பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 10 அக்டோபர், 2013

ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?

-ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது.அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது .


-ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது.உலர்ந்த துணி கொண்டு துடைக்கவேண்டும்.

-மாதம் ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவேண்டும்.

- ஃப்ரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியதை வைத்துக் குத்தக்கூடாது.



-அதிகப்படியான பொருள்களை அடைத்து வைக்கக்கூடாது .ஒவ்வொரு பொருளுக்கும் இடையில் காற்று செல்வதற்க்கு ஏற்ப சிறிது இடைவெளி இருக்கவேண்டும் .

-ஃப்ரிட்ஜின் உட்புறம் சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை பயன்படுத்தக் கூடாது.இதற்க்கு பதிலாக சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.

-சூடான பொருள்களை உள்ளே வைக்கக்கூடாது.

-வாழை பழத்தை ஃப்ரிட்ஜின் உள் வைக்கக்கூடாது.

-காய்கறிகளை ஒரு பாலத்தீன் கவரில் போட்டு வைக்கவேண்டும்.அதை விடச் சிறந்தது ஒரு ஒரு வகை காய்களையும் தனி தனி பாலத்தீன் கவரில் போட்டு வைக்க வேண்டும்.தினமும் சிரமம் பார்க்காமல் காய்களை எடுத்து துணியால் துடைத்து விட்டு பின் பாலத்தீன் கவர்களை திருப்பி வைத்து அதன் உள்ளே வைக்கலாம்.இதனால் பலநாட்களுக்கு காய்கள் கெடாமல் இருக்கும்.

- பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டு வைக்க வேண்டும்.

-ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருள்களை மூடி வைக்கவேண்டும்.

-ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ மூடிகளை வைக்கலாம்.

-கொத்தமல்லி கீரை கருவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும் .டப்பாவினுள் அழுத்தி வைக்கக்கூடாது.


-சப்பாத்தி மாவை உள்ளே வைக்கும் போது அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு வைக்கவேண்டும்.

-சிப்ஸ் ,பிஸ்கட் போன்றவற்றை பாலத்தீன் கவரில் போட்டு வைக்கவேண்டும்.அப்போதுதான் அதன் மொறுமொறுப்பு கெடாது.

- ஃப்ரிட்ஜை அடிக்கடி திறக்கக்கூடாது,திறந்தால் உடனே மூடிவிடவேண்டும் .இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்

2 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு.... நெறையா ஆலோசனை சொல்லியிருக்கீங்க...பாலோ பன்னனுமே......வீட்டுக்கார அம்மா.......

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள பதிவு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு