பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 18 மார்ச், 2014

நெல்லிக்காய் சாற்றின் பலன்கள்

நெல்லிக்காயில வைட்டமின் சி இருக்குனு எல்லாருக்கும் தெரியும்.நெல்லிக்காய் சாப்பிடப் பிடிக்காதவங்க அதை ஜூஸ் செஞ்சு சாப்பிடலாம்.நெல்லிக்காய் ஜூஸ்ல என்ன என்ன பலன்கள் இருக்குனு தெரியுமா?

-நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் கொஞ்சம் மஞ்சள் தூள்,தேன் சேர்ந்து கலந்து குடிக்கலாம்.

-நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலைல எழுந்ததும் வெறும் வயித்துல குடிச்சா உடம்புல இருக்குற தேவை இல்லாத கொழுப்புகள் குறைஞ்சு உடம்பு எடை குறையும்.

-தினமும் நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்ந்து கலந்து குடிச்சா ஆஸ்துமா குணமாகும்.ரத்தம் சுத்தமாகும்.


-நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும்.இதை தினமும் குடிச்சா மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

-நெல்லிக்காய் சாற்றினை குடிச்சா உடல் வெப்பத்தை தணிக்கும்.

-நெல்லிக்காய் சாற்றினை குடிச்சா உடல் அழகாக பொலிவாக இருக்கும்.சருமப் பிரச்சனையை சரி செய்யும்.

-நெல்லிக்காய் சாற்றினை குடிச்சா உடம்புல ரத்தம் குறைவினால் ஏற்படும் நியாபகமறதியை தடுக்கலாம்.ஏன்னா இதை குடிக்குறதால ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

-இதயம் பலவீனமா இருக்குறவங்க நெல்லிக்காய் சாற்றினை குடிச்சா இதயத்தில் ஏற்ப்படும் பிரச்சனையை சரி பண்ணலாம்.

-நெல்லிக்காய் சாற்றினை குடிச்சா கண் பார்வை அதிகரிக்கும்.

-நெல்லிக்காய் சாறு உடம்புல இருக்குற டாக்ஸின்களை வெளியேற்றி முதுமை தோற்றமானது சீக்கிரம் வெளிப்படுவதை தடுக்கும்.

2 கருத்துகள்: