பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Sunday, 23 February 2014

மனசுவிட்டு பேசுங்க...

மனஅழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம்..யார்கிட்டயும் சொல்லமுடியாத கஷ்டங்கள் , வேதனைகள் , மனச விட்டு பேச ஆள் இல்லாம தனிமைல இருக்குறது இதுலாம் தற்கொலை எண்ணத்தை அதிகம் தூண்டக்கூடியது ..

இந்த மாதிரி மனநிலமைல இருக்குறவங்களுக்கு அவங்களோட கஷ்டத்தை காது குடுத்து கேக்கவே இருக்கு ஒரு தொண்டு நிறுவனம்.அதன் பெயர் சிநேகா தொண்டு நிறுவனம்.இந்த நிறுவனத்தோட போன் நம்பர் குடுத்துருக்காங்க அந்த நம்பருக்கு போன் செஞ்சு உங்க மனசுல இருக்குற கஷ்டத்தை சொல்லலாம்.வெளிப்படையாக மனம் விட்டு பேசலாம் பேசலாம்.இது முற்றிலும் இலவச சேவை தான்.

நீங்க யார் என்னனு கூட சொல்லவேணாம்.உங்க கஷ்டத்தை பகிர்ந்துகிட்டா போதும்னு சொல்றாங்க.நீங்க சொன்னது எந்தகாரணத்தக்கொண்டும் வேற யாருக்கும் தெரியாது உங்க விஷயம் பாதுகாக்கப்படும்னு சொல்றாங்க.

மனசுவிட்டு பேசுங்க..

உங்களால பேசமுடியலை சொல்ல முடியலைனா எழுதுங்க..எல்லாத்தையும் எழுதி அப்பறம் கிழிச்சு போட்டுடுங்க..இதுவும் ஒருவகைல ரிலாக்ஸ் பண்றதுக்குத்தான்.

சிநேகா தொண்டு நிறுவனம்-    044 - 24640050 .

                     -                                                          -நன்றி நாளிதழ் 

No comments:

Post a Comment