பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Monday, 30 January 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

Friday, 6 January 2017

நம்ம தோனி !!


கூல் கேப்டன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக்கிட்டாருனு படிச்சதும் எனக்கு அவரோட 2011 உலகக்கோப்பை போட்டி தான் நியாபகத்துக்கு வந்தது..கிரிக்கெட் பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.ஆனாலும் பேசிக் தெரியும் அதனால பாப்பேன்..2011 உலகக்கோப்பை முழுசா பாத்தேன்.தோனியை பத்தி நிறையா படிச்சிருக்கேன்.ஆனா அந்த மனுஷன் உசிரைக்கொடுத்து உழச்சதை அந்த மேட்ச் அப்போதான் பாத்தேன்..2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான  கடைசி போட்டி.

நான் ,அண்ணா, அம்மா ஆர்வமா பாக்க உக்காந்தோம்..இந்தியா பேட்டிங் பண்ணினப்போ ஆரம்பத்துல பொறுமையை சோதிக்குற அளவுக்கு இருந்தது , எப்போ சச்சின் அவுட் ஆனாரோ என் அண்ணனுக்கு நம்பிக்கை போய்டுச்சு..அட போங்கையா ... இனி இந்தியா ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணி தூங்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஆனாலும் நான் விடாம பாத்துக்கிட்டு இருந்தேன் .என்னால வேற வழியே இல்லாம என் அம்மாவும்  பாத்தாங்க ..

அடுத்து களத்துல இறங்கின வீராட் கோலி நல்லா விளையாடிகிட்டு இருந்தார்..என் அண்ணன் தூக்கத்துல இருந்து கண்ணு முழிச்சு பாத்தப்போ ஒரு அவுட் ... ச்ச்ச்...போங்கையானு சொல்லி மறுபடியும் தூங்க ஆரம்பிச்சாங்க..


அடுத்தது யார் விளையாடினதுனு  எனக்கு நியாபகம் இல்ல ஆனா என் அண்ணன் தூக்கத்துல இருந்து கண்ணு முழிச்சு பாத்தப்போ எல்லாம் ஒரு அவுட் ...

இப்போ,எனக்கு டென்ஷன்..என் அம்மாவுக்கும்....இவ்ளோ நேரம் இந்தியா ஜெயிக்கணும்னு மட்டும் வேண்டிகிட்டு இருந்த நான் இப்போ மேட்ச் முடிஞ்சதுக்கு அப்பறம் அண்ணன் எழுந்திரிக்கனும் அதுவரைக்கும் தூங்கனும்-னும் சேத்து  வேண்டிக்க ஆரம்பிச்சேன்...

நெனச்சது போலவே அண்ணன் நல்லா தூங்கிட்டாங்க ..இந்தியா 270 ரன் எடுத்து இருந்தது 4 விக்கெட் இழப்புக்கு.12 பந்துல 5 ரன் எடுத்தா உலகக்கோப்பை நமக்கு  .கூல் கேப்டன் 12 பால் இருக்கு கண்டிப்பா ஜெய்ச்சிடுவோம்னு நம்பிக்கை கொடுக்குறாரு.அடுத்த பந்து ஒரு ரன் எடுத்துருக்கோம்.11 பால் 4 ரன் எடுக்கணும் ..அதுலாம் எடுத்துடுவோம் , நீ வா தல நீ அடி தலனு மனதுக்குள்ள சொல்லிக்கிட்டு இருந்தேன்..இருந்தாலும் என் அண்னனை நா எழுப்பல .எங்க தோனியும் அவுட் ஆகிடுவாரோனு பயத்துல.அடுத்த பால் அடுச்சாறு பாரு சிக்ஸர் ...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..யேயேயேயேயேயேயேயேயே...நாம ஜெயிச்சுட்டோம்... 28 வருஷத்துக்கு அப்புறம் உலக கோப்பை நம்மகைல.எனக்கு தெரியும், கிரிக்கெட் பத்தி அதிகமா எதுவும் தெரியாத எனக்கே இப்படி இருந்தா ,கிரிக்கெட் வெறியரா இருக்குற  லச்சக்கணக்கானவங்க என்ன மாதிரி என்ன விட பலமடங்கு அதிகமா சந்தோஷமா எஸ்க்ஸைட்மென்ட்-ஆ இருப்பாங்கனு..சச்சின் அவுட் ஆகிட்டாரு அவ்ளோதான் நாம தோக்கப்போறோம்னு நினைச்சுட்டு இருந்த சமயத்துல அந்த மனுஷன் தோனி உசுரைக்கொடுத்து விளையாடினத பாத்தேன்.அவர் மேல இன்னும் அதிக மதிப்பு வந்தது..தோனி தோனி தோனி-னு நானும் மனசுல காத்திக்கிட்டே இருந்தேன்.

அப்போ அடிச்ச கைதட்டுல அலறியடிச்சுகிட்டு எந்திரிச்ச அண்ணன் முகத்துல ஏகப்பட்ட சந்தோஷம்..

உடனே ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் போன் கால் செஞ்சு சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டாரு...என் அத்தை மாமாவுக்கும் போன் கால் செஞ்சு செம்ம்ம்ம்ம மேட்ச் ..ஜெயிச்சோம்  இல்ல ..சூப்பர் சூப்பர்னு ஏக வசனங்கள் ...நானும் என் அம்மாவும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துகிட்டோம் , கண்ணு முழிச்சு பாத்தது நாம  , என்னவோ மேட்ச் முழுசா பாத்தமாதிரி இப்படி பேசுறாரேன்னு.

அதுக்கு அப்பறம் நான்  அண்ணன் கிட்ட இருந்து போன் பறிச்சு நடந்ததை சொல்லி கிண்டல் பண்ணவே என் அண்ணன் சிரிச்சு மழுப்பின அந்த நாள் இன்னைக்கும் என்னால மறக்க முடியாத நாள்..எல்லாருக்குமே மறக்க முடியாத மேட்ச்சா இருந்த இந்த 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் எனக்கும்  மறக்க முடியாத மேட்ச் ஆச்சு இன்னோர் வகைலையும் ...