பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Monday, 30 June 2014

மழை வருமா வராதா ?நம்ம வானிலை மையத்துல இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய டோல் ஃப்ரீஎண்ணான  1800-180-1717-க்கு காலையில கிளம்பும்போதே  ஒரு போன்அடிச்சோம்னா போதும்  உங்கள் நகர்ல மழை பெய்ய வாய்ப்பிருக்கா , இல்லையானு  சொல்லிடுவாங்கலாம் .

மழை மட்டுமல்ல... அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலைனு  காலநிலை தொடர்பான எல்லா விஷயங்களுமே இந்த எண்ணில் கிடைக்குதாம் . ஆங்கிலம், இந்தி, தமிழ் மூன்று மொழிச் சேவையும்இருக்கு .

மொழியைநாமலே தேர்ந்தெடுத்தபின் எண் ஒன்றை அமுக்கினால், உள்ளூர் காலநிலை சொல்லப்படுமாம் . எண் இரண்டை அமுக்கினால்,நாம தெரிந்துக்கொள்ள விரும்பும் நகரத்தின் காலநிலையை அறியலாமாம் (அந்நகரின் STD code  தெரிஞ்சிருக்கனும் ).

Friday, 27 June 2014

அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவி

புயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.

டிரான்ஸ்பார்மரில் மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தியுள்ளோம். அதற்கு உதவும் நோக்கில், ட்ரான்ஸ்பார்மரிலிருந்து செல்லும் ஒவ்வொரு மின் கம்பியிலும் சென்சார்களை இணைத்துள்ளோம். இதன் மூலம் மின்கம்பிகளில் ஏதேனும் பழுது/அறுபட்ட நிலையிலிருந்தால் உடனடியாக சென்சார்கள் மூலம் கண்டறியப்பட்டு மைக்ரோ கண்ட்ரோலருக்கு தகவலை அனுப்பும். அதன் பின் மைக்ரோ கண்ட்ரோலர் தானாக செயல்பட்டு அதன் கட்டுப்பாட்டிலுள்ள ரிலே சுவிட்ச்சை அணைத்து விடும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு இடையே பாயும் மின்சாரம் தானாக நிறுத்தப்படுகிறது. எப்படி தெரு விளக்குகள் தானாக ஒளிர்ந்து மீண்டும் அணைகின்றதோ அதே போல்தான் இக்கருவியும் செயல்படுகிறது. மேலும் மைக்ரோ கண்ட்ரோலர் செயல்பட வெறும் 3.3 வோல்ட்ஸ் மின்சாரம் மட்டுமே தேவை" என்கிறார் மற்றொரு மாணவர் மணிவண்ணன்.

ஹரிஷங்கர் கூறும்போது, அனைத்து நேரங்களிலும் இக்கருவி தானாகச் செயல்படும் தன்மை உடையது. மைக்ரோ கண்ட்ரோலருடன் GSM மோடமும் பொருத்தியுள்ளதால் மின்கம்பி அறுபட்டுள்ளதை உடனடியாக சம்பந்தப்பட்ட லைன்மேனுக்கும் மற்ற உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கும் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து குறுந்தகவல் அனுப்பிவிடும். எங்கள் கருவியை டிரான்ஸ்பார்மரில் பொருத்த சுமார் 60,000 ரூபாய் வரை செலவு ஆகிறது. தற்போது மாதிரிக் கருவியை உருவாக்கியுள்ள எங்களுக்கு அரசு உதவினால் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பெரும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்" என்கிறார்.

தொடர்புக்கு : 96590 95472

                                             --நன்றி புதியதலைமுறை

Thursday, 26 June 2014

மகாபாரதத்தில் ஒரு காட்சி ...

மகாபாரதத்தில் ஒரு காட்சி ...


பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திருக்கும் கிருஷ்ணர் கிட்ட உதவி கேட்க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிடமும் கிருஷ்ணனை போய் பாருங்க..அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குறதை தவறாமல் நிறைவேத்துவார்னு சொல்லி அனுப்புறார்..

முதல் ஆளாக துரியோதனன் கிருஷ்ணரை பாக்க போய்டுறார் .கிருஷ்ணன் நித்திரையில் இருக்க அவர் தலைக்கு பக்கத்துல இருக்குற இரு இருக்கைகளில் ஒன்னுல உக்கார்ந்து கிருஷ்ணர் கண் திறக்குறதுக்காக காத்திருக்கார்.

அடுத்து வரும் அர்ஜுனன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் கிருஷ்ணரை பாக்குறார்..அவர் தலைக்கு பக்கத்துல ஒரு இருக்கை காலியா இருக்குறதையும் பார்க்குறார்.ஆனா அதுல உட்காராமல் கிருஷ்ணரின் பாதங்களுக்கு பக்கத்துல கீழ உக்கார்ந்து கிருஷ்ணர் கண் திறக்குறதுக்காக காத்திருக்கார்.

Wednesday, 25 June 2014

Alt + Number = Symbol

 'ந்யூமரிக் பேட்' -என்பது   கீபோர்டுல வலது பக்கத்துல இருக்குற 'நம்பர்கீ'-களை சொல்வாங்க..Alt கீ நம்ம எல்லாருக்குமே தெரியும் ..இந்த Alt கீ மற்றும் ந்யூமரிக் பேட்' ல இருக்குற எண்களை ஒரு சேர அதாவது ஒரே நேரத்துல அழுத்துவதன் மூலமா நாம பல சின்னங்களை (symbol ) கொண்டுவரமுடியும்..அது என்னனு பாப்போம் . Alt + 0153 - ™ - Trademark symbol

Alt + 0169 - © - Copyright symbol

Alt + 0174 - ® - Registered trademark symbol

Alt + 0176 - ° - Degree symbol

Alt + 0177 - ± - Plus or minus sign

Monday, 23 June 2014

விக்கலுக்கு காரணம் என்ன ?

நமக்கு பொதுவா சாப்பிடும் போது விக்கல் ஏற்படும் ..இது எதனால ஏற்படுதுனு தெரியுமா ?


ஒரு ஒரு வேளையும் நாம சாப்பிட குறைஞ்சது 20 நிமிஷமாவது எடுத்துக்கணும்.அப்போதான் நம்மோட உணவுப்பாதை நல்லபடியா வேலை செய்ய அது  உதவியா இருக்கும்.

நாம அவசர அவசரமா சாப்பிடும் போது வயிற்ருக்கும் நெஞ்சுக்கும் இடையில பாதுகாப்பா இருக்குற ஜவ்வு (டையாஃபர்ம்) மேல்பக்கமா வளைஞ்சு ஒட்டிக்கும்.

இந்த நிலை சில சமயம் வேற காரணங்களால்கூட ஏற்படலாம்.இதன் காரணமாக உடம்புல ஏற்படுற இயல்பான செயலையும் அதனால உண்டாகுற சத்தத்தையும் விக்கல்னு சொல்றோம்.

விக்கலை நிறுத்த உடனடியா தண்ணீர்/எதாவது பானத்தை  சீராக் குடிக்கணும் .மூச்சை முழுமையா இழுத்து மெதுவா விடனும் .


தொடர்ந்து 60 ஆண்டுகாலம் விக்கலால  சிரமப்பட்டவர் இருக்காறாம்.அவர் பேர் சார்லஸ்.அதேபோல இங்கிலாந்துல 24 வருஷமா தொடர்ந்து விக்கலால சிரமப்பட்டவரும் இருக்காறாம்.

அதனால தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டு மூணு  மணி நேரம் விக்கல் இருந்தா உடனடியா டாக்டர் கிட்ட போய் சரி பண்ணிடனும்னு சொல்றாங்க .

Sunday, 22 June 2014

16 பேறுகள்..!

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.சோடக லட்சுமி என்ற மகாலட்சுமி தேவி நமக்கு பதினாறு ரூபங்களில் காட்சி தருபவள். பெரியோர்கள் நம்மை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.., என்று வாழ்த்துவர். அந்த 16 என்ன என்று தெரிந்து கொள்ளுவோம் .


1. வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி,

2. நீண்ட ஆயுள்,

3. நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்,

4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம்,

5. உழைப்புக்கு தேவையான ஊதியம்,

6. நோயற்ற வாழ்க்கை,

7. எதற்கும் கலங்காத மனவலிமை,

8. அன்புள்ள கணவன் மனைவி,

9. அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்,

10.மேன்மேலும் வளரக்கூடிய புகழ்,

11. மாறாத வார்த்தை,

12. தடங்கலில்லாத வாழ்க்கை,

13. வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல்,

14. திறமையான குடும்ப நிர்வாகம்,

15. நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு,

16. பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

இந்தப் பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

Friday, 20 June 2014

இப்படியும் ஒருத்தர்

1991-ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை செய்தித்தாள்களையும் பல்வேறு வார, மாத இதழ்களையும் தொடர்ந்து படிப்பதோடு நில்லாமல் அவற்றைப் பாதுகாத்து பத்திரப்படுத்தி வருகிறார், சென்னை அசோக்நகரைச் சேர்ந்த விஸ்வநாதன். நாற்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 15,000-க்கும் மேற்பட்ட செய்தித்தாள் பிரசுரங்களை சேகரிச்சு வச்சுருக்காராம் . பொறியியல் பட்டதாரியான இவர், பாரத் பெட்ரோலியத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


40-க்கும் மேற்பட்ட தலைப்புகளாகப் பிரித்து செய்தித்தாள்களிலும் பல்வேறு வார, மாத இதழ்களிலும் வெளிவரும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான எல்லா செய்திகளையும் தினமும் தவறாமல் சேகரிக்க ஆரம்பித்து கடந்த 6 மாத காலமாக முடிந்தவரை சேகரித்த தகவல்களை கணினியில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறாராம் இவர்.

Wednesday, 18 June 2014

விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் !!!!!

காலக்கண்ணாடி என்ற வலைப்பக்கத்தில "விமானம் உருவான கதை"-னு பாத்ததும் ஆர்வமா படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்த அந்த படைப்பை அப்படியே உங்ககிட்ட ஷேர் பண்றேன்...
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...

மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.

Tuesday, 17 June 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13

சமீபத்தில் நடந்த "விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்" நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு "ப்ரைட் ஆஃப் தி சேனல்" எனும் விஜய் டிவியின் பெருமைக்குரிய அந்த விருதை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு விஜய் டிவி கொடுத்து கவுரவித்தது..


Monday, 16 June 2014

விஜய் டி.வி - கோபிநாத் - நீயா நானா - 6

நேற்றைய "நீயா நானா " தலைப்பு  "மகனை பெற்ற அம்மாக்கள் "  VS  " ப்ரைவசி எதிர்பார்க்கும் மருமகள்கள் "..

இந்த காலத்து பெண்கள் எப்படி இருக்கணும்னு நினைக்குறாங்க , அவங்களோட கல்யாணக் கனவுகள் எப்படி இருக்கு..மாமியாரை பத்தி என்ன நினைக்குறாங்க..எதுனால மாமியார் மருமகள் சண்டைகள் வருது , எதுனால பொண்ணுங்க தனிக்குடித்தனம் போறாங்கனு பல விஷயங்களை பேசினாங்க..ரொம்ப அழகா நல்லா போன இந்த தலைப்பின் கீழ் நடந்த விவாதத்துல இருந்து சிலது ...
* பொண்ணுங்ககிட்ட  எப்படியாப்பட்ட கணவன் வேணும்னு கேட்டதுக்கு "ஆர்யாமாதிரி வேணும் ,நிறையா செலவு பண்ணனும்,ஊரு சுத்தணும் ,  காஸ்ட்லி ட்ரெஸ் போடணும்னு ..வீடு அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு ஏகப்பட்டது சொன்னாங்க..அது எல்லாத்துலையும் இருந்து ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது சினிமா பாத்து பாத்து  நம்ம பொண்ணுங்க ரொம்ப வீணாகியிருக்காங்கனு..* ஒரு பையன் மட்டும் இருக்குற பெத்தவங்க பேசுறப்போ ,..தன் பையனை கல்யாணம் பண்ற பொண்ணு எங்க அவன பெத்த அப்பா அம்மாவான தங்களை கவனிச்சுக்காம தங்களுக்கு செய்யாம மனைவியை  மட்டுமோ அல்லது மனைவியின் குடும்பத்தையோ  கவனிச்சுப்பானோன்னு நினைக்குறது நியாயம்னா , ஒரே பொண்ணை பெத்த அம்மா அப்பா என்ன செய்வாங்க அப்போ?அந்த பொண்ணை விட்டா அவங்களுக்கு யார் இருக்கா?அந்த பொண்ணை படிக்கவைக்க தன்னோட சத்திக்கு மீறி செலவு செஞ்சிருப்பாங்களே அப்போ அதுக்காக அந்த பொண்ணு தன் அப்பா அம்மாவுக்கும் ஒரு தொகையை தன்னோட சம்பளத்துல இருந்து குடுக்கணும்னு நினைக்குறது தப்பில்லையேனு ,கேட்டது சரியான கேள்வியே...

Sunday, 15 June 2014

உங்க பவர்பாயின்ட் பிரசண்டேஷனை இன்டர்நெட் மூலமா எங்க இருந்து வேணும்னாலும் பாக்கலாம் ...

பவர்பாயின்ட் பிரசண்டேஷனை   இன்டர்நெட்ல எப்படி பயன்படுத்துறதுன்னு பாப்போம்..

1.முதல்ல நாமக்கு தேவையான பவர்பாயின்டை பிரசண்டேஷனை ஒப்பன் செஞ்சுக்கோங்க .

2.File மெனுவை கிளிக் பண்ணி 'Save As '  ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க


3. அடுத்து வர டயலாக் பாக்ஸ் -ல 'Save as Type '-ல 'web page ' -னு  செலக்ட் பண்ணிக்கோங்க 4. அதுக்கு கீழ இருக்குற 'Change Title '-ல நமக்கு என்ன title குடுக்கணுமோ அதை குடுக்கணும்.

Friday, 13 June 2014

மலைகளில் ஏன் கோவில் அமைக்கிறார்கள் ?

அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.??

- மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

- இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

- தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

- இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.ஏன் என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

Thursday, 12 June 2014

பறக்கும் ஊர்தி

UAV (Unmanned Aerial Vehicle) என்று அழைக்கப்படும் மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத சந்து பொந்துகளிலும் பறந்து செல்லும் திறன் உடைய ஊர்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .


இந்த UAV கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் உளவு பார்க்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்களின் சிறு வடிவம் போலக் காணப்படும் இந்த உளவு ஊர்திகள், தற்போது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த டீல் குரூப் எனும் வானியல் ஆராய்ச்சி மையம், வான்வெளித் துறையில் 11.6 பில்லியன்கள் செலவிடும் பெரும் துறையாக இது இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நம் நாட்டிலும் இலகுரக UAVக்கள் ராணுவம்,கடற்படை,விமானம் என்று முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காசிரங்கா தேசிய வனவிலங்குப் பூங்காவில் மிருகங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (DRDO), தேசிய வான்வெளி ஆய்வுக்கூடங்கள், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் (HAL) போன்ற அரசுத்துறை நிறுவனங்கள்தான் UAV உளவு ஊர்திகளை உருவாக்கி வந்தன. தற்போது தனியார் நிறுவனங்களும் இந்த சிறிய ரக ஊர்திகளைத் தயாரித்து வருகின்றன. மும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.

Wednesday, 11 June 2014

நாணயங்களை கணக்கிடும் உண்டியல் !!


ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம்.
ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

`டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது.
சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது.

இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும்.
தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை.இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.

Tuesday, 10 June 2014

கீரைகள்

திருநின்றவூர் (திருவள்ளூர் மாவட்டம்) அருகே பெரியபாளையம் செல்லும் வழியில் பாக்கம் எனும் கிராமத்தில் ;நல்ல கீரை இயற்கை விவசாயப் பண்ணை' உள்ளது . ஜெகன்னாதன், கௌதம், திருமலை, ராம், விசு, சிவக்குமார், அறிவரசன், சலோமி, ஏசுதாஸ், திருமலை, சாம், புனிதா, ராதாகிருஷ்ணன், பிரபாகரன் உள்ள 14 பேரின் உழைப்பில் பண்ணை இயங்குகிறது. இதில் 4 பேர் முழு நேர ஊழியர்கள். மீதமுள்ளவர்கள் வார இறுதி நாட்களில் இவர்களுடன் கூடிப் பயிர் செய்கின்றனர்.

இயற்கை முறைல கீரை பயிர் செய்றாங்க இவங்க.கீரை மட்டும் இல்லாம முருங்கை, வெண்டை, அவரை, கொத்தவரை, பூசணி, புடலை, சுரை, தர்பூசணி, பீர்க்கங்காய், பாகல், மிதிபாகல், தக்காளி, கத்தரி, மிளகாய்,தூய மல்லி, சீரகச் சம்பா, காட்டு யானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடுறாங்கலாம்.இப்போது 20 வகையான கீரைகளை இங்கு பயிரிடுறாங்கலாம். அதை 45 வகை வரை அதிகரிக்க வேண்டும். தவிர, மூலிகைகளையும் பயிரிடணும்னு நினைக்குறோம்னு சொல்றாங்க இந்த பண்ணையை நடத்துறவங்க.
தொடர்புக்கு: ஜெகன் - 99626 11767, கௌதம் - 98406 14128, திருமலை - 98849 62533

Monday, 9 June 2014

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 5

நேற்றைய "நீயா நானா"வின் தலைப்பு "திருநங்கைகள் VS பொதுமக்கள்"..


திருநங்கைகளை இந்த சமுதாயம் எப்படி பாக்குது...அவங்களுக்குள்ல  இருக்குற உணர்வுகள் என்ன? அவங்க உலகம் இருக்கு? அவங்க மனநிலைமை எப்படி இருக்கு ? அவங்களுக்குள்ல  இருக்குற இருக்குற பெண்மையை எப்படி உணருறாங்க?!!அவங்க எங்க எப்படி வாழுறாங்க?!! இந்த சமுதாயம் அவங்கள எப்படி எல்லாம் புறக்கணிக்குது!!?னு நிறையா விஷயங்களை பத்தி பேசினாங்க..

ரொம்ப அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்த அந்த முழு எபிசோட் இதோ ..இதே நீயா நானாவில் திருநங்கைகளை பத்தி "ஆணுக்குள் இருக்கும் பெண்மை" என்ற தலைப்புல 2013 ஏப்ரல் மாதத்துல ஒரு விவாதம் நடந்தது..அதை பத்தியும் நான் எழுதிருக்கேன் அப்போ..அந்த போஸ்ட்டின் லிங்க் இங்கே ..

ஆணுக்குள் இருக்கும் பெண்மை

Sunday, 8 June 2014

புற்றுநோய் பாதிப்பை ஆர்.என்.ஏ. மூலம் தெரிஞ்சுக்கலாம் ... !!

ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, ரத்தப் பரிசோதனை மூலம் கண்களைப் பாதிக்குற புற்றுநோயைக் கண்டு பிடிக்க முடியும்னு கண்டுபிடிசிருக்காங்க, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

இதனால, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிச்சு சிகிச்சை எடுத்துக்கறதுகான சாத்தியங்கள் அதிகரிசிருக்கு. கண்ல கட்டி இருக்குற இடத்தில இருக்குற ரத்தத்தைப் பரிசோதிச்சு , அதுல இருக்குற மைக்ரோ ஆர்என்ஏ (micro-RNA) அளவை வைச்சு புற்று நோய் பாதிப்பு இருக்காங்கறதை கண்டு பிடிக்க முடியும். 

‘‘கீமோதெரபி கதிரியக்க சிகிச்சையை எடுத்துக்குற நோயாளிக்கு, புற்றுநோய் பாதிப்பு எந்த அளவு இருக்குங்கறதை தெரிஞ்சு , அதுக்கேத்த  சிகிச்சையை தொடரவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்’’ -னு இந்த ஆராய்ச்சியின் திட்ட 
இயக்குநர் டாக்டர். எஸ். கிருஷ்ண குமார் சொல்லிருக்கார்

.

Friday, 6 June 2014

அக்பரும் பீர்பாலும் - பீர்பாலின் 50378 காக்கைகள்

அக்பர் : முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் .

அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.

பீர்பால் : 1528-ல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கல்பி என்னும் கிராமத்தில் பிறந்த பீர்பால் அக்பரது அவையில் ஒரு கவிஞராக , பாடகராக ,மன்னரின் ஆலோசகராக 1556-1568 வரை இருந்தவர்.


இனி அக்பர் மற்றும்  பீர்பாலின்  கதைகளை படிப்போம் ...


Thursday, 5 June 2014

யானைகள் - நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி


* நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.

* யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.

* யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

* ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.

* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.

Tuesday, 3 June 2014

ஐகான்களுக்கு இடையில இருக்கும் இடைவெளியை சரி செய்ய

சில பேர் டெஸ்க்டாப் -ல ஏகப்பட்ட ஐகான்கள் வச்சுருப்பாங்க .சில பேர் டெஸ்க்டாப் முழுசும் ஐகான்களா இருக்கும் .. இந்த ஐகான்களுக்கு இடையில இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தா நல்ல இருக்கும்னு தோணுதா ..தோணுச்சுனா உடனே செய்யல படுத்தி பாத்துடனும் ..எப்படின்னு பாப்போம் ..

1. டெஸ்க்டாப் மேல ரைட் கிளிக் பண்ணுங்க Properties போங்க

2. அதுல Appearance -னு ஒரு Tab இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க..

3 அடுத்து 'Advance' பட்டன் -ஐ கிளிக் பண்ணுங்க.

4. இங்க Item என்ற தலைப்புக்கு கீழ நிறையா ஆப்ஷன்களை பாக்கலாம்.அதுல Icon Spacing -னு இருக்கும் அதை செலக்ட் செஞ்சு அத பக்கத்துல size னு ஒரு பாக்ஸ் இருக்கும் அதுல நமக்கு தேவையான அளவை குடுத்தோம்னா Icon -களுக்கு இடைல இடைவெளி கிடைக்கும் ..

Sunday, 1 June 2014

நன்றி - தி ஹிந்து தமிழ்

'தி ஹிந்து தமிழ்' நாளிதழில் ஒரு விவாதக்களத்தில் வெளியான என்னுடைய கருத்து...

சிவப்பழகின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தைப் பற்றி ஒரு பதிப்பு பலமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்  (இதுவும் அழகுதான்) ..அதை அப்படியே இந்த விவாதக்களத்திற்கு அனுப்பியிருந்தேன்.அதில் குறிப்பிட்டுருந்த முக்கிய கருத்துக்களை மட்டும் எடுத்து அழகாக வெளியிட்டிருக்கிறார்கள்(the hindu).மோட்டர் வாகனச்சட்டமும் அபராதமும் ..தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக


1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5.மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6.அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7.குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .

8.மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11.அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12.காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17.போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine


                                              ---நன்றி FB