பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 22 December 2015

வாங்க கேக்கலாம் ...

எம்எஸ்வேர்ட் ,PDF ஃபைல்,பவர் பாயிண்ட் ,இணையத்தளப்  பக்கங்கள் ,ஈமெயில் இது எல்லாத்துலையும் இருக்குற செய்தி பேச்சு வடிவத்துல இருந்தா நேரம் மிச்சம் பண்ணலாமேனு கூட சில பேருக்கு தோனும் இல்ல...அப்டியாப்பட்டவங்களுக்கு ஒரு இணையத்தளம் இருக்கு ...


Www.Spokentext.net ...இந்த இணையத்தளம் எழுத்து வடிவத்துல இருக்குறதை அப்டியே ஆண்/பெண் குரல்ல மாத்தி ஒலி வடிவத்துல நமக்கு தரும்..

இதுக்கு இந்த தளத்துல இலவச உறுப்பினராகி நமக்கு ஆடியோவா கேக்கவேண்டிய ஃபைல்லை குடுத்து ,குரல் மற்றும் ஒலியை தேர்வுசெஞ்சா போதும்..ஆடியோ  ஃபைல் கிடைச்சுடும்..இதை டவுன்லோட் பண்ணிக்கலாம் ..

Sunday, 20 December 2015

காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்றால் என்ன?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

Tuesday, 15 December 2015

எல் நினோவை பற்றிய தகவல்கள்!!

சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

Saturday, 5 December 2015

சென்னை: உணவு வேண்டுபவர்கள் தொடர்பு கொள்க...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்களால் உணவு மற்றும் உதவிப்பொருட்கள் உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணா நகரில் ஒவ்வொரு வேலைக்கும் (காலை, மதியம், இரவு) 5000 உணவு பொட்டலங்கள் தயார் செய்கின்றனர். இவர்களை தொடர்பு கொண்டு எந்த இடத்துக்கு உணவு வேண்டும் என்று கூறினால் அவர்களே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். அதனால் உணவு தேவை என்று தொடர்பு கொள்பவர்களுக்கு கீழே இருக்கும் தொடர்பு எண்ணை கொடுத்து உதவுங்கள்.

பெயர்: பாலா
இடம்: அண்ணா நகர்
தொலைப்பேசி எண்: 9952918699

கார்த்தி
தொலைப்பேசி எண்: 9840643633

நவீன்:
தொலைப்பேசி எண்: 8807777797

சதீஷ்
தொலைப்பேசி எண்: 9941084807

லோகேஷ்
தொலைப்பேசி எண்: 9791044503

Friday, 4 December 2015

வெள்ள நிவாரண நிதி..

வெள்ள நிவாரண நிதியாக வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் RJ பாலாஜி மற்றும் நடிகர் சித்தார்த் அவர்களால் மக்கள் உதவிக்காக துவங்கப்பட்ட இந்த வங்கி கணக்கை பயன்படுத்தலாம்.நமது பணம் நிச்சயமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையோடு...


மீட்பு படைக்கு உதவும் வகையில் எண்கள் அறிவிப்பு

மீட்பு படைக்கு உதவும் வகையில் எண்கள் அறிவிப்பு

கடற்படை, விமானப்படை, தரைப்படை என முப்படைகளும், மாநில அரசு அதிகாரிகளும், பேரிடர் மீட்பு அதிகாரிகளும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 080400010 00/11 வரை 12 எண்களில் பேசலாம். வாட்ஸ் ஆப்: 98806 55555 டெலிகிராம்: 72597 60333

பருவநிலை மாற்றம்

'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த,பெய்யப் போகின்ற கன மழைக்கு, '‪#‎எல்நினோ‬' என்ற பருவ நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்' என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறுகின்றன.... இது குறித்து வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக, 44 செ.மீட்டர் பெய்யும்... நடப்பு ஆண்டில், நவ.,1 முதல், 18 வரை, சராசரியாக, 3.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, சராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.... அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில், சென்னையில் சராசரி மழை, 10 செ.மீ., - பெய்தது, 44 செ.மீ., - இது, 329 சதவீதம் அதிகம்; காஞ்சிபுரத்தில் சராசரி மழை, 6 செ.மீ., - பெய்தது, 45 செ.மீ., - இது, 656 சதவீதம் அதிகம்; கடலுாரில் சராசரி மழை, 7 செ.மீ., - பெய்தது, 13 செ.மீ., - இது, 93 சதவீதம் கூடுதலாகும்.

மழை கூடுதலாக பெய்ய, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் உருவாகவில்லை. பசிபிக் கடல் பரப்பில், அக்டோபரில் நிலவும் வெப்பத்தின் அளவு, சராசரியை விட கூடுதலாக இருக்கும்போது, அதன் மீது கடல் காற்று மோதி, கடும் வெப்பத்தை குளிராக மாற்றுகிறது...

இந்த பருவ நிலை மாற்றம், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், கிறிஸ்துவின் பெயருடன் நினைவு கூர்ந்து, எல் நினோ என, ஸ்பெயின் மொழியில் பெயரிடப்பட்டு உள்ளது. இரண்டு முதல், ஒன்பது ஆண்டுகளுக்கு, ஒருமுறை, பசிபிக் கடல் பகுதியில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவது வழக்கம்.... அப்படி மாற்றம் ஏற்படும்போது, அந்த ஆண்டை, #எல்நினோ ஆண்டு என, அழைக்கின்றனர். 'நடப்பு ஆண்டில், பசிபிக் கடலில், சராசரி வெப்பத்தை விட, 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூடுதலாக பதிவாகி உள்ளது' என, ஐக்கிய நாடுகளின் கடல் மற்றும் மேற்பரப்பு நிர்வாகம் தெரிவிக்கிறது...