பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 20 October 2015

கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்ற காரணம் !!

ஆரம்ப காலத்தில் சூரியன் நகர்வதை மையமாகக் கொண்டே கடிகாரத்தை உருவாக்கினார்கள். முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள்தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால் உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது.

ஒருவேளை நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள நாடுகளில் கடிகாரம் உருவாக்கியிருந்தால் அது வலமிருந்து இடமாகத்தான் சுழலும். இதனால்தான் சில அரேபிய, யூதக் கடிகாரங்கள் எதிர்த் திசையில் சுற்றுகின்றன. அரேபிய, ஹுப்ரு எழுத்துகள்கூட வலமிருந்து இடமாகவே எழுதப்படுகிறது .

No comments:

Post a Comment