பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 29 January 2014

இளநீர் பயன்கள்


இளநீர்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?
செவ்விளநீர் ,பச்சை இளநீர்னு பலவகைகள் இருக்கு.

ஆனா எல்லாவகையான இளநீரிலும் மருத்துவ குணங்கள் இருக்கு.

-அளவுக்கு அதிகமான வாதம்,பித்தம்,கபத்தை போக்கும் மருந்து இந்த இளநீர் .

-வெப்பத்தை தணிக்கும்.

-உடலில் நீர் சத்துக் குறையும் நேரத்தில் அதை சரிசெய்கிறது.

-ஜீரண சத்தியை அதிகரிக்கும்.

-சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

-உயிரணுக்களை அதிகரிக்கும்.-உடலில் ஏற்ப்படும் நீர் - உப்பு பற்றாக்குறையை இளநீர் சரிசெய்யும்.

-இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

-இளநீர் மிக மிக சுத்தமானது.

-ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுகிறது.

-ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது

-இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் என்ற பொருள் கண் நோய்களுக்கு சிறந்த மருந்து

-இளநீரில் அதிக சத்துக்கள் உள்ளன

-சர்க்கரை சத்துடன் தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளன .

-பொட்டஷியம் ,சோடியம் ,கால்ஷியம்,பாஸ்பரஸ் ,இருப்பு ,செம்பு ,கந்தகம்,குளோரைடு போன்ற தாதுப் பொருட்கள் இளநீரில் உள்ளன.

-இளநீரில் உள்ள புரதச்சத்து தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது

இவ்ளோ பயன்தரக்கூடியது இந்த இளநீர்..அதனாலதான் நம்ம ஊர்லலாம் அஞ்சு ரூபாய்  பத்து ரூபாய்க்கு விக்குற இளநீர் சென்னைல நாற்பது ரூபாயிக்கு விக்குதுபோல 

No comments:

Post a Comment