பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Friday, 31 January 2014

பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்டை முறையை முதன் முதலா கண்டுபிடிச்சது எப்போன்னு தெரியுமா?
1960ல MIT பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய CTS -னு சொல்லப்படுற டைம் ஷேரிங் கணினியை பயன்படுத்துறவங்களை முறைப்படுத்த முதல் முதலா பாஸ்வேர்ட்டை முறையை பயன்படுதினாங்கனு சொல்றாங்க.

பாஸ்வேர்ட்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

1. பயோமெட்ரிக் முறை.
கண் மற்றும் கைரேகையை அடையாளம் காணும் முறை .இந்த முறையோட சாதகம்(அட்வான்டேஜ்) என்னனு பாத்தா ,சீக்கிரத்துல திருடமுடியாது,செலவு கம்மி.

2.வடிவ ஒற்றுமை முறை 

Thursday, 30 January 2014

உலகின் பெரிய கோயில் திருச்சி " ஸ்ரீ ரங்கம் "கம்போடியாவில் உள்ள "அன்க்கோவர் வாட்" கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை. ஆனால், 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

கோவில்களில் அழகு என்றல் அது "திருவரங்கம்" கோவில் தான், அதனால் தான் அங்கு பிறக்கும் பெண் குழந்தைகளை திருவரங்கத்து தேவதை என்று வர்ணிக்கின்றனர்...

Wednesday, 29 January 2014

இளநீர் பயன்கள்


இளநீர்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?
செவ்விளநீர் ,பச்சை இளநீர்னு பலவகைகள் இருக்கு.

ஆனா எல்லாவகையான இளநீரிலும் மருத்துவ குணங்கள் இருக்கு.

-அளவுக்கு அதிகமான வாதம்,பித்தம்,கபத்தை போக்கும் மருந்து இந்த இளநீர் .

-வெப்பத்தை தணிக்கும்.

-உடலில் நீர் சத்துக் குறையும் நேரத்தில் அதை சரிசெய்கிறது.

-ஜீரண சத்தியை அதிகரிக்கும்.

-சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

-உயிரணுக்களை அதிகரிக்கும்.

Tuesday, 28 January 2014

விண்டோஸ் XPயின் வேகத்தை அதிகப்படுத்த

விண்டோஸ் XPயில காட்சிகள் ,படங்கள் அழகாக தெரியருதுக்காக சில ப்ரோக்ராம்கள் எப்பவும் இயங்கிகிட்டே இருக்கும் .அந்த மாதிரியான ப்ரோக்ராம்கள் இயங்குறத நிறுத்துறதால  விண்டோஸ் XPயின் வேகத்தை அதிகப்படுத்த முடியும்.எப்படின்னு பாப்போம்..

1. MyComputer -ஐ ரைட் கிளிக் பண்ணுங்க.

2. இப்போ System Properties dialog box வரும்.அதுல 'Advanced' tab -க்கு போங்க.

3.'Performance' -க்கு கீழ 'Settings'  என்ற பட்டனை கிளிக் பண்ணுங்க.

4. 'Performance  Option ' Dialog box வரும் அதுல 'Visual  Effects' Tab -க்கு கீழ 'Adjust  For  Best  Performance' -னு இருக்குறதை தேர்வு செய்யுங்க.

இப்போ உங்க Xp சிஸ்டம் வேகமா இயங்கும் 

Sunday, 26 January 2014

பல்ப் மூலம் இன்டர்நெட் வசதி பெறும் ‘லைபை’ தொழிநுட்பம்


இனி இன்டர்நெட்டை ஒரு பல்ப் மூலம் பெறும் ‘லைபை’ வசதியை சீனாவின் ஷாங்காயில் இருக்குற ஃபுடான் பல்கலைக்கழக பேராசிரியர் சி (chi) என்பவர் கண்டுபிடிச்சுருக்காராம்.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டாபோதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தமுடியும் . லைட்டை நிறுத்திட்டா  இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போயிடும். ஒரு பல்பு எரியவிட்டா நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியுமாம்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்ட இந்த‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள்நடந்துகிட்டு இருக்காம் .

குடியரசு தின வாழ்த்துக்கள்


Saturday, 25 January 2014

பான் கார்டு

பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை இது ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்த பத்து இலக்க எண் கொண்ட புகைப்பட அடையாள அட்டையான இது, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது இத எப்படி வாங்குறதுன்னு பாப்போம்

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 96 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 962 ரூபாய் கட்டணமும் பெறப்படுகிறது. ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பித்தால் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை செலவாகும்.

மத்திய வருமானவரித் துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் இதற்கான சேவை மையங்களைத் திறந்துள்ளது. இங்கு சென்று நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இந்தியர்கள் 49 A என்ற விண்ணப்பத்தையும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் 49 A A என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை https://www.tin-nsdil.com/ என்ற தளத்திற்குச் சென்றும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Friday, 24 January 2014

தும்மினால் வாழ்த்துவது ஏன்?


இப்போ நாம தும்மினா நம்ம பக்கத்துல இருக்குறவங்க(நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்குறவங்க) நூறு வயசு/நூறு ஆயுசுனு சொல்வாங்க .நம்ம ஊருல மட்டும் இல்ல பல நாடுகள்லையும் இதையே 'Bless You'-னு சொல்வாங்க. அது ஏன் தும்மினா மட்டும் அப்படி சொல்றாங்கன்னு தெரியுமா?

தும்மும் போது இதயம் ஒரு நொடியின் ஆயிரத்துல ஒரு பங்கு நேரம் நின்னுட்டு மறுபடியும் துடிக்க ஆரம்பிக்குமாம்.இதனால்தான் இப்படி வாழ்த்துற பழக்கம் வந்ததாம்.

தும்மலை அடக்கக் கூடாதாம்.அப்படி அடக்கினால் தலை அல்லது கழுத்துல இருக்குற ஒரு இரத்தக்குழாய் துண்டிக்கப்படலாமாம்.


                                                                 நன்றி வார இதழ் 


Thursday, 23 January 2014

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்....

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

Wednesday, 22 January 2014

டிரைவ்களை மறைக்க

நம்ம கம்ப்யூட்டர்ல இருக்கும் C: , D: , E: போன்ற டிரைவ்களை மறைக்க வைக்க முடியும் ..எப்படீன்னு பாப்போம்.


1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க.

3. இப்போ வலது பக்கத்துல இருக்குற pane-ல ரைட் கிளிக் செஞ்சு
New - > DWORD Value -வை உருவாக்குங்க.அதுக்கு 'No Drives' -னு பெயர் குடுத்து அதோட Word Value 3FFFFFF  -னு குடுத்து (Hexadecimal) ok கொடுங்க.

4. இப்போ கம்ப்யூட்டரை Restart பண்ணுங்க.உங்க எல்லா டிரைவ்களும் பார்வைக்கு இருக்காது.

இப்போ மறுபடியும் உங்க டிரைவ்களை தெரியவைக்கணும்னா DWord மதிப்பை அழிச்சுட்டு Save பண்ணுங்க.

அவ்ளோதான்.

Tuesday, 21 January 2014

இனி youtube-யில் விருப்பப்பட்ட மொழிகளில் Subtitle


Youtube ன் புதிய வசதியாக நீங்கள் பார்க்கும் வீடியோவில் sub titles தமிழில் மட்டும் அல்லாமல் விருப்பப்பட்ட மொழிகளில் காணலாம்...

 ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் விருப்பப்பட்ட மொழிகளில் subtitle பெறலாம் .,

 விடியோ வின் கீழ் உள்ள Captions க்ளிக் செய்து பிறகு translate செய்து கொள்ளலாம். 

Sunday, 19 January 2014

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு......
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.

Saturday, 18 January 2014

நாமும் உதவலாமே !!!!


இந்த விளம்பரத்தை நான் டிவியில பாத்தேன்..ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ,கர்ப்பிணி பெண்கள் ,தாய்மார்களுக்காக இந்த SaveChildren அமைப்பு உதவிகளை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. 

இந்த அமைப்பின் மூலமா நம்மால முடிஞ்ச தொகையை நன்கொடை செஞ்சோம்னா அது ஒரு குழந்தையின் சரியான சிகிச்சைக்கு உதவும்..


இங்க அங்கனு அலையவேண்டிய நிலைமை கூட இல்லாம நாம  இருக்குற இடத்துல இருந்தே ஆன்லைன் மூலமா பணத்தை நன்கொடை செய்யலாம்.நம்மால முடிஞ்சது எவ்வளவு வேணும்னாலும் செய்யலாம் அது 100ல் இருந்து 1000ஆகவும் இருக்கலாம்.

எவ்வளவோ செலவு பண்றோம்..எவ்வளவோ பணத்தை வீணாக்குறோம் ,வீக்எண்டு ஆனா பார்ட்டி ,பப்னு,ரெஸ்டாரென்ட்டுனு செலவு பண்றோம் ஒரு தடவ இப்படி நல்லதுக்கும் செலவு செஞ்சுபாப்போமே...

நான் என்னால முடிஞ்சதை செஞ்சுருக்கேன் நீங்களும் உதவலாமே !!!!

Friday, 17 January 2014

ரோபோ மூலம் படிக்கலாம்

அமெரிக்காவுல உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருக்குற குழந்தைகள் ரோபோ மூலம் பள்ளிப் பாடங்களைப் படிக்குறாங்களாம் . V.GO. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பதில் பள்ளிக்குச் போகுதாம் .
வகுப்பறையில நடத்தப்படும் பாடங்களை ரோபோ வீடியோ எடுத்து, இவங்க கம்ப்யூட்டருக்கு அனுப்பிடுமாம். இவங்க முகமும் ரோபோவின் முகத்திரையில் தெரிஞ்சுகிட்டே  இருக்குமாம். வகுப்புல இருக்குற நண்பர்களோட பேசுவது, வகுப்புல நடத்தும் பாடங்களைக் கவனிப்பது என சகலமும் இந்த ரோபோ மூலம் செய்யலாமாம். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது இவங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கம்ப்யூட்டரிலஇருக்குற பட்டனை அழுத்தினா போதும். ரோபோவில் ஒரு விளக்கு எரியுமாம். இவங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை ஆசிரியர் ரோபோவின் முகப்பில் உள்ள கேமரா முன் விளக்குவாராம். அது இவங்களுக்கு வீடியோவாக ஒளிபரப்பாகுமாம்.

Thursday, 16 January 2014

வெற்றிநாயகன் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி

ஜெயா டிவியில் பொங்கல் தினத்துல ஒளிபரப்பான , நான் பாத்து என்ஜாய் பண்ணின 'வெற்றிநாயகன் சிவகார்த்திகேயன் ' நிகழ்ச்சியின் வீடியோ  இங்க ,
Wednesday, 15 January 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 11

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சிவகார்த்திகேயன் பங்குபெற்ற 'எங்கள் வீட்டு பிள்ளை'  நிகழ்ச்சி இங்கே....

Tuesday, 14 January 2014

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

"தை பொறந்தா வழி பொறக்கும்"னு சொல்லி நாம எல்லோருமே கேள்விப்பட்டுருப்போம்.இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அந்த காலத்துல ,எல்லாரும் கிராமத்துல விவசாயம் பண்ணுவாங்க..பெரிய தார் ரோடுகள் இருக்காது..பெரிய பாதைகளும் இருக்காது..நிலத்துல அறுவடைக்கு தயாரா இருக்குற நெல். கரும்பு எல்லாம் நல்லா வளந்து அந்த பாதைகளை மறைக்குற அளவுக்கு இருக்குமாம்..

வெளி கிராமத்துல இருந்து வரவங்களுக்கு பாதை தெரியாம தடுமாறுவாங்கலாம் , தை மாசம் பொறந்துடுச்சுனா/தை மாசத்துக்கு  அறுவடை பண்ணிடலாம் வழி கிடைக்கும்ங்குற அர்த்தத்துல சொன்னதுதான் இந்த வாக்கியம்..

                                         - யாரோ சொல்லி கேள்விப்பட்டது...

பொங்கல் பத்தி இன்னும் பல சுவாரசியமான  விஷயங்களை படிக்க கீழ உள்ள லிங்க் போங்க ...
http://srivalaipakkam.blogspot.in/2013/01/blog-post_3007.html 

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா -3

நேத்து நீயா?? நானா ?? நிகழ்ச்சியின் பேசப்பட்டது 'கல்யாணத்துக்கு முன்னாடி தனக்கு வரப்போறவங்க எப்படி இருக்கணும்னு எதிர்பார்ப்பு இருந்தது'ன்னு ஆரம்பிச்சு , ரொம்ப அழகா வாழ்க்கைக்கு வெளி அழகு மட்டும் முக்கியம் இல்ல மன அழகும் முக்கியம்னு எல்லாருக்கும் எடுத்து சொன்ன நீயா நானா வீடியோ இங்க..


இந்த எபிசோட் கல்யாணம் ஆனவங்க ,ஆகாதவங்க,ஆகப்போறவங்கனு எல்லாருமே கட்டாயமா பார்க்கவேண்டிய ஒரு எபிசோட் ..அழியப்போற வெளிஅழகை மட்டும் பாக்கக் கூடாது ,மனசுல தோணும் உண்மையான அன்புதான் உண்மையான அழகுன்னு புரிஞ்சுக்கோங்க..வெளி அழகை காரணம் காட்டி யாரையும் நோகடிக்காம  எல்லாருகிட்டயும் ஏதோ ஒரு அழகு இருக்குனு புரிஞ்சுக்கோங்க.முடிஞ்சா அவங்களுக்குள்ள இருக்குற அந்த உள்அழகை வெளியில கொண்டுவர உலகத்துக்கு காட்ட முயற்சிப்பண்ணுங்க  ....

Monday, 13 January 2014

வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படுவது ஏன் ?


இப்போ பஸ்லையோ , கார்லையோ  பயணம் போகும்போது வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படுது சிலபேருக்கு அது ஏனு தெரியுமா?

காரில, பஸ்ல பயணம் போகும்போது நாம நடக்குறதில்ல. உக்காந்து எதிரே சாலையைப் பாத்துட்டுருப்போம் . அப்போ கண்கள் எதிரே நகரும் உருவங்களை, மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள்இதையெல்லாம் பாத்துக்கிட்டு வரும் . அதைப்பத்தி  மூளைக்குத் தகவல் அனுப்பும் ... ஆனா நம்ம  உடம்பு  பெருசா அசையாது .அதனால உள்காதில் உள்ள வெஸ்டிப்யூலார் சிஸ்ட்டத்தில் அசைவு இருக்காது . ஸோ ,அதுகிட்ட இருந்து மூளைக்கு நியூஸ் போகாது. அதனால மூளை திணறுகிறது.ஸோ மூளை "என்னவோ கோளாறு போல!!!நமக்கு செய்தி கொண்டு வருகிற நியூரான்கள் எங்கேயோ தவறு செய்து . அவங்க தவறு செய்யக் காரணம், toxins-ஆகதானிருக்கும்"னு முடிவு செய்து. உடலில் ஏதாவது கெட்டது (toxins) இருந்து அதை வெளியேத்தனும்னு அது நினைச்சா முதல்ல வயிற்றைக் காலி செய்யும் வேலையில்தான் மூளை இறங்குமாம்.

உணவு பெரும்பாலும் இரைப்பையில் செரிமானம் செய்யப்பட்டுடும் . சிறுகுடலுக்குப் போகும்போது செரிமானம் ஆன உணவுல  இருக்குற சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தக் குழாய்கள் மூலம்  உடம்பின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுது. அதனால இந்த toxins சிறுகுடலுக்குப் போயிட்டா,உடம்பு பூரா புகுந்திடும்னு , முதல்ல இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு உணவை அனுப்பும் பாதையில் உள்ள பைலோரிக் வால்வை இழுத்து மூடுமாம். பின் வாந்தி எடுக்கத் தோன்றும் உணர்வை ஏற்படுத்துமாம் . அந்த உணர்வுக்கு நாசியா என்று ஆங்கிலத்தில் பெயர்.

பயணத்தின் போது மட்டுமில்லாம , கண்ணுக்கும் உள்காதுக்கும் எப்போதெல்லாம் பொருத்தமின்மை ஏற்படுதோ, அப்போதெல்லாம் இந்த வாந்தி எடுப்பது போன்ற உணர்வு வரும்னு சொல்றாங்க.

                                                      நன்றி வார இதழ் 

Sunday, 12 January 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 10

இந்த எபிசோட் பாருங்க..வழக்கம் போல சிவகார்த்திகேயன் எல்லாரையும் கலாய்க்குறது சிவகார்த்திகேயனை எல்லாரும் கலாய்க்குறது இதுதான் ..ஆனா கண்டிப்பா உங்களால சிரிக்காம இருக்கமுடியாதுனு மட்டும் நான் உறுதியா சொல்றேன் ..


Saturday, 11 January 2014

வேர்ட் டாக்குமெண்ட் பாஸ்வேர்ட்

ஒரு வேர்ட் டாக்குமெண்டை பாஸ்வேர்ட் குடுத்து எப்படி பாதுகாப்பா வைக்குறதுன்னு தெரியுமா?

1 . நம்மோட வேர்ட் ஃபைலை ஓப்பன் செஞ்சுக்கோங்க .

2 . 'Save  As ' போங்க


3. Word Document செலக்ட் பண்ணுங்க ..இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும்.அதுல Tools -னு ஒரு பட்டன் இருக்கும் .அதை செலக்ட் பண்ணுங்க ,அதுல 'General Options ...' செலக்ட் பண்ணுங்க 4. இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும்.அதுல Password to Open -னு இருக்கும் அங்க நீங்க பாஸ்வேர்ட் கொடுக்கணும்..ReEnter Password -னு ஒரு  டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும் அதுல கொடுத்த அதே பாஸ்வேர்ட் கொடுக்கணும். .இது இந்த வேர்ட் ஃபைல் திறக்க மட்டும் தான்..


நம்முடைய வேர்ட் ஃபைல்ல வேற யாரும் எந்த மாற்றமும் செய்யமுடியாதபடி செய்யணும்னா 'Password to modify ' -ல பாஸ்வேர்ட் கொடுங்க.இப்போ இந்த பாஸ்வேர்ட்  தெரிஞ்சவங்களால மட்டும் தான் இந்த வேர்ட் ஃபைல்ல மாற்றம் செய்ய முடியும் .

5. Read -Only அப்டீனா ,நாம என்னதான் டைப் செஞ்சாலும் ,Save பண்ணும்போது இந்த ஃபைல் Read -Only(படிக்க மட்டும் தான் முடியும்) மட்டும் தான்னு மெசேஜ் வந்துடும்.

Friday, 10 January 2014

நாங்கள்லாம் மூளக்காரங்க- கணக்கதிகாரம் பாடலின் அற்புதம்

கணக்கதிகாரம் கொறுக்கையூர் காரி நாயனார் என்பவரால எழுதப்பட்டது. இது ஒரு தமிழ்க் கணித நூல். புதிர்க்கணக்குகள் மற்றும் கணிதச் செய்திகளை அறிவியல் வழியே தரும் இந்நூல், தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய நூலாகக் கருதப்படுது. பொழுதுபோக்கு வினா-விடைக் கணக்குகள், பின்ன எண்களின் பெயர்கள், எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள் போன்ற பகுதிகள் கணக்கதிகாரத்தில் குறிப்பிடத்தக்கவை.

‘பழங்களின் அரசன்’-னு சொல்லப்படுற பலாப்பழத்தை வெட்டாம அதுல இருக்குற சுளைகளின் எண்ணிக்கையைதெரிஞ்சுக்க வழிமுறை மிக எளிமையாகக் கணக்கதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான பாடல்:

‘பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பரு கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை’

Thursday, 9 January 2014

இந்த பெயர் எல்லாம் எப்படி வந்தது தெரியுமா?

நமக்கு ரொம்ப பரிச்சயமான ,பிரபலமான ஆப்பிள்,கூகிள்,ஹாட் மெயில் ,மைக்ரோசாஃப்ட் ,மோட்டோரோலா ,இன்டெல்,சோனி இந்த நிறுவனங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்ததுன்னு தெரியுமா?


ஆப்பிள்

இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் .இவருக்கு ரொம்ப பிடிச்ச பழம் ஆப்பிள்.இவரோட ஊழியர்கள் கிட்ட நீங்க இத விட நல்ல பேர் சொல்லலைனா இதையே கம்பெனிக்கு பெயரா வச்சுடுவேன்னு சொல்லிருக்கார்.அவர் சொன்னது போலவே இதே பெயர் கம்பெனிக்கு நிலைச்சிடுச்சு.

கூகிள் 

Wednesday, 8 January 2014

நுகர்வோர் உதவி


ரேஷன் கடையில் வேண்டிய பொருள் ஸ்டாக் இருக்குறதில்ல. கிடைக்குற  பொருளோட  தரம் சரியில்ல. விலை அதிகமாக விக்குறாங்க . அளவு குறைச்சு  தராங்க . வாடிக்கையாளர்களை மோசமாக நடத்துறாங்க  ஊழியர்கள். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இப்படி ரேஷன் கடை/கார்டு தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும்  உதவி எண் 044-28592828 தீர்வளிக்கிறது.

நம்முடைய புகார், மேலதிகாரிகளின் கவனத்துக்கு உடனே எடுத்துச் செல்லப்படுமாம். ரேஷன் கடைகளுக்குமட்டும் இல்லாம , மற்ற கடைகளிலும்நாம வாங்குற  பொருளின் தரம், விலை மாதிரியான குறைபாடுகள் பற்றிய புகார்களையும் இதே எண்ணில் பதிவு செய்யலாமாம். உதாரணத்துக்கு, காலாவதியாகிவிட்ட மருந்தினை விற்கும் மருந்துக்கடைக்காரர் மீதும் இங்கே புகார் பதியலா,மாம். சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவின் பிரத்யேக உதவி எண் இது.

அரசு வேலை நாட்களில் காலை 9.30 மணியிலிருந்து 6.00 மணிவரை உங்களது புகாரை அலுவலர்களே நேரடியாகக் கேட்பார்களாம் . மற்ற நேரங்களில்நம்முடைய புகார், கணினியில் பதிவு செய்யப்படுமாம்.

Tuesday, 7 January 2014

பாடலின் வரிகள் - திமு திமு - எங்கேயும் காதல்

படம் : எங்கேயும் காதல் 
பாடல்: திமு திமு தீம் தீம் தினம்
பாடியவர்: கார்த்திக் 
இசை: ஹரிஸ் ஜெயராஜ் 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல்   வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஓ !!அன்பே ...நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே ...என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என்னுள்ளே என்னுள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில்  வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

Sunday, 5 January 2014

நம்மள இன்னும் சோம்பேறி ஆக்கப்போற WI-SEE


சில வடிகட்டின வாழைப்பழ சோம்பேறிங்களுக்கு இடத்த எந்திரிச்சு போய் ஃபேன் லைட் போடணும் இல்ல நிறுத்த கூட கஷ்டப்படுவாங்க.இப்படியாப்பட்ட ஆளுங்களுக்காகவே சைகை காட்டினாலே ஆஃப்/ஆன் ஆகுற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்காங்க வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினித் துறை விஞ்ஞானிகள். இதன் மூலம் ஸ்விட்ச்சை (SWITCH) தொடாமலேயே, சைகையின் மூலம் ஆஃப்/ஆன் பண்ணலாம் .

Wi-Fi router மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் உதவியுடன் இயங்குது இந்த WI-SEE தொழில்நுட்பம். ஒயர்லெஸ் சாதனங்களின் மூலம் கிடைக்கும் அலைகள் (SIGNAL) ஸ்மார்ட் ரிஸீவரின் மூலம் கண்டறியப்பட்டு, நம்ம கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் வகைல இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைச்சுருக்காங்க.

Friday, 3 January 2014

கம்ப்யூட்டர் பிட்ஸ்

1..உங்களுக்கு யார்மேலயாவது கோவமா ..அவங்களை திட்டணும்னு நினைக்குறீங்களா?எதாவது புது வார்த்தை இருந்தா நல்லா இருக்கும்னு யோசிக்குறீங்களா ..உங்களுக்கு உதவிசெய்யனே ஒரு இணையத்தளம் இருக்கு..

http://www.urbandictionary.com

இந்த  இணையத்தளத்துல இன்றைக்கான புது வார்த்தை என்ன அதோட அர்த்தம் என்ன அதை எங்க எங்க உபயோகப்படுத்தலாம் போன்ற  பல வித Category  இருக்கு இதன் மூலமா பல வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கலாம்.

2...இப்போ ஒரு இணையத்தளத்தை பாக்கணும் ,அதுக்கு நாம என்ன பண்ணுவோம் ப்ரௌசெர் ஓப்பன் செஞ்சு அட்ரஸ் பார்ல அந்த இணையதளத்தோட அட்ரஸ் டைப்பண்ணுவோம் இல்லையா ,பொதுவா எப்படி டைப் பண்ணுவோம்னா உதாரணத்துக்கு , WWW.Example.Com னு டைப் பண்ணுவோம் , www மற்றும் .com /net இதை டைப் செய்யும் நேரத்தை கூட மிச்சப்படுத்தலாம் ..எப்படீனா, Example -னு  டைப் செஞ்சுட்டு கன்ட்ரோல் கீயையும் என்ட்டர் கீயையும் (Control +Enter )  ஒண்ணா அழுத்த அந்த இணையதளத்துக்கான முழு URL அட்ரஸ் பார்ல தோன்றும்.இதுதான் இணையத் தளத்தின் முகவரியை டைப் செய்ய குறுக்கு வழி

Wednesday, 1 January 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 9

பண்முகத் திறமை கொண்ட மனிதர் சிவகார்த்திகேயனோட  ஒரு நடன கச்சேரி/நிகழ்ச்சியின்  நிகழ்படம்  தான் இது.

 மைக்கேல் ஜாக்சன் அவர்களின் நிலா நடையையும் ,நம்ம விஜயகாந்த் அவர்களின் உடல் மொழியையும் சேத்து இவர் ஆடுற இந்த தொனி எல்லாராலையும் ரொம்ப பாராட்டப்பட்டது.,.. ரசிக்கப்பட்டது..

சகப்போட்டியாளர்கள் பொதுவா எப்படி  பேசுவாங்கனு கடைசியா எல்லாரையும், அவங்க எல்லாரும்போல பேசிக்காமிச்சது 'சிறப்புக் கூறு '..இந்த நிகழ்படத்தை பாருங்க.... சிரிங்க... 


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .


இந்த வருஷம் எல்லாரும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா ,நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.அதுதான் எல்லோருடைய ஆசையாவும்
இருக்கும்னு நம்புறேன். .மத்தவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளை செய்வோம்.

இந்த வருஷம் உங்களுக்கு ஏதாவது ரெசல்லூஷன் இருக்கா?எனக்கு இருக்கு..எந்த ரெசல்லூஷனும் எடுக்ககூடாதுங்குறதுதான் என்னோட ரெசல்லூஷன் ...எப்படி?