பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 27 ஜூலை, 2016

சிலவிஷயம் உங்களோடு

கபாலி படத்தோட டீஸர் எப்போ வந்ததோ அப்போ இருந்து எங்க பாத்தாலும் எதுல பாத்தாலும் எங்க கேட்டாலும் எதுல கேட்டாலும் கபாலி கபாலி  கபாலி-னு ஒரே கபாலி மேனியாவா இருந்தது..


எல்லா சமூக வலைத்தலளங்களும் கபாலி பத்தி ஏதாவது ஒரே செய்தியை தினம் தினம் வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க..கோடிக்கணக்கான ரசிகர்கள் தினம் தினம் திரு.ரஜினியை பத்தி ஏதாவது ஒரு  செய்தி வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க...ஒரு ஒரு நாளும் கபாலி பத்தி சுட சுட செய்தி வெளிவந்துக்கிட்டே இருந்தது. எல்லாத்துக்கும் மேல Air Asia விமானம் கபாலி பட போஸ்டர் ஒட்டி உலகத்தையே திரும்பி பாக்க வச்சாங்க.

ட்ரைலர்  மட்டும் 25 மில்லியன் வியூ -க்களை கடந்தது..உலகம் முழுக்க 30 நாடுகள்ல 10000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுது  . கபாலி திரைப்படம் உலகத்திலேயே  மிகப்பெரிய திரையரங்கான பிரான்ஸ்ன் Le Grand  Rex -ல திரையிடப்படுற  முதல் தமிழ் படம்னு பெருமையை பெறப்போகுது ..US-ல மட்டும் 300 திரையரங்குகளுக்கு மேல திரையிடப்படுது ..டிக்கெட் புக்கிங் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அதனை டிக்கெட்களும் வித்துடுச்சு.இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போறாங்க ...

இது எல்லாமே படம் வெளியாகுறத்துக்கு முன்னாடி ரசிகர்களோடு பல்ஸ் -ஐ எகிற வச்சது மட்டும் இல்லமா ஒட்டு மொத்த உலகத்தையும் யார் இந்த கபாலி-னு திரும்பி பாக்க வச்சது..

ஆனா படம் வெளியான முதல் நாளுளையே படம் சரியில்ல..படத்துல காமெடி இல்ல..இது ரஜினி படம் மாதிரி இல்ல..டைரக்டர் ரஞ்சித் சமூகத்தை பத்தி , தான்  சொல்லணும்னு நினைச்ச எல்லாத்தையும் ரஜினியின் வாயிலா சொல்லிருக்கார் அப்படி இப்படினு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் அள்ளிக்கிட்டு இருக்குறதும் இதே படம்தான்.


ஒரு விஷயம் புரியமாட்டேங்குது..இது எல்லாம் நிஜமாவே ரசிகர்கள் தான் சொல்றாங்களா?

நாங்க ஜாலியா ரெண்டு மணிநேரம் படம் பாத்து எங்க டென்ஷன் எல்லாத்தையும் மறக்கவரோம். காசு குடுத்து படம் பாக்குறோம். இங்கையும் வந்து படத்தை பாத்து டென்ஷன் ஆகி கதையை விட்டு வெளில வரமுடியுமா அதையே ரெண்டு நாள் நினைக்குறமாதிரி மனசுல ஆழமா பதிஞ்சுடுதுனு  நாம தான் சொல்றோம்.. சரினு commercial -ஆ படம் எடுத்தா என்ன படம் இது ?? கதையே இல்ல , 4 பாட்டு 3 சண்டைனு அங்க அங்க காமெடினு படம் போகுது .. படம் பாத்த உணர்வே இல்ல .மனசுல நிக்கல.நம்மாளுங்களுக்கு இப்போலாம் கதையை யோசிக்கவே தெரியலனும் நாமதான் சொல்றோம்.

ரஜினி எப்பப்பாரு commercial -ஆ நடிக்குறார்..அவரோட வயசுக்கு ஏத்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யமாட்றாரு.. இன்னும் ஹீரோயின்களோட மரத்தை சுத்தி டூயட் பாடிக்கிட்டே இருக்கார்.படங்கள் ஒரே மாதிரி இருக்கு , எப்பவும்போலவே  படத்துல காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார்னு ஏகப்பட்ட விமர்சனங்கள் சொன்னாங்க..சரினு ஒரு படத்துல டைரக்டர் சொல்றதை மட்டும் நடிச்சு தன்னோட வயசை அப்டியே வெளிப்படுத்தி மரத்தை சுத்தி  டூயட் பாடாம ஹீரோயினுக்கு முத்தம் குடுக்காமனு நடிச்சா இது தலைவர் படம் மாதிரி இல்ல ,காமெடி இல்ல, commercial -ஆ இல்ல, entertainment -ஆ இல்ல.. ஜாதி பத்தி,அரசியல் பத்தி,புரட்சி பேசுற வசனமா இருக்குனு சொல்றாங்க  ..

புதுசா வர டைரக்டர்களுக்கு வாய்ப்பை குடுக்கமாட்றார்  , safe -ஆ நடிச்சுக்கிறார்னு சொன்னாங்க  .சரினு ஒரு புது இயக்குனருக்கு வாய்ப்பை கொடுத்து  இது அவரோட கதை அவரோட படம்னு,  தன்னோட விருப்பத்தை படத்துல திணிக்காம எல்லாமே டைரக்டர் சொல்றதுதான்னு அவர் சொல்றமாதிரி நடிச்சுக்கொடுத்தா அதுக்கும் குறை சொல்றோம்..

ஒரு மனுஷனை எப்படித்தான் நடிக்கணும்னு எதிர்பாக்குறோம்?..அப்போ நாம கேட்ட மாதிரி commercial -ஆ entertainment  பண்ணின லிங்கா படத்தை ஏன் நல்லா ஓட வைக்கல??

ஒரு தயாரிப்பாளனுக்கு தான் காசு குடுத்து வாங்கின படத்தை நல்லா வசூல் ஆகவைக்கணும்னு நினைக்குறது என்ன தப்பு?? தன்னோட படத்தை அவர் எதுல வேணும்னாலும் விளம்பரம் பண்ண அவருக்கு உரிமை இருக்கு.. ஓரளவுக்கு பெயர் இருக்குற தயாரிப்பாளர்கள் கூட புதுமுக கதாபாத்திரங்கள் நடிச்சு, தான் வாங்கின படத்தையே 1000 தடவை டிவி-ல போட்டு விளம்பரம் படுத்துறாங்க.. ஒரு பெரிய தயாரிப்பாளர் தன்னோட படத்தை அதிகளவுல வசூலிக்க வைக்கணும் நிறையா பேருக்கு ரீச் ஆகணும்னு விளம்பரம் பண்றாங்க ..அவங்களால முடிஞ்சா ராக்கெட்ல கூட விளம்பரம் பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு..உலக அளவுல ஒருத்தமிழ் படம் ரீச் ஆகியிருக்கு..நம்ம தமிழ் படங்கள் மேல ஒரு எதிர்பார்ப்பும் மரியாதையும் வந்திருக்குனு எடுத்துக்காம நாம என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கோம்.

கதை கதைனு நாம நிஜமாவே எதை எதிர்பாக்குறோம்னு தெரியலையே..ரஜினி ரஜினினு  அவரோட படத்துல அவர்கிட்ட இருந்து நாம என்ன எதிர்பாக்குறோம்னு நமக்கு தெரியலையே.?!

ஆமா, என்னோட படத்தை முதல் நாளே முதல் ஷோவே பாத்தாகணும் நீங்கன்னு என்னைக்காவது எந்த நடிகராவது சொன்னாங்களா?ஆமா யாரு நம்மள ஒரு டிக்கெட்-ஐ 1000,2000,3000 கொடுத்து வாங்க சொன்னா?ஒரு நாளாவது  நாம குடுக்குற பணத்துக்கான விலையைத்தான் அந்த டிக்கெட்ல போட்ருக்காங்களானு பாத்துருக்கோமா??ஏன் அதிக விலை குடுத்து வாங்குறோம்?..ரசிகர்கள்னு நாம பண்றதுதானே அதுலாம்..டிக்கெட் விலை அதிகமா இருக்கு எங்களுக்கு வேணாம்னு நம்மால சொல்லமுடியலையே.. 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி அதுல 120 ரூபாய்னு போட்ருந்தா அதுக்கு என்ன அர்த்தம்னு நமக்கு தெரியாதா?120 ரூபாய்க்கான கணக்கை  தவிர மத்த பணத்துக்கான கணக்கை அவங்க காட்ட முடியாது அப்போ அது  கருப்பு பணமா அவங்களை போய்  சேருதுனு கூட நம்மால யோசிக்க முடியலையா??இதுல நம்ம மேல எந்த தப்புமே இல்லையா?? இதுக்கு நடிகர்கள் ஒன்னும் பண்ண முடியாதே..இதுக்கு  government தான் நடவடிக்கை எடுத்திருக்கனும்..திருட்டு VCD-ல பாக்கக் கூடாதுனு அந்த Site-யயே block பண்ணினாங்க இல்ல அதுமாதிரி இதையும் தடுத்திருக்கணும்..

ஓட்டு போட்டு நம்மள ஆட்சி செய்றவங்களை நாமதான் செலக்ட் பண்றோம் .. அப்போ அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையானதை நல்லதை நமக்கு சேரவேண்டியதை சரியா செய்ய வேண்டியது அவங்களா? நடிகர்களா?இல்ல நடிகர்கள் மேல அளவு கடந்த அன்பை வச்சுட்டு அவங்க படத்தை திருவிழா மாதிரி கொண்டாடிட்டு cutout, பாலாபிஷேகம், தேனாபிஷேகம்னு செஞ்சுட்டு ,ஆயிரக்கணக்குல பணத்தை குடுத்து டிக்கெட் வாங்கிட்டு ,நாங்க இவ்ளோ செய்றோம்ல  அதுக்கு பதிலா நீ எங்களுக்கு இது செய்யணும் அது செய்யணும்னு எதிர்பாத்து கேக்குறது நமக்கே அசிங்கமா தெரியலையா?? நாட்டுல வெள்ளம் வந்தா, மழை பேஞ்சா, வெயில் அடிச்சா நமக்கான உதவியை அரசாங்கம்  நமக்கு செய்யணும்னு எதிர்பாக்காம நமக்கு பிடிச்ச நடிகர்கள் நடிகைகள் செய்யணும்னு எதிர்பாக்குறது நமக்கே முட்டாள் தனமா தெரியலையா?

ஒருத்தங்களை தூக்கிவச்சு பேசவேண்டியது அவங்ககிட்ட இருந்து ஏதாவது எதிர்பாக்குறது,எதிர்பாத்தது கிடைக்கலைனா அப்டியே தூக்கிப் போட்டு உடைக்கவேண்டியது.. இந்த நடிகர் நடிச்ச படம்னா நல்லா படம் ஓடும், நல்லா லாபம் பாக்கலாம்னு வாங்கவேண்டியது நம்பிக்கைவெச்சு , ஓடலைனா உடனே நஷ்ட ஈடு கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது அசிங்கமா பேச வேண்டியது.. ஓடாத எல்லா படத்துக்கும் அப்படித்தான் நஷ்டஈடு கேக்குறாங்களா என்ன ?? சரி ரொம்ப நல்லா ஓடிச்சுனா அப்போ லாபத்துல ஒரு பங்க குடுக்குறாங்களா என்ன ??


நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களா இருக்கலாம் வெறியர்களா இருக்குறது நம்மோட தப்பு .. சினிமாவுல அவங்க என்ன செஞ்சாலும் அதுதான் உண்மைனு நினைக்குறது நம்மோட தப்பு.நம்ம வீட்ல ஆகுற செலவுக்கு நாம தான் உழைக்கணும்னு நினைக்கமா யாரவது உதவி பண்ணுவாங்களானு எதிர்பாத்து இருக்குறது நம்மோட தப்பு.. நமக்கு தேவையானதை நாம தான் உழைச்சு சம்பாதிக்கணும் .. எவ்வளவு சம்பளம் வாங்குறார் அவர் நமக்கு என்ன செஞ்சார்னு ஏன் எதிர்பாக்குறோம்?? இந்த வயசுலயும் உழைச்சு சம்பாதிக்கிறார்...உங்களுக்கு இது செய்வோம் அது செய்வோம்னு சொல்லி பேசி நம்மள ஏமாத்தி நமக்கு உரிமையானதை நமக்கு சேரவேண்டியதை நமக்கு சேரவிடாம பண்ணலயே ..

அவர் தனக்கு நல்லா dance ஆடத்தெரியும்னு சொன்னதில்லை,அட்டகாகாசமா நடிக்கத்தெரியும்னு சொன்னதில்லை இருந்தும் , அவருக்கு இவ்ளோ கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்குறதுக்கு காரணம் அவரோட எளிமை, அவரோட குணம்.அதுக்கான மரியாதைதான் இது.

உழைக்காம எல்லாமே நமக்கு இலவசமா யாரா குடுத்தா  இல்ல கிடைச்சா நல்லா இருக்கும் நமக்கு  ..


உண்மையான அன்புக்குறது எதையும் எதிர்பாக்காம கொடுக்குறதுதான் ..அதுவே நமக்கு தெரியல ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக