பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 24 August 2016

இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


ரியோ-வில் நடந்த 2016-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில badminton-ல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுல வெள்ளிப் பதக்கம் வென்றது நம்ம எல்லாருக்குமே தெரியும்..ரொம்ப சந்தோசம்..இந்தியாவுக்கே பெருமை .அவங்களுக்கு நம்மோட வாழ்த்துக்கள் .

ரெண்டு நாளுக்கு முன்னாடி நியூஸ்ல ஒன்னு பாத்தேன்..ஹைதாராபாத்ல பிறந்த சிந்து என்ன caste -னு கூகிள்-ல அதிகமா தேடப்பட்டுருக்குனு பாத்தப்போ நொந்தே போயிட்டேன்..ஆந்திராவை இரண்டு மாநிலங்களா பிரிச்சதால இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்னு ரெண்டு மாநிலத்தாரும் சண்டைப்போட்டுக்கிறதா கூட பாத்தேன்..

அடப்பாவிகளா !! யாராவது ஏதாவது சாதிச்சா அவங்க எந்த மொழி பேசுறவங்க , எந்த மாநிலத்துக்காரங்கனா பாப்பீங்க . இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஒரு பொண்ணை இந்தியனா மட்டும் பாக்க மாட்டீங்களா? ஏதாவது ஒன்னு சாதிச்சுட்டா உடனே தமிழன்டா , தெலுங்கன்டா , மலையாளிடா , கன்னடக் காரன்டா , குஜராத்திக்காரன்டா , மராத்திக்காரன்டானு நமக்குள்ள எப்பையுமே வேறுபாடுதான் இருக்கே தவிர ஒற்றுமைனு ஒன்னு இல்லையே.

நமக்குள்ள இல்லாத இந்த ஒற்றுமையை வச்சுத்தான் அந்தகாலத்துல தொழில் செய்ய நாட்டுக்குள்ள வந்த வெள்ளைக்காரன்  மொத்தமா நம்மள அடிமையாக்கி வச்சுருந்தாங்க.இன்னமும் நாம அப்படியேதானே இருக்கோம்..

என்னமோ அந்த பொண்ணுக்கு உங்கபையனை கல்யாணம் பண்ணித்தரப் போற மாதிரி caste ஏன்யா செக் பண்ணிவச்சுருக்கீங்க?

இது ஒரு பக்கம்னா , வெள்ளிப்பதக்கம் வாங்கின சிந்து அவர்களுக்கு,சாக்க்ஷி அவர்களுக்கு இவ்வளவு பணம் தரோம், அவ்ளோ பணம் தரோம், கார் தரோம், அரசு வேலை தரோம்,வீடு தரோம், lifelong travel பண்ண இலவச டிக்கெட் தரோம்னு இவ்ளோ பண்றீங்களே ,ஜெயிச்சாதான் வசதி பண்ணித்தருவீங்க? ஜெயிக்க வசதி பண்ணி தரமாட்டீங்க..

இப்போ இவ்ளோ பணம் கொடுக்குற நீங்க விளையாட்டு துறையில சாதிக்க கூடியவங்க யாரு , திறமை இருந்தும் வெளில வரமுடியாதவங்க யாரு ,  வறுமையில் வாடுற எவ்ளோ பேர் திறமை இருந்தும் வசதி இல்லாத காரணத்தால முன்னேற முடியாம இருக்காங்க  அவங்களுக்கு  உதவி பண்ணி அவங்கள மேல கொண்டுவருவோம் , அவங்கள ஊக்கப் படுத்தி முன்னேற வச்சு விளையாட்டுல ஜெயிக்க வைப்போம்னு இதுலாம் செய்ய தோணல இல்ல உங்களுக்கு??!

சரி இன்னொரு விஷயத்துக்கு வருவோம் , இப்படி சில பல வருஷத்துக்கு முன்னாடி ஜெயிச்சு பரிசு எல்லாம் வாங்கி பெருமை சேர்த்த சிலரோட  இன்றைய நிலைமை எவ்வளவு மோசமா இருக்குனும் படிக்கிறோம்..  அவ்ளோதான் அப்பறம் அவங்கள கண்டுக்க மாட்டோம் .. ஜெயிச்ச அப்போ மட்டும் தான் அவங்களுக்கு இருக்குறது எல்லாம் கொடுத்து பெருமை படுத்துறோம்ங்குற பேர்ல நம்மள உசத்திக் காட்டிக்குறது.. தோத்தாலும் இல்ல அவங்க வயசானாலும்/retired ஆனாலும் அவங்கள்லாம் கண்டுக்க மாட்டோம்..  ஆனா அரசியல்வாதிங்க மட்டும் ஜெயிச்சாலும் ரொம்ப ரொம்ப வசதியா இருப்பாங்க தோத்தாலும் வசதியா இருப்பாங்க..அவங்கமட்டும் ஒருதரம் ஜெயிச்சுட்டா போதும் வாழ்நாள் முழுசும் இல்ல அடுத்த தலைமுறை வரைக்கும் வசதியா, நல்லா இருப்பாங்க ..
ஆனா இதுமாதிரி சாதிச்சவங்க அந்த சமயத்துல மட்டும் தான் lime light-ல இருப்பாங்க..அப்பறம் காணாப்போயிடுவாங்க.

எல்லாத்துலயும் அரசியல் , எல்லாத்துலயும் ஊழல் , இதுல ஒரு நாட்டுக்காரங்கனு  எண்ணம் கூட நமக்கு வராது .அப்பறம் எப்படி .....???!!!

அவங்க இப்படி இருக்குறதால நாம இப்டி இருக்கோமா? இல்ல நாம இப்படி இருக்குறதை அவங்க சரியா use பண்ணிக்குறாங்களானு தெரியல.. ஆனா கடைசியில நஷ்டம் நமக்குதான்னு மட்டும் நமக்கு புரியமாட்டேங்குது .. என்னத்த சொல்ல . ??!!!இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


No comments:

Post a Comment