பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 20 ஜூன், 2015

புழுக்கம் அதிகமா இருந்தா மழை பெய்யுமா?


நாம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள சத்துப் பொருள்கள் உடம்புக்குள்ளே எரிக்கப்பட்டு ஆற்றலா மாற்றப்படுது. இது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும். அப்போது உடலின் ஏற்படும் கழிவுப் பொருள்களோட ஒரு பகுதி வியர்வையா வெளியேற்றப்படுது.

தோலின் வழியே வெளியேற்றப்படும் வியர்வை நீராவியா மாறுது. நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு (இதை ஈரப்பதம் என்று கணக்கிடுகிறார்கள்) குறைவா இருக்கும்போது, வியர்வை நீராவியாக மாறுவது வேகமாக நடக்கும்.

மிக அதிகமான அளவுல நீராவி மூலக்கூறுகள் காற்றுல கலந்திருந்தா, வியர்வை நீராவியா மாறுவது மெதுவாக நடக்கும். அந்த நேரத்தில்தான் நம் தோல் பகுதிகளில் வியர்வையின் பிசுபிசுப்பு அதிகமாகி புழுக்கமான சூழல் ஏற்படுது.

காற்றில் கலந்திருக்கும் நீராவி மூலக்கூறுகள்தான் சுருக்கமடைந்து மழைத் துளியாக மாறுது. நீராவி மூலக்கூறுகளின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சுகிட்டே போய், ஒரு பூரித அளவை (Saturated Level) அடையும்போது நீராவி மூலக்கூறுகள் சுருங்கி மழைத் துளியாக மாறும் நிகழ்வு நடைபெறும்.
இன்னிக்கு முதல்ல நமக்கு ஒரே புழுக்கமா இருந்துச்சு. அப்போ, நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகள் அதிகமா இருந்ததால, வியர்வை நீராவியாக மாறும் வேகம் குறைஞ்சு போய் பிசுபிசுப்பு ஏற்பட்டது.

நம்ம உடம்புல தெரியற இந்த உணர்வு, இன்னும் கொஞ்ச நேரத்துல காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு பூரித நிலையை எட்டி மழைத்துளியாக மாறப் போறதுக்கான அறிகுறி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக