பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 2 April 2014

வீடு தேடி வரும் புத்தகம்

சென்னைல ,புழுதிவாக்கதுல ஒரு அடுக்குமாடி குடியிருப்புல இயங்கி வர நூலகத்தோட பேர் 'பேன்யன் ட்ரீ நூலகம்'..இந்த நூலகத்தோட சிறப்பு என்னனா ,நமக்கு வேண்டிய புத்தகத்தை போனிலோ அல்ல ஆன்லைனிலோ ஆர்டர் செஞ்சா புத்தகங்கள் இலவசமாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுமாம்.

இந்த நூலகத்துல ஆங்கில நாவல்கள், சுய முன்னேற்றம், குழந்தைகளுக்கான தமிழ் காமிக் புத்தகங்கள், மேலாண்மை, ஆன்மிகம், உடல்நலம் என அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் இருக்காம்.


விலை உயர்ந்த புத்தகங்களை குறைந்த சந்தாவில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்றாங்களாம்.

வாடிக்கையாளர், தேர்ந்தெடுக்கும் புத்தகத்தினை ஒரு மாதம்வரை வைச்சுப் படிக்கலாம்.படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் அவங்களே வந்து புத்தகத்தை வாங்கிட்டுப் போவாங்களாம்.‘சேவா பேக்’ என்னும் சந்தா மூலமா தமிழ் சார்ந்த சிறுகதைகள், நாவல்கள் எனச் சிறப்பான நூறு புத்தகங்களைப் படிக்கலாமாம்.

ஆங்கிலப் புத்தகத்திற்கான விலைகள் அதிகமென்பதால், அதைப் படிப்பதற்கான சந்தாகொஞ்சம் அதிகம். ஆனாலும் படிக்கின்றஎல்லா புத்தகங்களின் சராசரி அடக்க மதிப்பு பதினைந்து ரூபாய்க்குள் இருக்குமாம்.. ஒரு முறை சந்தாதாரர் ஆகிட்டா, வாரத்திற்கு ஒரு புத்தகத்தைப் படிச்சாலும் வருஷத்துக்கு  ஐம்பத்து இரண்டு புத்தகங்களைப் படிச்சுடலாம்னு சொல்றாரு பேன்யன் ட்ரீ நூலகத்தின் நிர்வாகி சேதுராமன். இவர் டி.சி.எஸ்சில் மாதம் அறுபது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில வேலை பாத்துகிட்டு இருந்தவறாம் .இப்போ வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த நூலகத்தை நண்பர்களோட சேந்து நடத்துறாராம்.(எத்தன பேருங்க இப்படி பண்ணுவோம்)..

நூலகத்தின் தொடர்புக்கு: 99621 00032

வெப்சைட்  : www.readersclub.co.in

No comments:

Post a Comment