்கு வந்து ஸாரி சொல்லிட்டுப்போ ... :))

 (இந்த 'கொசு'த்தொல்லை தாங்கமுடியலைடா சாமி )

5 comments:

 1. //காலி டப்பாவுல கெரசினை ஊற்றி ப்ளக்குல சொருகி//
  தீ புடிச்சுராதா?

  ReplyDelete
  Replies
  1. பிடிக்காதுன்னு தான் நினைக்குறேன்..கெரோசின் இல்ல..இருந்தா டெஸ்ட் பண்ணிட்டு சொல்லிருப்பேன்

   Delete
 2. Nan try pannunen thee pdikala friends

  ReplyDelete
  Replies
  1. ஒங்க தைரியம் ரொம்ப புடிச்சுருக்கு.
   அப்புறம் கொசு தொல்லை தீ(ர்)ந்து போச்சான்னு சொன்னா நல்லாருக்கும்

   Delete
 3. Naan try pannunen friends thee pidikala ana room fulla mannennai vadai

  ReplyDelete