பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 29 April 2014

உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு..!

காலக்கண்ணாடி என்ற வலைப்பக்கத்துல "உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு..!"-னு பாத்ததும் ஆர்வமா படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்த அந்த படைப்பை அப்படியே உங்ககிட்ட ஷேர் பண்றேன்...


1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார் அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

Monday, 28 April 2014

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..!


பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும்

வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும்

வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும்

வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும்

வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும்

Saturday, 26 April 2014

மாணவர்களுக்காக கோடை காலப் பயிற்சிகள்

கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க பள்ளி மாணவர்களுக்காக சென்னையில் நடைபெறும் கோடை காலப் பயிற்சிகள் குறித்த சிறிய அறிமுகம்...

பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நேரம் இது. இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், ஏராளமான கோடைகாலப் பயிற்சி முகாம்கள் சென்னை நகரெங்கும் நடைபெறுகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற கோடைகாலப் பயிற்சி முகாம்களில் சேர்த்துவிடுவதே நல்லது என்று கருதுகிறார்கள். இந்த முகாம்களின் மூலம் புதிய விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பள்ளிப் பாடங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பெற முடிகிறது. இனி, பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள்...


இயற்கைப் பயண முகாம்

நகர்ப்புற நெருக்கடியிலிருந்து சற்றே விலகி, இந்தக் கோடையை உல்லாசமாகக் கொண்டாட விரும்புபவர்களுக்கென்றே சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இம்ப்ரஸ்ஸாரியோ டிராவல்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான கோடை கால முகாமை நடத்துகிறது. ‘நேச்சர் கேம்ப்’ எனப்படும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களை இயற்கையான வனப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

Friday, 25 April 2014

கம்ப்யூட்டர் படிச்சுட்டு என்னதான் வேலைபாக்குறோம்னு தெரிஞ்சுக்கனுமா !!!

கொஞ்சநாள் முன்னாடி என் ஃப்ரண்ட் எனக்கு ஷேர் செய்த போஸ்ட் இது..ஒரு கம்பெனில ப்ராஜெக்ட் வேல எப்படி நடக்குதுங்குறது பத்தி தான் இந்த போஸ்ட் .பலபேருக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கும். இதவிட அழகா தெளிவா அந்த விஷயத்தை  யாரும் சொல்லிருக்கமாட்டாங்க..இத யார் எழுதினதுன்னு எனக்கு தெரியல ..ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச போஸ்ட் இது ..நீங்களும் இந்த போஸ்ட்  பாத்து தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.... தெரிஞ்சவங்க ரசிங்க..


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

 "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

 "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

Thursday, 24 April 2014

படத்த பத்தி - தெனாலிராமன்

தெனாலிராமன்   - இது ஒரு நகைச்சுவை(அப்படீன்னு சொல்லிக்குறாங்க)த் திரைப்படம் .


இந்த படத்தை பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற லிங்க் போய்பாருங்க ..

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

Wednesday, 23 April 2014

இன்று உலக புத்தக தினம் !!!!!இன்று, ஏப்ரல் 23  உலக புத்தக தினம் .உங்கள் நண்பர்கள் , அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்களை பரிசாக தந்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவியுங்கள் 

Monday, 21 April 2014

இணையதளம் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்துவது எப்படி?


கூகுளின் ஜிமெயில் கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்துகிறோம். ஜிமெய்லின் புது புது வசதிகள் அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் அமைந்துள்ளது.

ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

Friday, 18 April 2014

படத்த பத்தி - நான் சிகப்பு மனிதன் (2014)

நான் சிகப்பு மனிதன்  - இது ஒரு ரொமாண்டிக் திர்ல்லர் படம்.


இந்த படத்தை  பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற  லிங்க் போய்பாருங்க ..

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

Thursday, 17 April 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 12

 தமிழ் புத்தாண்டுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய "மான் கராத்தே" திரைப்படம் பற்றிய  சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பு..
Tuesday, 15 April 2014

இவர் - ஒரு அறிமுகம் - 3

இவர் - ஒரு அறிமுகம் தலைப்புல இவங்களை அறிமுகப்படுத்துறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.காரணம் !! ஃபேஸ்புக்ல புகைப்படம் சம்மந்தமான ஒரு குரூப்ல இவங்களோட புகைப்படங்களை பாத்து நான் ஆச்சர்ப்பட்டுருக்கேன்.வியந்துருக்கேன்னு கூட சொல்லலாம்.

அவ்வளவு ஒரு அழகான புகைப்படங்கள் ,புகைப்படத்தை எடுக்கும் விதம் அந்த நேர்த்தி சொல்லவார்தையே இல்ல.அந்த அழகிய புகைப்படங்களை பாக்கும் போது நமக்குள்ல ஒரு சந்தோஷம் வருமே அதை இவங்களுடைய புகைப்படங்களில்(லும்)  நான் உணர்திருக்கேன்.

இவங்களை பத்தி "இவர் - ஒரு அறிமுகம்" தலைப்புல எழுதனும்னு ரொம்பநாள் நினச்சதுன்டு.ஆனா கேட்டா என்ன சொல்வாங்களோனு ஒரு தயக்கத்தோட கேட்டுப்பாத்தேன்..சந்தோஷமா சம்மதிச்ச இவங்க பெயர் - வர்ஷினி  ஸ்ரீதர்...இவங்களை மாதிரியே இவங்க எடுக்குற  புகைப்படங்களும் அவ்வளவு அழகு..

அவங்களை பத்தி அவங்ககிட்ட நான் கேட்டு தெரிஞ்சுகிட்ட சில
விஷயங்கள் ....

உங்களை பற்றி :

              "நான் ஒரு  கட்டிடக்கலை பொறியியல்  படிச்சுக்கிட்டு இருக்கேன்.இறுதியாண்டு மாணவி ".

Monday, 14 April 2014

அர்ச்சனைத் தட்டு

கோவில்ல அர்ச்சனை பண்ணும் போது  தேங்காய் ,வாழைப்பழம் ,வெற்றிலைப்பாக்கு கொடுத்து அர்ச்சனை பண்றதோட நோக்கம் என்ன தெரியுமா?


தேங்காயோட  மேல இருக்குற மட்டை ,நார் உறிச்சி தேங்காயோட ஓட்டை உடைக்கிறோம் .உள்ள இனிப்பான தேங்காய் இருக்குது இல்லையா , அது மாதிரி மனிதன் தனக்குள்ள இருக்குற ஆணவம் ,கன்மம் அதாவது முற்பிறவி பாவம்  மற்றும் மாயை அதாவது இந்த பிறவியில செய்யுற தவறுகள் இந்த மூன்றையும் நீக்கினால் இனிய இறைவனை பாக்கலாம்னு சொல்றதோட அர்த்தம் தான் அது.

வாழைப்பழத்தை ஏன் அர்ச்சனைக்கு கொடுக்குறோம்னா அல்லது நாம வீட்ல சாமிகும்பிடும்போது வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்னா  ...வாழைமரத்தை சுத்தி பல வாழைக்கன்றுகள் வந்துகிட்டே இருக்கும் .இததான் வாழையடி வாழைனு (வாழையடி வாழையாய் வாழனும்) சொல்றாங்க.அதுபோல நம் வம்சம் விருத்தியடையவும் முதிர்ந்த வயசுல நிம்மதியா இறைவனின் திருவடி சென்று சேரவும் வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்.

வெற்றிலைப்பாக்கு- லட்சுமி கடாட்சியதுக்காக வெற்றிலைப்பாக்கு எனும் தாம்பூல நைவேத்தியம் செய்யப்படுது.


Saturday, 12 April 2014

இனி தண்ணீர் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் செய்யலாம் ..சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஎச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பல்கலைக்கழகத்தில் செல்போன் பேட்டரிகளுக்கு சார்ஜ் அளிக்கும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்ஒய்எப்சி பவர் டிரெக் (மைஎப்சி) என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறிது தண்ணீரை ஊற்றினாலே செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் அளிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இனி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Friday, 11 April 2014

பரிக்கல்

விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்குள்ள லட்சுமி நரசிம்மரைக் காணக் கண்கோடி வேண்டும். பஞ்ச கிரஷ்ணாரண்யம் என்றும் திருமுககுன்றம் என்ற ழைக்கப்படும் விருத்தாசலம் பகுதியை வசந்தராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

 வசந்தராஜன் மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான்.

அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார்.


Thursday, 10 April 2014

அடங்கொக்கா மக்கா ..எப்படித்தான் சமாளிக்குறாரோ !!!
ஒரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.

ஒரு பெரிய விடுதிபோல இருக்கும் சயோனாவின் வீடு கிட்டத்தட்ட விடுதிபோலத்தான் இயங்குகிறது. மூன்று தச்சு வேலையகங்களை வைத்திருக்கிறார் சயோனா. தவிர, காய்கறித் தோட்டங்கள், கோழி - பன்றிப் பண்ணைகளில் தொடங்கி பள்ளிக்கூடம், மைதானம் வரை வைத்திருக்கிறார் சயோனா. ஆண்கள் தச்சு வேலையைக் கவனிக்க, பெண்கள் தோட்டம், பண்ணை மற்றும் சமையல் வேலைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

Wednesday, 9 April 2014

செலிபிரிட்டி வாழ்க்கை

வாழ்ந்தா இப்படி வாழனும்,இப்படி சம்பாதிக்கணும்,இப்படி வசதியா இருக்கணும்னு பொலம்புறது ஒரு பக்கம்,நீ என்ன பெரிய செலிபிரிட்டியா ,இப்படி பேசுற இப்படி நடந்துக்குற இப்படி டிரஸ் பண்ற,இப்படி இருக்கனு ஒரு நாளுல ஒரு தடவையாவது நம்மளையும் அறியாம இப்படி அவங்க கூட நம்மள கம்பேர் பண்றது நடக்குது..

இப்படி சொல்றவங்க பேசுறவங்க எல்லார்கிட்டையும் கேக்குறேன் ,செலிபிரிட்டி வாழ்க்கை அவ்ளோ ஈஸினு நினச்சுட்டீங்களா ?அவங்க எல்லாருமே காசு பணம் வசதியோட வாழ்றாங்க.ஆனா உண்மையிலையே நிம்மதியா வாழ்றாங்களா?பணத்துக்காக நடிக்குறாங்க ஆனா அதுக்காக அவங்க எவ்ளோ ப்ரைவசியை இழக்குறாங்கனு தெரியுதா?அவங்க வாழ்க்கை ஒன்னும் ஈஸி இல்லைங்க..400000 பேருக்கு நம்மள பிடிக்குது,நம்மள பாக்குறாங்க,ரசிக்குறாங்கங்கறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல ,ஆனா அதுக்காக அவங்க குடுக்குற விலை ரொம்ப பெருசு ..அது 'நிம்மதி'.எவ்ளோ கோடி கோடி கொட்டி குடுத்தாலும் கிடைக்காதது...

Tuesday, 8 April 2014

குண்டு துளைக்காத ஆடைகள் எப்படி தயாரிக்குறாங்க?

துப்பாக்கி குண்டு எப்படி ஒருவரை தாக்குது ? அந்த குண்டோட முனைல ஒரு பிரம்மாண்டமான விசை ஒரு சிறிய பரப்பில் செலுத்தப்படுது.அந்த விசைதான் சேதம் ஏற்படுத்துது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில, ஆஸ்திரேலியாவுல, ஒரு சிறிய போராளிக் குழுவுக்கும், போலீசாருக்குமிடையே ஒரு ஹோட்டல்ல கடும் துப்பாக்கிச் சண்டைநடந்துருக்கு . அப்போ போராளிகள், விவசாயிகள் நிலத்தை உழுவதற்காகப் பயன்படுத்துற கொழுக்களைக் கோர்த்துத் தயாரிக்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஆடைகளை அணிந்திருந்தாங்களாம் .

அந்த ஆடையோட எடை 44 கிலோ. இது ரொம்ப கனமா இருந்ததால ஒரே தகடாகவச்சு எடையைக் குறைக்கமுயற்சிப்பண்ணியிருக்காங்க . அப்போ 18 கிலோஆனது . ஒரே தகடுக்குப் பதில் செதில் செதிலாக அடுக்கினா என்னனு யோசனைவரஅப்படியே செஞ்சிருக்காங்க.அப்பவும் 5 கிலோவுக்கு மேல குறைக்க முடியாம போயிருக்கு..

Monday, 7 April 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 11

விஜய் டிவியின் 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கிட்ட  நிகழ்ச்சியின் வீடியோ ..


Saturday, 5 April 2014

Media Player -ன் Title Bar -ல நமக்கு பிடிச்ச பெயரை மாத்தியமைக்க

Media Player -ன் Title Bar -ல நமக்கு பிடிச்ச பெயரை மாத்திக்க முடியும்.எப்படின்னு பாப்போம்.

1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Policies\Microsoft-ல ரைட் கிளிக் செஞ்சு New - > Key என்பதை தேர்வு செய்யுங்க.

3. இப்போ இந்த keyக்கு 'Windows Media Player'-னு பெயர் மாத்துங்க.

4. இந்த 'Windows Media Player' -கீயினை ரைட் கிளிக் செஞ்சு New -> String Value -வை தேர்வு செய்யுங்க.

5.இப்போ வலதுப்பக்கம் ஒரு புதிய string value உருவாகும்.இதுக்கு 'Title Bar' -னு பேர் மாத்துங்க.

6. இப்போ இதை ஓப்பன் செஞ்சு Title Bar -ல என்ன பெயர் நீங்க வைக்க விரும்புறீங்களோ அந்த பெயர் கொடுத்து Close பண்ணுங்க.

இப்போ Media Player திறந்து பாத்தா நீங்க கொடுத்த பெயர் Title Bar -ல தெரியும்.

Friday, 4 April 2014

கருந்திராட்சை

*கருப்பு திராட்ச்சையில எவ்ளோ சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

 கருப்பு திராட்ச்சையில 'புரோ ஆந்தோ சயனிடின்' என்கிற சத்து இருக்கு. இந்த சத்து திராட்சையோட சதைல 20 % -மும்  இதனோட விதைகள்ல 80%-மும் இருக்கு.நாம விதைகள நீக்கிட்டு சதையை மட்டும் தானே சாப்பிட்றோம்.
அப்போ எவ்ளோ சத்துக்களை நாம  இழக்குறோம் பாருங்க.

*அமெரிக்காவுல பயன்படுத்தப்படுற மூலிகை மருந்துகல்ள திராட்சை விதைகள்  ஒன்பதாவது இடத்துல இருக்கு.

*திராட்சை விதையோட சாற்றை ஜப்பான் நாடு இயற்க்கை உணவுன்னு அங்கீகரிச்சுருக்கு.அங்க ஒரு லட்சம் கிலோ விதைகள்  பயன்பாட்டுல இருக்கு.

*இது வைட்டமின் சி-ஐ விட 20 மடங்கு சத்தி வாய்ந்தது .

*ரத்த கொதிப்புக்கு நல்ல மருந்து.

*ரத்த குழாய் அடைப்பு,ரத்தக் குழாய்களின் வீக்கம் இதை எல்லாம் இந்த விதைல கிடைக்குற சத்து குறைக்குது.

*ரத்தப் போக்கை கட்டுப்படுத்துது.

*ரத்தக் குழாய்களில் இருக்குற கொலஸ்ட்ராலை குறைக்குது.

Thursday, 3 April 2014

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

நாம தினமும் சாப்பிடுற காய்கறி,பழங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கு..அது என்ன என்னனு தெரியுமா?
வெங்காயம் :
         வெங்காயத்தில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் இருக்கு..இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இருக்கு.சமைச்சு சாப்பிட்றதவிட பச்சையா சாபிற்றது நல்லது..

மாதுளம்பழம் :
          மாதுளம்பழத்துல எலாஜிக் ஆசிட் என்ற மூலப்பொருள் இருக்கு.இது புற்றுநோய் செல்லோட வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.

Wednesday, 2 April 2014

வீடு தேடி வரும் புத்தகம்

சென்னைல ,புழுதிவாக்கதுல ஒரு அடுக்குமாடி குடியிருப்புல இயங்கி வர நூலகத்தோட பேர் 'பேன்யன் ட்ரீ நூலகம்'..இந்த நூலகத்தோட சிறப்பு என்னனா ,நமக்கு வேண்டிய புத்தகத்தை போனிலோ அல்ல ஆன்லைனிலோ ஆர்டர் செஞ்சா புத்தகங்கள் இலவசமாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுமாம்.

இந்த நூலகத்துல ஆங்கில நாவல்கள், சுய முன்னேற்றம், குழந்தைகளுக்கான தமிழ் காமிக் புத்தகங்கள், மேலாண்மை, ஆன்மிகம், உடல்நலம் என அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் இருக்காம்.

Tuesday, 1 April 2014

ஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..!

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை.

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது.

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்