பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Sunday, 31 January 2016

இராமாயணத்தில் இராவணன் பயன்படுத்தியது எந்த வகை விமானம்.?


ராவணன் பற்றியும் அவருடைய விமானம் பற்றியும்  முத்துக்குமார் சுப்பு ரெட்டி என்பவர் FB-ல் பதிந்த தகவல்களை அப்படியே இங்கு பகிர்கிறேன்
அவருடைய பதிவில் இருந்து,

இராமாயணத்தில் இராவணன் பயன்படுத்தியது எந்த வகை விமானம்.?என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பை பற்றிய நமது வரலாறு மாற்றியமைக்கப்படவேண்டும். ஏனெனில் விமான ஓடுதளம் விமானத்திற்காகத்தானே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். பண்டைய காலத்திலேயே விமானங்கள் பற்றியச் செய்திகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே தெரியப்படுத்த விரும்புகிறேன். தென் அமெரிக்காவில் 2” நீளம் கொண்ட தங்கத்தால் ஆன சிலப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதன் சரியான காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் குறைந்தது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது மட்டும் உறுதி.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளில் சில பார்ப்பதற்கு இன்றைய நவீன விமானங்களின் உருவத்துடன் ஒத்துப்போகிறது. விமான தொழில்நுட்பவியலாளர்கள் 1997ல் இதன் அளவுகளை அப்படியே பெரிதாக்கி செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள். எஞ்சின் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் இணைத்தல் இது விமானத்திற்கான சரியான வடிவம்தான் என்று கூறினார்கள்.

சில மறுப்பாளர்கள் இது விமானத்தின் வடிவம் அல்ல, பறவை அல்லது மீனின் வடிவம் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இதனை ஏற்க மறுப்பவர்களும் வாயடைத்துபோகும் ஆதாரம் தான் எகிப்தில் கிடைத்தது.

எகிப்தில் உள்ள ஒரு கோவில் சுவரில் இருக்கும் கல்வெட்டில் ஹெலிகாப்டர், போர்விமானம், உளவுவிமானம், நீர்முழுகிக் கப்பல், பறக்கும் தட்டு என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் அளவில் தெளிவாக செதுக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எப்படி விமானங்கள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இங்கே ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ராமாயணகாலத்திலேயே (கிட்டத்தட்ட 17,000 வருடங்களுக்கு முன்பு) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராமாயணத்தில் பார்த்தோம். அன்றைய இலங்கையை ஆண்ட இராவணன் என்ற தமிழ் மன்னன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கோ, சீதையுடன் இலங்கைக்கு திரும்பிசெல்வதற்கோ இராவணன் எந்த சிரமமும் படவில்லை. ஆகாய மார்க்கமாக வந்து சென்றுள்ளார்.

அதற்காக அவர் பயன்படுத்திய விமானத்தை நினைக்கும் இடத்தில் தரையிறக்க முடியும், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செங்குத்தாக மேலே ஏறி பறக்க செய்ய முடியும். உண்மையில் அந்தவகைத் தொழில்நுட்பம் இன்றுவரை நம்மால் கண்டறியப்படாத ஒன்று. அப்படியானால் இராவணன் எவ்வளவு பெரிய அறிவியலாளராக இருந்திருக்க வேண்டும்? அந்தத் தகவலை ஏன் வரலாறு ஏந்திவரவில்லை? எந்த இங்கேதான் நம் மக்கள் கோட்டைவிட்டனர், இராவணனுக்கு பத்துத்தலை என்பதை எண்களின் அடிப்படையில் பக்கவாட்டில் பத்துதலைகளை அடுக்கி பார்த்து இராவணனை அரக்கனாக்கிவிட்டோம்.

உண்மையில் அந்த உவமைக்கு அதுதான் அர்த்தமா? உதாரணமாக அதிகம் பேசும் ஒருபெண்ணை “இவளுக்கு வாய்நீளம்” என்பார்கள், உண்மையில் அந்தப் பெண்ணின் வாய் நீளமாக இருக்காது அவள் அதிகம் பேசுகிறாள் என்பதையே குறிக்கவே அப்படி ஒரு உவமைச் சொல். அதேபோல பத்துத்தலை என்பது பத்துபேரின் சிந்தனைத் திறனை கொண்டவன் அல்லது சாதாரண மனிதனை போல பத்துமடங்கு புத்திசாலி என்பதை குறிக்கலாமல்லவா? அப்படியானால் இராவணனால் இப்படி ஒரு விமானத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியும். இங்கே வரலாற்றில் பிழையில்லை நம் புரிதலில்தான் பிரச்சனை.

பண்டைய விமானம் பற்றிய செய்தியே பலருக்கு நம்பமுடியாமல் இருக்கும், அடுத்து நாம் பார்க்கப்போகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிவீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் இன்று நேற்று செதுக்கப்பட்டதல்ல, மிகவும் பழமையானது.

நவீன அறிவியலுக்கும் இதற்கும் வெகுதூரம் அப்படி இருக்க இவ்வளவுகச்சிதமாக விண்வெளிவீரர் உருவத்தை எப்படி இவர்களால் உருவாக்கியிருக்கமுடியும். தலைக்கவசம், உடல்கவசம், முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், பின்புறம் ஆக்சிஜன் சிலிண்டர் என்று மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய விண்வெளிவீரர்களின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

மாயன் நாகரிக மக்களிடம் மனிதன் விண்வெளியில் பயணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிற்பக்கலையில் அதனைக் காணமுடிகிறது. ஒரு மனிதன் விண்வெளி ஓடத்தில் அமர்ந்திருப்பதைப் போல செதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல இறக்கையுடன் கூடிய மனிதர்கள் என்று புராணக்கதைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஸ்தவர்கள் அவர்களை இறைத்தூதர்கள் அல்லது தேவதைகள் என்று அழைக்கிறார்கள்.

இயற்கையாக அப்படியான உடலமைப்பு சாத்தியமில்லை. ஆனால் செயற்கையில் இறகுடன் கூடிய சிறிய விமானத்தை பொருத்தி பறக்கமுடியும் (Jetman). அந்த தேவதைகள் (வேற்றுக்கிரகவாசிகள்) இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?இந்துமதக் கடவுளான விஷ்ணு அவரது வாகனமான கழுகில் ஏறிப் பயணம் செய்வாராம், உண்மையில் கழுகு மனிதனை சுமந்துகொண்டு பறந்து செல்லமுடியுமா? என்றால் அதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை.

ஆனால் மனிதன் பயணிக்கும் விமானம் கழுகைப் போன்ற வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? அந்தப் படத்தில் இருப்பது ஜெர்மனின் நாசி உளவு விமானம், கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கழுகு போல் தோற்றமளிக்கும். பறந்துவந்தவர் எல்லா தொழில்நுட்பமும் அறிந்த கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசியாக இருந்தால் அவரால் இதனை உருவாக்கியிருக்க முடியும்.

சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.

நிறைய சந்தேகங்கள் நிறைந்த பதிவு இது.எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்.நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் முடிவு.

No comments:

Post a Comment