பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 1 மே, 2014

TeamViewer - ஒரு பார்வை


Team Viewer மென்பொருளின் எதுக்காக பயன்படுத்துறோம்னா, ஒரு இடத்துல இருக்கும் கணினியை நாம இருக்கும் இடத்துல இருந்து கையாளுவதற்கு/Access செய்வதற்க்கு .

உதாரணத்துக்கு , இப்போ உங்க நண்பரோட கணினியில ஏதோ ஒரு பிரட்சனை அத எப்படி சரி பண்றதுனு உங்க நண்பருக்கு தெரியல.ஆனா உங்களுக்கு தெரியும்.நீங்க Chat /message /phone call மூலமா உங்க நண்பருக்கு சொல்லியும் அவருக்கு சரிபண்ண தெரியலைன்னு வச்சுப்போம் அந்த சமயத்துல நீங்க இந்த மென்பொருள் மூலமா நீங்க இருக்குற இடத்துல இருந்து உங்க நண்பரோட கணினியை இயக்கி அந்த பிரச்சனையை என்னனு பாத்து சரிபண்ண முடிஞ்ச பிரச்சனைனா சரிபண்ணிடலாம்.

அல்லது இப்போ  நீங்க ஒரு File உங்க நண்பர்கிட்ட கேக்குறீங்க அது தன்னோட கணினியில எங்க இருக்குனு உங்க நண்பருக்கு தெரியலனு வச்சுப்போம் அத நீங்க இருக்குற இடத்துல இருந்து  உங்க நண்பரோட கணினியில தேடுவதன் மூலமா  உங்களுக்கு தேவையான File கண்டுபிடிச்சு உங்க கணினிக்கு அனுப்பிக்கலாம்.





இப்போ இந்த Team Viewer மென்பொருளை எப்படி உபயோகிக்குறதுன்னு பாப்போம்..

1. முதல்ல இந்த மென்பொருளை http://www.teamviewer.com/hi/index.aspx -என்ற தளத்துல இருந்து download செஞ்சுக்கோங்க.

2. இந்த மென்பொருளை உங்க கணினியில நிறுவுங்க( Install பண்ணுங்க).இப்போ இந்த மென்பொருள் உபயோக்க தயார்..

3. அடுத்து ,கணினியில் நிறுவிய இந்த மென்பொருளை Double Click  செய்யுங்க.

4. இப்போ வரும் window வில் Wait for Session   மற்றும் Create Session-னு ரெண்டு பிரிவை பாக்கலாம்.

5. இதுல  Wait for Session-ல இருக்குற Your ID மற்றும் Password தான் நம்ம கணினிக்கான ID மற்றும் Password... Create Session-ல இருக்குற Partner ID -என்பது நாம யாருடைய கணினியை Access செய்யப்போறோமோ அவங்க கணினியில தெரியுற இந்த மென்பொருளில் காட்டப்படும்  Your ID.உதாரணமா , நீங்க உங்க நண்பரோட கணினியை Access செய்யப்போறீங்கனா ,அவங்களும் கண்டிப்பா இந்த மென்பொருள் அவங்களுடைய கணினியில நிறுவியிருக்கணும்.அவங்க இந்த மென்பொருளை Double Click செஞ்சதும் அவங்க கணினியில காட்டப்படும் window வில் தெரியுற Wait for Session-ல இருக்குற Your ID தான் நீங்க இங்க  Partner ID-ஆக குடுக்கணும்.

7.அடுத்து நீங்க உங்க நண்பரோட கணினியை access செய்யப்போறீங்கனா ,உதாரணத்துக்கு உங்க நண்பர் என்ன என்ன File மற்றும் Folder வச்சுருக்காங்கன்னு பாக்கணும் அல்லது உங்க நபரோட கணினியில் இருக்கும் பிரச்சனையை சரிபண்ணனும்னா Remote Control-ஐ தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது உங்க நண்பரோட கணினியில் இருக்கும் File உங்களுக்கு வேணும் அதை உங்க கணினிக்கு அனுப்பிக்கனும்ணா File Transfer -ஐ  தேர்ந்தெடுக்கலாம்.

8.அடுத்து Connect to Partner பட்டன் கிளிக் பண்ணினதும் அடுத்து password கேக்கும் அதுவும் நீங்க access செய்யப்போகும் கணினில இருக்குற இந்த மென்பொருளின் விண்டோவுல தெரியுற  Password அதை நீங்க குடுக்கணும்.
(உங்க நண்பர் உங்களுக்கு அவருடைய  Your ID மற்றும் Password-ஐ உங்களுக்கு தெரியப்படுத்தணும் .அதேமாதிரி உங்க கணினியை உங்கள் நண்பர் access செய்யணும்னா நீங்க உங்க Your ID மற்றும் Password-ஐ உங்க நண்பருக்கு தெரியப்படுத்தணும் )

7.இப்போ உங்க கணினியில் இருந்து உங்க நண்பரோட கணினியை நீங்க access செய்யலாம் / File Transfer செய்யலாம்.

2 கருத்துகள்: