பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஏப்ரல், 2014

செலிபிரிட்டி வாழ்க்கை

வாழ்ந்தா இப்படி வாழனும்,இப்படி சம்பாதிக்கணும்,இப்படி வசதியா இருக்கணும்னு பொலம்புறது ஒரு பக்கம்,நீ என்ன பெரிய செலிபிரிட்டியா ,இப்படி பேசுற இப்படி நடந்துக்குற இப்படி டிரஸ் பண்ற,இப்படி இருக்கனு ஒரு நாளுல ஒரு தடவையாவது நம்மளையும் அறியாம இப்படி அவங்க கூட நம்மள கம்பேர் பண்றது நடக்குது..

இப்படி சொல்றவங்க பேசுறவங்க எல்லார்கிட்டையும் கேக்குறேன் ,செலிபிரிட்டி வாழ்க்கை அவ்ளோ ஈஸினு நினச்சுட்டீங்களா ?அவங்க எல்லாருமே காசு பணம் வசதியோட வாழ்றாங்க.ஆனா உண்மையிலையே நிம்மதியா வாழ்றாங்களா?பணத்துக்காக நடிக்குறாங்க ஆனா அதுக்காக அவங்க எவ்ளோ ப்ரைவசியை இழக்குறாங்கனு தெரியுதா?அவங்க வாழ்க்கை ஒன்னும் ஈஸி இல்லைங்க..400000 பேருக்கு நம்மள பிடிக்குது,நம்மள பாக்குறாங்க,ரசிக்குறாங்கங்கறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல ,ஆனா அதுக்காக அவங்க குடுக்குற விலை ரொம்ப பெருசு ..அது 'நிம்மதி'.எவ்ளோ கோடி கோடி கொட்டி குடுத்தாலும் கிடைக்காதது...



பிடிச்ச இடத்துக்கு போக முடியாது,பிடிச்சத சாப்பிட முடியாது,பிடிச்ச டிரஸ் போட முடியாது,பிடிச்சவங்க கிட்ட பேச முடியாது..நின்னா நியூஸ்,நடந்தா நியூஸ்,தும்மினா நியூஸ்,இருமினா நியூஸ்..எவ்ளோ கோவம் வருத்தம் கஷ்டம் இருந்தாலும் கேமரா முன்னாடி சிரிச்சே ஆகணும் ,அது ஷூட்டிங் இல்லைனாலும் கூட ...அதுவும் பொண்ணுங்க செலிபிரிட்டியா இருந்தா இன்னும் மோசம்...

செலிபிரிட்டி பத்தியான காஸிப் எனக்கும் படிக்க பிடிக்கும் தான் .ஆனா அதுக்கு பின்னாடி அவங்களோட மன நிலைமையை நினச்சு பாத்தா ரொம்ப பாவம்ங்க.அது உண்மையானாலும் ,பொய்யானாலும் .அவங்களும் மனுஷங்க தானே.அவங்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கு தானே.

உனக்கும் அந்த பையனுக்கும் ஏதோ இருக்காமே ?உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ இருக்காமேனு யாரவது நம்மள பாத்து கேட்டா அப்படி இருந்தாலும் இல்லைனாலும் பதருறோமே,ஒரு கட்டத்துல டிப்ரஷனுக்கு ஆளாகுறோம் .4 பேர் வாய்ல நம்ம பேர் வரதுக்கே பதருறோமே ,400 பேர்களோட ஒரு காதுல நுழைஞ்சி,40000 பேரோட இன்னோர் காது வழியாபோய் 400000 பேரோட வாய் வழி நியூஸா வந்தா அவங்களுக்கு எப்படி இருக்கும்?அவங்க எல்லாம் சந்தோஷமா இருந்தா ஏன் செலிபிரிட்டி தற்கொலைனு படிக்குறோம்.

அவங்க எல்லாருமே தப்பு பண்றாங்களா?இல்லையே!! சரி ,அவங்க மட்டும் தான் தப்பு பண்றாங்களா?அதுவும் இல்ல.. இப்போலாம் எதுக்கு எடுத்தாலும் ஒண்ணு சினிமா ஆளுங்களான்னு கேக்கவேண்டியது இல்ல ஐ .டி மக்களானு கேக்க வேண்டியது.

ஏன் இந்த துறைல மட்டும் தான் தப்பு நடக்குதா?மீதி எல்லாரும் ஒழுங்கா ஒழுக்கமா இருக்காங்களா?ரொம்ப பயங்கர கட்டுப்பாடோட இருக்குற கிராமத்துல தப்பு நடக்கலையா?அங்க எல்லாரும் ஒழுங்கா இருக்காங்கனு எத வச்சு சொல்ல முடியும்..உடனே நீ அமெரிக்காவுல இல்ல ஆப்ரிக்காவுல இல்லன்னு சொல்றது .அது என்ன யாராவது தப்பு பண்ணினா உடனே இந்த ரெண்டு துறையை மட்டும் உதாரணத்துக்கு இழுக்க வேண்டியது?

எத்தனையோ பேர் இதே துறைல ஒழுக்கமா இருக்காங்களே.எத்தனையோ பேர் அமெரிக்காவுல,ஆப்ரிக்காவுல கூட இன்னம் ஒழுக்கமா இருக்கங்களே.எந்த துறைல இருந்தாலும்,எந்த ஊருல இருந்தாலும்,எந்த நாட்டுல இருந்தாலும்,பிச்சைக்காரனா இருந்தாலும்,பணக்காரனா இருந்தாலும், ஆணோ பொண்ணோ தான் ஒழுங்கா இருக்கணும்னு நினச்சா, அவங்களா மனசு வச்சா மட்டும் தான் ஒழுங்கா இருக்க முடியும்.'ஒழுக்கம்' ஆணுக்கும் பொண்ணுக்கும் சமமானதுதான்..அது மனசு சம்மந்தப் பட்டதும் கூட ..

இனிமேலாவது மத்த துறையை கிண்டல் பண்ணாம தப்பு எல்லா இடத்துலையும் நடக்குதுனு உணருவோம்...அது நடக்காம தடுக்க நம்மளால முடிஞ்சா எதாவது செய்ய முடியுமான்னு பாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக