பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Thursday, 17 July 2014

ஜிமெயில் account-ஐ logout செய்ய மறந்துட்டீங்களா?

பிரௌசிங் சென்டர்க்கு போயிட்டு  மெயில் செக் பண்ணுவோம் logout பண்றதுக்குள்ல  கரண்ட் போயிடும் அல்லது ஏதோ அவசரத்துல logout பண்ண மறந்துடுவோம்..

இந்த மாதிரி சமயத்துல நம்முடைய கணக்கை வேற யாராவது தவறா உபயோகிக்க வாய்ப்புகள் இருக்கு..

இதை எப்படி சரிபண்ணலாம்னு பாப்போம்...

1. ஜிமெயில் கணக்கை திறங்க..

2. உங்களுக்கு வந்திருக்கும் மெயில்களை காட்டும் பெட்டிக்கு கீழ Account activity நேரமானது காட்டப்படும்.அதுக்கு பக்கத்துல "Details " -னு இருக்கும் .அதை கிளிக் பண்ணுங்க.
3.இப்போ ஒரு புதிய 'பாப்அப் விண்டோ' திறக்கும்..அதுல நாம சமீபத்துல எப்போ எந்த இடத்துல இருந்து எந்த நேரத்துக்கு நம்முடைய ஜிமெயில் கணக்கை பாத்தோம்னு இருக்கும்.அதுக்கு மேல "Signout All Other Sessions"-நு இருக்கும் .அந்த பட்டன்-ஐ கிளிக் பண்ணினா நம்முடைய எல்லா session கணக்கும் Signout ஆகிடும்..
2 comments:

  1. ரொம்ப , ரொம்ப பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி .

    ReplyDelete