பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 7 அக்டோபர், 2014

இட்லி தோசை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது..


அரிசியையும் உளுந்தம் பருப்பையும் ஊறவச்சு அரைச்சு மறுநாள் காலைல இட்லி தோசையா சாப்பிடுறோம் இல்லையா இது சிறந்த சத்துணவுனு சமீபத்திய ஆய்வுல தெரிஞ்சிருக்கு.

அரிசியில உளுத்தம்ப் பருப்புல இருக்குற வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக செயல்படுது.

அமினோஅமிலம் மற்றும் திசுக்களை புதுப்பிக்குற லைசின் என்ற அமினோஅமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு  உதவுற காமா அமினோபட்ரிக் ன்ற அமினோஅமிலம்பத்து மடங்கும் அதிகரிக்குதாம்.



இதனால இட்லி தோசைல முன்னடினாள் இரவு ஊறவச்சு சாப்பிடும் கொண்டைக்கடலைல கிடைக்குறமாதிரி தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் கிடைக்குதாம்.

இட்லி, தோசை சாப்பிடும் போது கீரைவகைகலான முருங்கைக்காய் சாம்பார்,முருங்கக்கீரை பச்சடி,புதினா சட்னி,கொத்தமல்லி சட்னி இப்படி சேத்துக்கலாம் ஏன்னா கீரைகளில் இருக்குற வைட்டமின் -சி லைசின் அமிலம் உடம்புல பாதுகாப்பா இருக்க உதவுதாம்.

இட்லி, தோசைல இவ்ளோ சத்து இருக்குனு எப்போ பாத்தாலும் ,அதே நேரம்  அளவுக்கு அதிகமாவும் சாப்பிடக்கூடாது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக