பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 16 ஜூன், 2014

விஜய் டி.வி - கோபிநாத் - நீயா நானா - 6

நேற்றைய "நீயா நானா " தலைப்பு  "மகனை பெற்ற அம்மாக்கள் "  VS  " ப்ரைவசி எதிர்பார்க்கும் மருமகள்கள் "..

இந்த காலத்து பெண்கள் எப்படி இருக்கணும்னு நினைக்குறாங்க , அவங்களோட கல்யாணக் கனவுகள் எப்படி இருக்கு..மாமியாரை பத்தி என்ன நினைக்குறாங்க..எதுனால மாமியார் மருமகள் சண்டைகள் வருது , எதுனால பொண்ணுங்க தனிக்குடித்தனம் போறாங்கனு பல விஷயங்களை பேசினாங்க..



ரொம்ப அழகா நல்லா போன இந்த தலைப்பின் கீழ் நடந்த விவாதத்துல இருந்து சிலது ...
* பொண்ணுங்ககிட்ட  எப்படியாப்பட்ட கணவன் வேணும்னு கேட்டதுக்கு "ஆர்யாமாதிரி வேணும் ,நிறையா செலவு பண்ணனும்,ஊரு சுத்தணும் ,  காஸ்ட்லி ட்ரெஸ் போடணும்னு ..வீடு அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு ஏகப்பட்டது சொன்னாங்க..அது எல்லாத்துலையும் இருந்து ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது சினிமா பாத்து பாத்து  நம்ம பொண்ணுங்க ரொம்ப வீணாகியிருக்காங்கனு..



* ஒரு பையன் மட்டும் இருக்குற பெத்தவங்க பேசுறப்போ ,..தன் பையனை கல்யாணம் பண்ற பொண்ணு எங்க அவன பெத்த அப்பா அம்மாவான தங்களை கவனிச்சுக்காம தங்களுக்கு செய்யாம மனைவியை  மட்டுமோ அல்லது மனைவியின் குடும்பத்தையோ  கவனிச்சுப்பானோன்னு நினைக்குறது நியாயம்னா , ஒரே பொண்ணை பெத்த அம்மா அப்பா என்ன செய்வாங்க அப்போ?அந்த பொண்ணை விட்டா அவங்களுக்கு யார் இருக்கா?அந்த பொண்ணை படிக்கவைக்க தன்னோட சத்திக்கு மீறி செலவு செஞ்சிருப்பாங்களே அப்போ அதுக்காக அந்த பொண்ணு தன் அப்பா அம்மாவுக்கும் ஒரு தொகையை தன்னோட சம்பளத்துல இருந்து குடுக்கணும்னு நினைக்குறது தப்பில்லையேனு ,கேட்டது சரியான கேள்வியே...


* தனக்கும் தன் கணவனுக்கும் இடையில ப்ரைவசி இல்லாத சூழல் கூட்டு குடும்பத்துல இருந்தா வருது அதுனாலதான் நாங்க தனிக்குடித்தனம் போகணும்னு நினைக்குறோம்,அதாவது  வீட்ல பெரியவங்க இருக்கும் போது தங்களால தன் கணவன்கிட்ட முழுவதும் சுதந்திரமா , தனக்கு பிடிச்ச விளையாட்டை ரசிக்குறது ,கட்டி பிடிக்குறது, முத்தம் குடுக்குறதுனு இதுமாதிரி  கொஞ்சம் நெருக்கமா இருக்க முடியலைனு பொண்ணுங்க சொன்னதுக்கு கோபி அவர்கள்  இந்த சின்ன சின்ன விஷயத்துக்காக இந்த முடிவு எடுப்பீங்களானு கேட்ட கேள்வி நியாயமே..

* தனிக்குடித்தனம் போற பொண்ணுங்க அவங்க கணவனை அப்படியே அம்மா வீட்டு பக்கம், அவங்க ஆளுங்கக்கிட்ட மட்டும் பேசி பழகி ஒரு கட்டத்துல மாமியார் வீட்டு பக்கமே போகாதபடி அல்லது அவங்க வராதபடி செய்யுறது ஏன்னு கேட்டதுக்கு , தன் அம்மாகிட்ட இருந்தா உரிமையா வேலைவாங்கலாம் அவங்கள..எதுனாலும் அவங்ககிட வெளிப்படையா பேசலாம் ஏன்னா அது எங்க அம்மானு பொண்ணுங்க சொல்றாங்க..ஏன்மா பொண்ணுங்களா ,இப்படி தானே அந்த பையன் இத்தனைவருஷம் அவங்க  அம்மாகிட்ட உரிமையா வெளிப்படையா இருந்து இருப்பாங்க. அவன உங்க அம்மா அப்பாகிட்ட அப்படி இருக்க சொல்லமுடியுமா உங்களால ?இல்ல அவங்கதான் அப்படி இருக்கமுடியுமா ?



* இந்த மாமியார்களும் இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமே ... தன்னமாதிரியே இருக்கணும்னு நினைக்குறது தப்பில்ல ஆனா தான் தன் மாமியார்கிட்ட எதிர்பார்த்து கிடைக்காதது எல்லாத்தையும் தன் மருமகளுக்கு கிடைக்க செய்யலாமே...

* இது தன் பையனோட வாழ்க்கை ..கொஞ்ச நாள் அவன் வாழ்க்கைனா என்னனு ,எப்படி இருக்கணும்னு.. எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கட்டும்னு இருக்கலாமே..

* பொண்ணுங்க நிஜமாவே நல்லா பேசினாங்க ..ஆனா பேசின எல்லாரும் குறிப்பிட்டு சொன்ன ஒன்னு என்னனா.. " நானும் வேலைக்கு போறேன் ..நானும் சம்பாதிக்குறேன் " ...ஏன்மா பொண்ணுங்களா ...சம்பாதிக்குறதால நீங்க இப்படி முடிவு எடுப்பீங்களா? எந்த தப்பும் பண்ணாத நிஜமாவே நல்ல மனசு இருக்குற பையனோட அம்மா அப்பா வேணாம்னா... அப்போ  அதே மாதிரி மனசு இருக்குற உங்களோட அம்மா அப்பாவும் வேணாமே..அவங்க மட்டும் எதுக்கு உங்களுக்கு ?..



*  கணவனுக்கும் மனைவிக்கும்  இடையில நடக்குற எல்லா விஷயத்துலையும் கணவனின்  அப்பா அம்மா மூக்க நுழைக்குறது பிடிக்கலைனு பொண்ணுங்க சொன்னாங்க.. அப்போ  பையனுக்கும் அவனோட அம்மா அப்பாவுக்கும் இடையில எவ்வளவோ விஷயம் இருக்கும் அதுல நீங்க மூக்க நுழைக்காம இருக்கணும் .. எத்தன பேர் அப்படி இருக்குறாங்க அல்லது இருக்கீங்க சொல்லுங்க?

* மாமியார் மாமனாரும் , ஏதோ பையனும்  மருமகளும் பேசுறாங்க..பிரச்சனைன்னு நம்மகிட்ட வரும்போது பாப்போம் அல்லது ஏதோ பிரச்சனை ஆகபோதுன்னு நமக்கு தெரிஞ்சா தலையிடலாம். இது அவங்க வாழ்க்கை எல்லாத்துலையும் தலையிடக்கூடாதுனு இருக்கலாமே நீங்க  ..பிள்ளைங்கள பெத்து வளத்துட்டா எப்பவும் நீங்க சொல்றதையே கேக்கணும் உங்ககிட்ட கேட்டுத்தான் எல்லாம் செய்யணும்னு நினைக்கவேண்டாமே..குறிப்பிட்ட வயசுக்கு மேல அவங்களுக்கும் எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்..தெரியலைனா தெரிஞ்சுக்கடும்னு விடலாமே..

*  கல்யாணம் பண்ணினா  நாங்க தனியாத்தான் இருப்போம்னு இன்னைக்கு நீங்க சொல்றீங்க இது அப்படியே வருங்காலத்துல உங்களுக்கும் நடக்கும்.25 வருஷம் கழிச்சு உங்களுக்கு வரும் மருமகள்ங்க உங்கள விட அதிகமா எதிர்பாப்பாங்க அப்போ நீங்க தனியாளா இருப்பீங்கன்னு உங்களுக்கு தோணல இல்ல...


இப்படி பலவிதமான விவாதங்கள் போனது இந்த வாரம் நீயா நானாவில்..இந்த சுவாரசியமானஎபிசோட்டின்  வீடியோ இங்கே குடுத்துருக்கேன் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக