பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

இந்தியா-பெருமைகளும் சில அதிர்ச்சிகளும்


பெருமை :

இரைப்பை ,உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனைகளில் 14 புதிய அறுவை சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து உள்ளார் சென்னை அரசு பொது மருத்துவமனை திர.சந்திரமோகன்.

அதாவது அமிலம் குடிச்சுட்டு சாப்பிடவே முடியாதவங்கள சாப்பிட வைக்க செய்ய கூடிய ஆபரேஷன் பல மணி நேரம்  நீடிக்க கூடியதாம்.ஏன்னா இரைப்பை ,உணவுக்குழாய் ரொம்ப மோசமா பாதிச்சு இருந்தா வாயில இருந்து உணவு சிறுகுடல்-ல போய் சேறாதாம் .இத சரி பண்ண பெருங்குடலின் ஒரு பகுதியை எடுத்து நேர கழுத்து வர கொண்டுவந்து சிறுகுடலுக்கு பதிலா   வைப்பாங்களாம்.இந்த மாதிரி சமயத்துல பெருங்குடலுக்கு ரத்த ஓட்டம் வயித்துல இருந்து தான் கிடைக்குமாம்.இது மாதிரி கஷ்டமான ஆபரேஷன் சம்மந்தமா 14  புதிய அறுவை சிகிச்சை முறைகளை கண்டுபிடிச்சு இருக்காருங்க நம்ம Dr .அடித்தட்டு மக்கள் கிட்ட சுகாதார விழிபுனர்வ ஏற்படுத்துவதில் அக்கறைய செஞ்சுகிட்டு இருக்காராம் .

                            --நெஜமாவே பெரும பட வேண்டிய விஷயம் தானே




ஈராக் பெண்ணுக்கு 18 வருஷத்துக்கு அப்பறம் இழந்த பார்வையை மீட்டு குடுத்து இருக்கார் டாக்டர் அமர் அகர்வால் .கண் மருதுவச்ஜ்கிசை மட்டும் இல்லாம தொடர்ந்து ஆராட்சியிலும் ஈடுபட்டுள்ள டாக்டர்.அமர் கடந்த 1999-ம் ஆண்டு மைக்ரோ  பகோவித் என்ற 0.7 மி.மீ மெல்லிய துளையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் முறையை கண்டுபிடித்தார்.2008-ம்  ஆண்டு ஜனவரி  மாதம் உலகின் முதலாவது  குளூட் இன்ட்ராகுளர் லென்ஸ் இம்ப்பிளான்ட் என்ற அவரே கண்டுபிடிதபுதிய தொளில்நுட்பத்தில் 4 வயது குழந்தைக்கு செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது .அதற்கடுத்த ஆண்டு 4 மாதக் குழந்தையின் கார்னியா கோளாறை சரி செய்ய ஆண்ட்ரியா செக்மென்ட் ஐ டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை உலகில் முதல் முறையாக செய்தவர்.டாக்டர்.அமர் கண்டுபிடித்த தொளில்நுட்ட்பங்கள் சர்வதேச அளவில் கண் டாக்டர்களால் பின்பற்றப்படுகின்றன .



அதிர்ச்சி :

          சமீபத்துல பெண்கள் வாழ தகுதியான நாடு எது எது னு பட்டியல் வெளியிட்டு இருக்காங்க .அதுல 5முதல்  இடாத கனடா,ஜெர்மனி,பிரிட்டன்,ஆஸ்திரேலியா ,பிரான்ஸ் நாடு பிடிசுயருக்காம்.இந்தியாவுக்கு இதுல கடைசி இடம் தானாம் .2011 -ல உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான,பாதுகாப்பில்லாத நாடு பட்டியல் வெளியிட்டு இருக்காங்க.அதுல 4 இந்தியாவுக்கு வது இடமாம் .

                          --சமீபத்துல பெண்களுக்கு நடந்த சில பாலியல் வன்முறைகளை  பாக்கும்போது இந்த பட்டியல் உண்மைதான் நு தோணுது.ஒரு வார நாளிதழில் இருந்து 

சமீபத்துல டெல்லில ஒரு மருத்துவ கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவதத்தை பாக்கும் போது எங்க போகுது இந்த சமுதாயம்னு தெரியல.ஒரே ஆறுதல் தர விஷயம் இப்போவாவது நாம எல்லாரும் ஒன்னு சேந்து இந்தமாதிரி அநியாயம் மறுபடியும் நடக்காம அப்படி செய்றவங்களை கடுமையா தண்டிக்கணும்னு போராடறது நல்ல விஷயம்.இப்படி போராடுறதுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கணும். சும்மா சாதாரண தண்டனை எல்லாம் தரக்கூடாது.அப்பறம் விவேக் சார் ஒரு படத்துல காமெடி பண்ணி இருப்பார் , இந்த பொண்ணை வீணாக்கினதுக்கு 1000 ரூபாய் அபராதம்னு தீர்ப்பு சொல்றதுக்கு அதையும் போன மாசமே கட்டிட்டேன்னு சொல்வான் ஒருத்தன்,அதுக்கு 'ஒ அட்வான்ஸ் புகிங்க்ல ரேப் பண்றியாடானு' கேப்பாரே அப்படி நடக்கும்.அதனால தண்டனை கடுமையா இருக்கணும்.இனி ஒரு ஒருத்தனும் பயப்படணும். 

5 கருத்துகள்: