பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சிறுத்தை


* சிறுத்தையை பத்தி தெரிஞ்ச மற்றும் தெரியாத சில விஷயங்களை தெரிஞ்சுப்போம்...

* சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும்.

* சிறுத்தைகள் வழுவழுப்பான, தங்க நிற மயிர்ப் போர்வையையும், அதன் மீது கறுப்புத் திட்டுகளையும் கொண்டவை.

* ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல். ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது.



* சிறுத்தையின் உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும். வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்ற சமநிலையை வால் தருகிறது.

* வளர்ந்த சிறுத்தைகள் தனியாக வாழக்கூடியவை. ஒவ்வொரு சிறுத்தையும் காட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்னொரு சிறுத்தை அந்த இடத்துக்குள் வருவதை விரும்பாது.

* சிறுத்தைகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் பெரும்பாலும் இரை தேடும்.

* வேட்டையாடிய விலங்கைச் சிறுத்தைகள் உயரமான மரத்தில் இழுத்துக்கொண்டு ஏறும். மற்ற விலங்குகள் உணவை உண்ணாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தனதுஇரையை இரண்டு, மூன்று நாட்கள்வைத்திருந்து உண்ணும். உணவு தீர்ந்த பிறகுதான் சிறுத்தைகள் மரத்திலிருந்து இறங்கும்.

* பெண் சிறுத்தைகள் ஒரே நேரத்தில்

* இரண்டு அல்லது மூன்று குட்டிகளை இடும். குட்டிக்கு இரண்டு வயதாகும்போது அது தனித்துவிடப்படும்.

* பெண் சிறுத்தை ஆண் இணையை ஈர்ப் பதற்குத் தனது உடல் மணத்தைத் தெரியப்படுத்த மரங்களில் உரசி, மணத்தை விட்டுச்செல்லும்.

* சிறுத்தையின் மீசை ரோமமும் எலும்புகளும் மருத்துவக் குணம் கொண்டவை என்ற நம்பிக்கை உள்ளது. அவற்றின் ரோமம், உடல் பாகங்களுக்காக ஆண்டுதோறும் நிறைய சிறுத்தைகள் உலகெங்கும் கொல்லப்படுகின்றன. அதனால் அருகிவரும் விலங்குகளில் ஒன்றாகச் சிறுத்தை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக